வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம்

வங்சாமாஜு இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம்

வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம் அல்லது வங்சாமாஜு இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Wangsa Maju LRT Station; மலாய்: Stesen LRT Wangsa Maju; சீனம்: 旺沙玛珠) என்பது மலேசியா, கோலாலம்பூர், வங்சா மாஜு பகுதியில் கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது.

 KJ3 
வங்சாமாஜு
Rapid_KL_Logo

Wangsa Maju LRT Station
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Stesen LRT Wangsa Maju
旺沙玛珠
அமைவிடம்Jalan 1/27A; Jalan 16/27B செக்சன் 2, வங்சா மாஜு 53300
கோலாலம்பூர்
 மலேசியா
ஆள்கூறுகள்3°12′20″N 101°43′53″E / 3.20556°N 101.73139°E / 3.20556; 101.73139
உரிமம் பிரசரானா மலேசியா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  கிளானா ஜெயா 
நடைமேடை2 தீவு மேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலையம்
தரிப்பிடம்சீருந்து கட்டணம்; DBKL: 259
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து இலவசம்; 100
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KJ3 
வரலாறு
திறக்கப்பட்டது1 சூன் 1999; 25 ஆண்டுகள் முன்னர் (1999-06-01)
சேவைகள்
முந்தைய நிலையம்   சுபாங் ஜெயா   அடுத்த நிலையம்
தாமான் மெலாத்தி எல்ஆர்டி
கோம்பாக் எல்ஆர்டி
 

கிளானா ஜெயா
 
செரி ரம்பாய் எல்ஆர்டி
புத்ரா அயிட்ஸ்

கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரையிலான 12 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையங்களை உள்ளடக்கிய இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையம் நிலத்தடி வழித்தடத்தின் சேவையில் உள்ளது.

பொது

தொகு

வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம், கோம்பாக்கிற்கு வடக்கே உள்ள மூன்றாவது கடைசி நிலையமாகும். இந்த நிலையம் வடக்கு கோலாலம்பூர் புறநகர் பகுதியான வங்சாமாஜுவிற்குள், 1/27A சாலையின் பிரதான சாலையில் அமைந்துள்ளது.

இந்த நிலையம் வங்சா மாஜு பிரிவு 1 மற்றும் வங்சா மாஜு பிரிவு 2 ஆகிய இரண்டு குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது; மற்றும் 1/27A சாலை; 16/27B சாலை ஆகிய சாலைகளின் வழியாகத் தேசா செதாபாக் குடியிருப்பு பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்புகள்

தொகு
பேருந்து எண் வழி பேருந்து இணைப்பு
 250 
மலிஞ்சா சாலை; கெந்திங் கிள்ளான் சாலை; தாமான் ஈபு கோத்தா சாலை; லங்காவி சாலை; டானாவ் சவுஜானா சாலை -
 T222 
தாமான் மெலாத்தி சாலை; கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2); 1/27A சாலை;  KJ3  வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம் -
 T250 
1/27A சாலை;  KJ3  வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம்; மலிஞ்சா சாலை; கெந்திங் கிள்ளான் சாலை; பகாங் சாலை; துவாங்கு அப்துல் ரகுமான் சாலை; ராஜா லெபோ பசார் பெசார் சாலை; துன் டான் சியூ சின் சாலை -
 253 
1/27A சாலை; கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2); AU3/1 சாலை; 3/56 சாலை; 1/56 சாலை; 10/56 சாலை; AU3/1 சாலை; கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2); Jalan Mamanda 9; Jalan Ampang -
  • ஜாலான் (Jalan) எனும் சொல் மலேசியாவில் சாலை என்பதைக் குறிப்பிடும் மலாய் வழக்குச் சொல் ஆகும்.

மலேசியத் தமிழர்கள்; சாலை எனும் சொல்லிற்குப் பதிலாக ஜாலான் எனும் சொல்லையே பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.

வெளி இணைப்புகள்

தொகு