லெம்னோஸ்
லெம்னோஸ் அல்லது லிம்னோஸ் (Lemnos அல்லது Limnos, கிரேக்கம்: Λήμνος ; பண்டைக் கிரேக்கம்: Λῆμνος ) என்பது ஏஜியன் கடலின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிரேக்க தீவு ஆகும். இது நிர்வாக ரீதியாக வடக்கு ஏஜியன் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லெம்னோஸ் பிராந்திய அலகுக்குள் ஒரு தனி நகராட்சியாகவும் உள்ளது. தீவின் முக்கிய நகரம் மற்றும் நகராட்சியின் தலைமையகம் மிரினா ஆகும்.[2] தீவின் பரப்பளவு 477.583 சதுர கிலோமீட்டர்கள் (184.396 sq mi),[3] இது கிரீஸின் 8வது பெரிய தீவாகும் .
லெம்னோஸ் Λήμνος | |
---|---|
மிரினாவின் பனோரமா | |
அமைவிடம் | |
Location within the region | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | வடக்கு ஏஜியன் |
மண்டல அலகு: | லெம்னோஸ் |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நகராட்சி | |
- மக்கள்தொகை: | 16,992 |
- பரப்பளவு: | 477.6 km2 (184 sq mi) |
- அடர்த்தி: | 36 /km2 (92 /sq mi) |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம் (min-max): | 0–470 m (0–1542 ft) |
அஞ்சல் குறியீடு: | 81400 |
தொலைபேசி: | 22540 |
வாகன உரிமப் பட்டை: | MH, MY |
வலைத்தளம் | |
www.limnos.gr |
நிலவியல்
தொகுலெம்னோஸ் தீவானது பெரும்பாலும் தட்டையானது (எனவே இதில் 30 க்கும் மேற்பட்ட மணல் நிறைந்த கடற்கரைகள் உள்ளன). ஆனால் குறிப்பாக தீவின் வடமேற்கு பகுதி கரடுமுரடானதும், மலைப்பாங்கானதுமாகும். தீவின் மிக உயரமான இடம் 430 மீ உயரத்தில் உள்ள ஸ்கோபியா மலை ஆகும்.[4] மேற்கு கடற்கரையில் உள்ள மிரினா மற்றும் தீவின் நடுவில் ஒரு பெரிய விரிகுடாவின் கிழக்கு கரையில் உள்ள மௌட்ரோஸ் ஆகியவை முக்கிய நகரங்கள். மிரினா (காஸ்ட்ரோ என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது "கோட்டை") அது ஒரு நல்ல துறைமுகத்தைக் கொண்டுள்ளது. இது மேற்கு நோக்கிய கடல் சுவரைக் கட்டுவதன் மூலம் மேம்படுத்தப்படும் பணியில் உள்ளது. இதன் மலைப்பகுதிகள் செம்மறியாடுகளுக்கு மேய்ச்சல் பகுதிகளாக உள்ளன. மேலும் லெம்னோஸ் சிறப்பான கால்நடை விலங்கு வளர்ப்பு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இதன் கலத்தகி லிம்னோ [5] ( PDO ), செம்மறியாடு மற்றும் ஆடுப் பால், மெலிபாஸ்டோ பாலடைக்கட்டி, இன் தயிர் ஆகியவற்றிறக்கு பிரபலமானது. தீவில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பாதாம், அத்தி, முலாம்பழம், தர்பூசணி, தக்காளி, பூசணி, ஆலிவ் ஆகியவை அடங்கும். மேலும் முக்கிய பயிர்களில் கோதுமை, பார்லி, எள் ஆகியவை ஆகும். குறிப்பாக 1320 களில் பைசாந்தியப் பேரரசு அதன் அனதோலியன் உடைமைகளை இழந்த பிறகு லெம்னோஸ் கான்ஸ்டான்டினோப்பிளின் தானியக் களஞ்சியமாக இருந்தது. லெம்னோஸ் தேனையும் உற்பத்தி செய்கிறது. மஸ்கட் திராட்சைகள் பரவலாக விளைவிக்கப்படுகின்றன, மேலும் இது டேபிள் ஒயின் தயாரிக்கப் பயன்படுகிறது. 1985 ஆம் ஆண்டு முதல் லெம்னோஸ் ஒயின்களின் வகை மற்றும் தரம் பெரிதும் அதிகரித்துள்ளது.
