ரோசம்மா புன்னூசு
ரோசம்மா புன்னூசு (Rosamma Punnoose) (12 மே 1913 - 28 திசம்பர் 2013) ஓர் இந்திய விடுதலை இயக்க ஆர்வலரும், அரசியல்வாதியும், வழக்கறிஞருமாவார். கேரள சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவியேற்ற முதல் நபர் இவர்தான். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகிய இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினருமாவார். 1958இல் சட்டமன்றத்திற்கு நடந்த முதல் இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவராவார். மேலும், கேரள சட்டமன்றத்தின் முதல் தற்காலிக சபாநாயகராகவும் ரோசம்மா இருந்துள்ளார்.
ரோசம்மா புன்னூசு | |
---|---|
Member of the சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றம் தேவிகுளம் | |
பதவியில் 1957–1959 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | சுந்தரம் முருகண்டி |
Member of the கேரள சட்டமன்றம் சட்டமன்றம் ஆலப்புழா | |
பதவியில் 1987–1991 | |
முன்னையவர் | கே. பி. இராமசந்திரன் நாயர் |
பின்னவர் | கே. பி. இராமசந்திரன் நாயர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரோசம்மா செரியன் 12 மே 1913 கஞ்சிரப்பள்ளி, திருவிதாங்கூர் |
இறப்பு | 28 திசம்பர் 2013 சலாலா, ஓமான் | (அகவை 100)
இளைப்பாறுமிடம் | பத்தனம்திட்டா மாவட்டம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | திருவிதாங்கூர் மாநில காங்கிரசு (1938–48) |
துணைவர்(கள்) | பி. டி. புன்னூசு (தி. 1946; இற. 1971) |
பிள்ளைகள் | 1 மகனும், 1 மகளும் |
பெற்றோர் |
|
உறவினர் | அக்கம்மா செரியன் (சகோதரி) |
முன்னாள் கல்லூரி | டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுரோசம்மா, 12 மே 1913 அன்று திருவாங்கூர் கஞ்சிரப்பள்ளியில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் கஞ்சிரப்பள்ளி கரிப்பபரம்பிள் தோமன் செரியன் - பைப்பாடு புன்னக்குடி அன்னம்மா ஆகியோரின் நான்காவது குழந்தையாக பிறந்தார்.[1][2] இவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.[3][4]
திருமணம்
தொகுஇவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவரான பி. டி. புன்னூசு என்பவரை 1946 இல் மணந்தார். புன்னூசு ஒரு மார்த்தோமா சிரியர். இவர் ஒரு மார்த்தோமா சிரியர். ஒரு கத்தோலிக்கப் பெண்ணுக்கும் மார்த்தோமா ஆணுக்கும் இடையில் எந்தத் திருமணமும் அப்பகுதியில் நடந்ததில்லை. இது தவிர, ரோசம்மாவின் குடும்பம் இந்திய தேசிய காங்கிரசை ஆதரித்தது. மேலும் அவர் ஒரு பொதுவுடைமைவாதியை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அந்த நேரத்தில் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக அடக்குமுறை நடத்தும் காவதுறையினரும் அதிகாரிகளும் இவரைத் தேடி வந்தனர். தம்பதிகளுக்கு இடையேயான அனைத்து கிறிஸ்தவ திருமணங்களையும் போல, அந்த நேரத்தில், இருவரும் கொச்சி தேவாலயத்தில் திருத்தந்தையின் சிறப்பு ஒப்புதல் கடிதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.[1]
தொழில்
தொகுஇவர், தனது மூத்த சகோதரியும் சுதந்திர ஆர்வலருமான அக்கம்மா செரியனால்[1][5] ஈர்க்கப்பட்டு 1938இல் திருவிதாங்கூர் மாநில காங்கிரசில் சேர்ந்ததன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சகோதரிகள் இருவரும் 1939இல் ஆங்கிலேயர்களால் பூஜாப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.[4] மூன்று வருடங்கள் கழித்து ரோசம்மா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[5]
ரோசம்மா 1948 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். 1957இல் கேரள மாநிலத்துக்கு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் , தேவிகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] இவரது கணவர் புன்னூசு 1951 பொதுத் தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 1957 பொதுத் தேர்தலிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இது கேரள அரசியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கணவன் மற்றும் மனைவியின் அரிதான நிகழ்வைக் குறிக்கிறது.[6][5][7] முதலில் பதவியேற்ற சட்டமன்ற உறுப்பினராகவும்[5] ஆனார். இவர் சட்டமன்றத்தின் முதல் தற்காலிக சபாநாயகராக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். [4] இருப்பினும், நீதிமன்றத் தலையீட்டைத் தொடர்ந்து ரோசம்மா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். இருப்பினும் 1958இல் சட்டமன்றத்திற்கு நடந்த முதல் இடைத்தேர்தலில் அதை மீண்டும் அதே இடத்தில் வெற்றி பெற்றார்.[2]
1964 ல் கட்சி பிளவு காரணமாக இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசம்) தோன்றியபோது ரோசம்மா இந்தியப் பொதுவுடைமைக் கட்சியுடனே இருந்தார். இவர் 1982 சட்டமன்றத் தேர்தலில் ஆலப்புழா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 1987 தேர்தலில், ரோஸம்மா அதே தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]
இவர் கேரள மகளிர் சங்கத்தின் தலைவராகவும் (1969-83), தோட்டக் கழகத்தின் தலைவராகவும் (1964-69), வீட்டுவசதி வாரியத்தின் தலைவராகவும் (1975-78), இரப்பர் வாரியத்தின் உறுப்பினராகவும் 10 ஆண்டுகள் இருந்தார்.[5] இவர் கேரளா மகளிர் ஆணையத்தின் தலைவராக 1993 முதல் 1998 வரை இருந்தார்.[4]
இறப்பு
தொகுதனது மகன் தாமஸ் புன்னூசுடன் ஓமானின் சலாலாவில் வசித்த வந்த ரோசம்மா 28 திசம்பர் 2013 அன்று இறந்தார். இவரது மகள் கீதா ஜேக்கப், அபுதாபியில் வசித்து வந்தார். இவரது உடல் திருவல்லாவுக்கு அருகில் உள்ள பமலாவில் உள்ள இவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், இறுதிச் சடங்கு 30 திசம்பர் 2013 அன்று திருவல்லாவுக்கு அருகிலுள்ள வாரிக்காட்டில் உள்ள சேகியோன் மார்த்தோமா தேவாலயத்தில் நடைபெற்றது.[5][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Rosamma Punnose is no more". Deccan Chronicle. 29 December 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ 2.0 2.1 "Rosamma Punnoose passes away in Oman". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ Mathew, K. M. (25 October 2015). "29". The Eighth Ring: An Autobiography (in ஆங்கிலம்). Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789352140442. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "Kerala's 'first legislator' Rosamma Punnoose passes away". Daily News & Analysis. 28 December 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Communist Legend Rosamma No More". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ Jeffrey, Robin (27 July 2016). Politics, Women and Well-Being: How Kerala became 'a Model' (in ஆங்கிலம்). Springer. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781349122523. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ "Members Bioprofile". 164.100.47.132. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Mathew, Roy. "Kerala Assembly Election Results 1987: ALLEPPEY- Rosamma Punnoose". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.