லெபனான் தேவதாரு
லெபனான் தேவதாரு (Cedrus libani) என்பது பினாசியேக் குடும்பத்தில் உள்ள மர இனமாகும். இது கிழக்கு நடுநிலம் ஆற்றுப்பள்ளத்தாக்கு மலைப்பகுதிக்குரிய மரமாகும். இது பெரும் மாறாப் பசுமை ஊசியிலை மரமாகவும் பாரிய சமய, வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்டதாகவும் மத்திய கிழக்கு பண்பாட்டில் காணப்படுகின்றது. இம்மரங்களை பண்டைய எகிப்தியர்கள் கடல் வழியாக எகிப்திற்கு கொண்டு சென்றது குறித்து எகிப்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமேரியர்களின் கில்கமெஷ் காப்பியத்திலும் தேவதாரு மரக்காடுகளை குறித்துள்ளது. தேவதாரு மரம் லெபனான் நாட்டின் தேசிய சின்னமாகவும், பரவலாக பூங்காக்களில் அலங்கார மரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
லெபனான் தேவதாரு | |
---|---|
கடவுளின் தேவதாருக்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. libani
|
இருசொற் பெயரீடு | |
Cedrus libani A.Rich. | |
Distribution map | |
வேறு பெயர்கள் | |
Several, including:
|
உசாத்துணை
தொகு- ↑ Gardner, M. (2013). "Cedrus libani". IUCN Red List of Threatened Species 2013: e.T46191675A46192926. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T46191675A46192926.en. https://www.iucnredlist.org/species/46191675/46192926.
- ↑ Knight Syn. Conif. 42 1850
வெளி இணைப்புகள்
தொகு- Cedrus libani – information, genetic conservation units and related resources. European Forest Genetic Resources Programme (EUFORGEN)