ரோயா ரகுமானி
ரோயா ரக்மானி (Roya Rahmani) (பிறப்பு மே 1978) ஆப்கானித்தான் இராசதந்திரி ஆவார். இவர் அமெரிக்காவிற்கான ஆப்கானித்தானின் முதல் பெண் தூதராகவும், மெக்சிக்கோ, அர்ஜென்டினா, கொலம்பியா மற்றும் டொமினிக்கன் குடியரசின் குடியுரிமை இல்லாத தூதராகவும் திசம்பர் 2018 முதல் சூலை 2021 வரை பணியாற்றியுள்ளார்.[1] 2016 முதல் 2018 வரை, இவர் இந்தோனேசியாவுக்கான ஆப்கானித்தானின் முதல் பெண் தூதராகவும் , தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் முதல் தூதராகவும், சிங்கப்பூருக்கான குடியுரிமை இல்லாத தூதராகவும் பணியாற்றினார்.[1]
ரோயா ரக்மானி | |
---|---|
அமெரிக்காவிற்கான ஆப்கானித்தானின் முதல் பெண் தூதர் | |
பதவியில் 14 திசம்பர் 2018 – 13 சூலை 2021 | |
குடியரசுத் தலைவர் | அசரஃப் கனி அகமத்சய் |
முன்னையவர் | அப்துல்லா மோகிப் |
பின்னவர் | அதேலா ராசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1978 (அகவை 45–46) காபுல், ஆப்கானித்தான் குடியரசு |
முன்னாள் கல்லூரி | மக்கில் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) கொலம்பியா பல்கலைக்கழகம் (பொது நிர்வாகத்தின் முதுநிலை) |
முன்னதாக, இவர் ஆப்கானித்தானின் கல்வி அமைச்சகத்தில் திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டு ஆலோசகராக (2011) பணியாற்றினார்.[1] பின்னர் வெளியுறவு அமைச்சகத்தில் சேர்ந்தார். முதலில் துணை வெளியுறவு அமைச்சரின் மூத்த ஆலோசகராகவும் (2011), பின்னர் பிராந்திய ஒத்துழைப்பு முயற்சிகளின் தலைமை இயக்குநராகச் (2012-2016) சேர்ந்தார்.[1]
அரசாங்கத்தில் நுழைவதற்கு முன்பு, இவர் பல இலாப நோக்கற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார். இது முதன்மையாக பெண்களின் உரிமைகள் மற்றும் கல்வியில் கவனம் செலுத்தியது.[2] 2003 இல் மக்கில் பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலில் இளங்கலைப் பட்டமும், 2009 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் மற்றும் சர்வதேச சட்டத்தில் [2] முதுநிலை பட்டமும் பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
தொகுரோயா ரக்மானி 1978 இல் காபூலில் [2] சோவியத் துருப்புக்கள் ஆப்கானித்தானை ஆக்கிரமிப்பதற்கு ஒரு வருடம் முன்பு பிறந்தார். 1989இல் சோவியத் வெளியேறிய பிறகு, நாடு உள்நாட்டுப் போரில் இறங்கியது. ஏவுகணைகள் நகரைத் தாக்கியதால் இவரது பள்ளி பல மாதங்களாக மூடப்பட்டது.[3] 1993இல், இவரது குடும்பம் பாக்கித்தானுக்கு தப்பிச் சென்றது. இவள் நினைவுகூர்கிறார் "90களில் தொடங்கி, பஞ்சமும் வறட்சியும் இருந்தது. 1992-96 உள்நாட்டுப் போரின்போது, நாங்கள் உண்மையில் எங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டோம். இது எங்கள் வாழ்க்கையின் கடைசி இரவு என்று நினைத்து, எங்கள் குடும்பம் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்ததை நான் நினைவில் கொள்கிறேன்.[3]
ஒருமுறை பெசாவரில், இவர் சவுதி அரேபியா நிதியுதவி பெற்ற அகதிகளுக்கான பள்ளியில் பயின்றார். பின்னர் இவர் கூட்ட நெரிசல் காரணமாக ஒரு முழு பள்ளி ஆண்டு முழுவதும் கூரையில் படித்ததை நினைவு கூர்ந்தார்.[2] ரக்மானி தனது அனுபவங்களைப் பற்றி கூறினார், "ஆப்கானித்தான் பெண்ணாக, எனது மற்ற கூட்டாளிகளைப் போலவே, எங்களிடமிருந்தும் சிறந்ததை உருவாக்க நாங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். எனவே நிச்சயமற்ற தன்மைதான் நம் வாழ்வின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்தியது. " [2] தன் இளமையின் அனுபவங்கள், "உன்னிடம் இருப்பதைச் சிறப்பாகச் செய்" என்ற வாழ்நாள் முழக்கத்திற்கு இட்டுச் சென்றதாக சொல்கிறார்.[1]
ரக்மானி 1998இல் காபூலுக்குத் திரும்பினார். ஆனால் தலிபான்களுக்குத் தேவையான புர்கா அணிந்து வீட்டை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். [2] 1999ஆம் ஆண்டில், கனடாவின் உலக பல்கலைக்கழக சேவையிலிருந்து உதவித்தொகையைப் பெற்றார். மக்கில் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு இவர் மென்பொருள் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.[2] 2004இல் பட்டம் பெற்ற பிறகு, ஆப்கானித்தானுக்குத் திரும்பினார். பின்னர், பல்வேறு இலாப நோக்கற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார், இறுதியில் தனது தொழில் கவனத்தை மாற்றி பள்ளிக்குத் திரும்ப முடிவு செய்தார்.[4]
சொந்த வாழ்க்கை
தொகுஇவருக்கு திருமணமாகி 2014இல் ஒரு மகள் பிறந்தார்.[2] இவர் ஒரு முஸ்லிம்.[5] ஆனாலும், தாரி, பஷ்தூ ஆங்கிலம் ஆகியவற்றை சரளமாகப் பேசுகிறார். உருது மற்றும் பிரெஞ்சு மொழி பற்றிய அடிப்படை புரிதலையும் கொண்டவர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Biography". Embassy of the Islamic Republic of Afghanistan. Archived from the original on 2020-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-04-07.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Dunatov, Gabriel (March 8, 2019). "Afghan Ambassador Roya Rahmani: 'We Will Not Be Going Back To The Time Prior To 2001'". NPR. பார்க்கப்பட்ட நாள் May 24, 2019.
- ↑ 3.0 3.1 Luxner, Larry (2019-12-03). "Afghanistan's First Female Ambassador to U.S. Insists Peace Is Still Possible". washdiplomat.com.
- ↑ 4.0 4.1 Luxner, Larry (2019-12-03). "Afghanistan's First Female Ambassador to U.S. Insists Peace Is Still Possible". washdiplomat.com.Luxner, Larry (2019-12-03). "Afghanistan's First Female Ambassador to U.S. Insists Peace Is Still Possible". washdiplomat.com.
- ↑ "Afghanistan is not about guns, dust and burqas". The Jakarta Post. July 1, 2016. பார்க்கப்பட்ட நாள் May 25, 2019.