காலநிலை
தொகுலெம்னோசின் காலநிலை முக்கியமாக நடுநிலக்கடல் சார் காலநிலை ஆகும்.[6] குளிர்காலம் பொதுவாக கடுமையாக இருக்காது. ஆனால் அவ்வப்போது பனிப்பொழிவு இருக்கும். பலத்த காற்று என்பது தீவின் ஒரு அம்சமாகும், குறிப்பாக ஆகத்து மற்றும் குளிர்காலத்தில் பலமாக காற்றுவீசும். எனவே இதன் புனைபெயர் "காற்றால் நிறைந்த ஒன்று" (கிரேக்க மொழியில், Ανεμόεσσα). குறிப்பாக கோடை காலத்தில் ஏதென்சை விட வெப்பநிலை பொதுவாக 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், லெம்னோஸ் தீவு | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 18.8 (65.8) |
19.0 (66.2) |
22.0 (71.6) |
25.8 (78.4) |
29.8 (85.6) |
34.4 (93.9) |
39.4 (102.9) |
35.8 (96.4) |
32.8 (91) |
31.2 (88.2) |
24.0 (75.2) |
19.2 (66.6) |
39.4 (102.9) |
உயர் சராசரி °C (°F) | 10.7 (51.3) |
11 (52) |
13.1 (55.6) |
17.1 (62.8) |
22.1 (71.8) |
27.2 (81) |
29.5 (85.1) |
29.1 (84.4) |
25.3 (77.5) |
20.3 (68.5) |
15.7 (60.3) |
12.3 (54.1) |
19.2 (66.6) |
தினசரி சராசரி °C (°F) | 7.5 (45.5) |
7.9 (46.2) |
9.9 (49.8) |
13.8 (56.8) |
18.4 (65.1) |
23.3 (73.9) |
25.5 (77.9) |
24.6 (76.3) |
21.4 (70.5) |
16.6 (61.9) |
12.3 (54.1) |
9.3 (48.7) |
15.9 (60.6) |
தாழ் சராசரி °C (°F) | 4.4 (39.9) |
4.5 (40.1) |
6.2 (43.2) |
9 (48) |
13 (55) |
17.3 (63.1) |
20.4 (68.7) |
20.7 (69.3) |
16.7 (62.1) |
12.9 (55.2) |
9.1 (48.4) |
6.2 (43.2) |
11.4 (52.5) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -5.0 (23) |
-4.2 (24.4) |
-6.0 (21.2) |
1.0 (33.8) |
3.4 (38.1) |
3.4 (38.1) |
12.0 (53.6) |
12.8 (55) |
8.8 (47.8) |
1.6 (34.9) |
-1.0 (30.2) |
-3.6 (25.5) |
−6.0 (21.2) |
பொழிவு mm (inches) | 72.3 (2.846) |
44.1 (1.736) |
51.6 (2.031) |
32.3 (1.272) |
23.3 (0.917) |
21.9 (0.862) |
10.3 (0.406) |
7.5 (0.295) |
19.6 (0.772) |
35.9 (1.413) |
75.4 (2.969) |
80.2 (3.157) |
474.4 (18.677) |
% ஈரப்பதம் | 77.0 | 75.4 | 75.9 | 73.4 | 68.8 | 61.0 | 57.6 | 62.5 | 66.8 | 72.8 | 77.9 | 78.6 | 70.6 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 7.5 | 6.2 | 5.2 | 4.2 | 3.4 | 2.6 | 1.2 | 1.2 | 1.6 | 3.8 | 7.0 | 8.4 | 52.3 |
Source #1: NOAA[7] | |||||||||||||
Source #2: HNMS[8] |
-
லெம்னோஸின் உப்பு ஏரி
-
மணல் மேடு
-
சோர்டரோலிம்னியின் நிலப்பரப்பு
-
பரதீசி மலை
போக்குவரத்து
தொகுதீவில் உள்ள ஒரே வானூர்தி நிலையம் லெம்னோஸ் சர்வதேச வானூர்தி நிலையமாகும். இது மைரினாவிலிருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. தீவுக்கு பிரேயஸ் ( ஏதென்ஸ் ), லாரியம், தெசலோனிகி கவாலா ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பான படகு சேவை உள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ Detailed census results 2011 (கிரேக்கம்)
- ↑ "ΦΕΚ B 1292/2010, Kallikratis reform municipalities". Government Gazette.
- ↑ "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece. Archived from the original (PDF) on 2015-09-21.
- ↑ Encyclopedia of Ancient Greece.
- ↑ "Recognition of Protected Designation of Origin". World Intellectual Property Organization.
- ↑ Kottek, M.; J. Grieser; C. Beck; B. Rudolf; F. Rubel (2006). "World Map of the Köppen-Geiger climate classification updated". Meteorol. Z. 15 (3): 259–263. doi:10.1127/0941-2948/2006/0130. Bibcode: 2006MetZe..15..259K. http://www.schweizerbart.de/resources/downloads/paper_free/55034.pdf. பார்த்த நாள்: January 29, 2013.
- ↑ "Limnos Island Climate Normals 1961-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் January 29, 2013.
- ↑ "Limnos Island Climate Averages 1974-2010". Hellenic National Meteorological Service. பார்க்கப்பட்ட நாள் December 9, 2020.