உலியானவ்சுக் மாகாணம்

உலியானவ்சுக் மாகாணம் (Ulyanovsk Oblast, உருசியம்: Улья́новская о́бласть, உலியானவ்ஸ்க் ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் உலியானவ்ஸ்க் நகரம். 2010 ஆம் ஆண்டின் இரசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை1,292,799 (2010 ஆண்டைய கணக்கெடுப்பு).[7]

உலியானவ்சுக் மாகாணம்
Ulyanovsk Oblast
மாகாணம்
Ульяновская область
உலியானவ்சுக் மாகாணம் Ulyanovsk Oblast-இன் கொடி
கொடி
உலியானவ்சுக் மாகாணம் Ulyanovsk Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வோல்கா[1]
பொருளாதாரப் பகுதிவோல்கா[2]
நிர்வாக மையம்உலியானவ்சுக்
அரசு
 • நிர்வாகம்உலியானவ்ஸ்க் பேரவை[3]
 • ஆளுநர்[5]செர்கே லெவெனோவிச் மோரோசோவ்[4]
பரப்பளவு[6]
 • மொத்தம்37,300 km2 (14,400 sq mi)
பரப்பளவு தரவரிசை62வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்12,92,799
 • Estimate (2018)[8]12,46,618 (−3.6%)
 • தரவரிசை37வது
 • அடர்த்தி35/km2 (90/sq mi)
 • நகர்ப்புறம்73.5%
 • நாட்டுப்புறம்26.5%
நேர வலயம்[9] (ஒசநே+4)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-ULY
அனுமதி இலக்கத்தகடு73
அலுவல் மொழிகள்உருசியம்[10]
இணையதளம்http://www.ulgov.ru

நிலவியல் தொகு

உலியானவ்ஸ்க் மாகாணம் எல்லைகளாக வடக்கில் சுவாசியா குடியரசு, வடகிழக்கில் தர்தாரிஸ்தான் குடியரசு, கிழக்கில் சமாரா ஒப்லாஸ்து, தெற்கில் சராத்தவ் ஓப்லஸ்து, மேற்கில் பென்சா ஒப்லாஸ்து வடமேற்கில் மொர்தோவியா குடியரசு ஆகியன அமைந்துள்ளன.

ஓப்லாசுதுவின் பரப்பளவில் கால்பங்கு நிலப்பகுதியில் இலையுதிர் காடுகள் உள்ளன ஒப்லாசுதுவின் மையத்தில் வோல்கா ஆறு பாய்ந்து இரண்டாக பிரிக்கிறது. பிராந்தியத்தின் மேற்குப் பகுதி மலைப்பாங்கான பகுதியாகும். இங்கு 358 மீ (1,175 அடி) உயரமான மலைகள் காணப்படுகின்றன. ஒப்லாசுதுவின் கிழக்கு பகுதி பெரும்பாலும் சமவெளியாக உள்ளது. நீர்நிலைகள் பிரதேசத்தில் சுமார் 6% பரப்பளவில் உள்ளன.

சூலைமாத சராசரி வெப்ப நிலை +19 °செ (66°பாரங்கீட்). சனவரி மாத சராசரி வெப்பநிலை −11 °செ (12°பாரங்கீட்) பனிப்பொழிவு நவம்பர் மாதத்தில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கம்வரை பொழிகிறது. ஆண்டு சராசரி மழையளவு 400 மிமீ (16 அங்குளம்).

மக்கள் வகைப்பாடு தொகு

ஓப்லாசுது மக்கள் தொகை: 1,292,799 ( 2010 கணக்கெடுப்பு ); 1,382,811 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,400,806 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ). ஒப்லாசுது மக்களில் 55% மேலான மக்கள் உலியானவ்ஸ்க், திமிட்ரோவிகார்ட் ஆகிய இரு நகரங்களில் வாழுகின்றனர்.

  • இனக்குழுவினர் பின்வரும் விகிதப்படி வாழ்கின்றனர்.[7]
  • 73,6% உருசியர்
  • 12.2% டாடர்
  • 7.7% சுவாஷ்
  • 3.2% மால்தோவியர்
  • 3.3% மற்றவர்கள்
  • 67.890 மக்கள் தங்கள் இனம் பற்றி அறிவிக்கவில்லை.[12]
  • 2007 ஆம் ஆண்டின் முதல் பாதியில், பிறப்பு விகிதம் 1000 க்கு 9.0 என்று இருந்தது இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 1991 ஆண்டில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 200 ஆயிரம் பேர்வரை குறைந்துள்ளனர்.
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[13]

2009 - 1.40 | 2010 - 1.41 | 2011 - 1.45 | 2012 - 1.57 | 2013 - 1.61 | 2014 - 1.68 (எதிர்பார்ப்பு)

சமயம் தொகு

 

உலியானவ்ஸ்க் ஒப்லாஸ்து சமயம் (2012)[14][15]

  ஸ்லாவிக் நாட்டுப்புற சமயத்தினர் (1%)
  பொதுவான கிறித்துவர் (1%)
  பழைய நம்பிக்கையாளர்கள் (1%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (12%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (9.4%)
  • அரினா அட்லஸ் 2012 ஆண்டைய கணக்கெடுப்பு:[14]
  • 60.6% உருசிய மரபுவழி திருச்சபை ;
  • 1% பொதுவான கிருத்துவர் ;
  • 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்
  • 6% இஸ்லாமியர் ;
  • 1% ஸ்லாவிக் நாட்டுப்பற கிருத்தவர்
  • 1% பழைய நம்பிக்கையாளர்கள்
  • 12% கடவுள் நம்பிக்கையிள்ள மத நாட்டமற்றவர்கள்
  • 8% நாத்திகர் ;
  • 9.4% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது தங்கள் மதத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள்.[14]

மேற்கோள்கள் தொகு

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Charter of Ulyanovsk Oblast, Article 9
  4. Official website of Ulyanovsk Oblast. Sergey Morozov, Governor of Ulyanovsk Oblast பரணிடப்பட்டது 2015-12-30 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  5. Charter of Ulyanovsk Oblast, Article 19
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  7. 7.0 7.1 7.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  9. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  10. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  11. Charter of Ulyanovsk Oblast, Article 1
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-12-16.
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-16.
  14. 14.0 14.1 14.2 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  15. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), August 27, 2012. Retrieved September 24, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலியானவ்சுக்_மாகாணம்&oldid=3545314" இலிருந்து மீள்விக்கப்பட்டது