லெனின் பரிசு

லெனின் பரிசு (உருசியம்: Ле́нинская пре́мия, லெனின்சுக்கயா பிரேமியா) அறிவியல், இலக்கியம், கலைகள், கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சாதனைகளுக்காக சோவியத் ஒன்றியத்தின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும். இது முதலில் 1925 சூன் 23 இல் உருவாக்கப்பட்டு, 1934 வரை வழங்கப்பட்டது. 1935 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில், இதற்குப் பதிலாக ஸ்டாலின் பரிசு வழங்கப்பட்டது. 1956 ஆகத்து 15 முதல் மீண்டும் வழங்கப்பட்டு, 1990 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் வரை ஒவ்வொரு இரட்டை எண்ணிக்கையிலான ஆண்டிலும் தொடர்ந்து வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா ஏப்ரல் 22, விளாதிமிர் லெனின் பிறந்த நாளாகும்.

லெனின் பரிசு
லெனின் பரிசு பேட்ஜ்
நாடு சோவியத் ஒன்றியம்
நிறுவப்பட்டது23 சூலை 1925; 99 ஆண்டுகள் முன்னர் (1925-07-23)
பரிசின் நாடா

லெனின் பரிசு லெனின் அமைதிப் பரிசில் இருந்து வேறுபட்டது, லெனின் அமைதிப் பரிசு சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களுக்கு வழங்கப்படுவதை விட வெளிநாட்டு குடிமக்களுக்கு வழங்கப்பட்டது, அமைதிக்கான காரணத்திற்காக அவர்களின் பங்களிப்புகளுக்காக. மேலும், லெனின் பரிசை ஸ்டாலின் பரிசு அல்லது பின்னர் யு.எஸ்.எஸ்.ஆர். மாநிலப் பரிசுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. சில நபர்களுக்கு லெனின் பரிசு மற்றும் யு.எஸ்.எஸ்.ஆர். மாநிலப் பரிசு ஆகிய இரண்டும் வழங்கப்பட்டது.

2018 ஏப்ரல் 23 இல் உருசியாவின் உலியானவ்சுக் மாகாணத் தலைவர் செர்கே மரோசொவ் 2020 இல் லெனினின் 150வது பிறந்தநாளை ஒட்டி, தமது மாகாணத்தில் மனிதநேயம், இலக்கியம் மற்றும் கலை ஆகியவற்றில் செய்த சாதனைகளுக்காக லெனின் பரிசை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.[1]

லெனின் விருது பெற்ற சிலர்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "In the Ulyanovsk region have revived the Lenin prize – Russia news today". Archived from the original on 2018-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெனின்_பரிசு&oldid=3620857" இலிருந்து மீள்விக்கப்பட்டது