வசுந்தரா காஷ்யப்

நடிகை, வடிவழகி

வசுந்தரா காஷ்யப் (Vasundhara Kashyap) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் நடித்துள்ளார்

வசுந்தரா காஷ்யப்
தென்மேற்கு பருவக்காற்று பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது வசுந்தரா காஷ்யப்
பிறப்புவசுந்தரா
19 ஆகத்து 1989 (1989-08-19) (அகவை 35)[1]
புது தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்அதிசயா[2][3]
Vasundhra Chiyertra
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போது வரை

தொழில்

தொகு

வசுந்தரா தமிழ் தந்தைக்கும், மகாராட்டிர தாய்க்கும் பிறந்தவர். இவர் முதலில் 2006 ஆண்டு வட்டாரம் படத்தில் நடித்தார். பின்னர் காலைப்பனி, ஜெயம் கொண்டான், பேராண்மை உள்ளிட்ட படங்களில் தோன்றினார். மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற இவர் மிஸ் கிரியேட்டிவிட்டி என முடிசூட்டப்பட்டார், அதைத் தொடர்ந்து இவர் வடிவழகி தொழிலில் ஈடுபட்டார். தென்மேற்கு பருவகாற்று படத்தின்போது தனது பெயரை வசுந்தரா காஷ்யப் என்று மாற்றினார்.[4][5]

திரைப்படவியல்

தொகு
  • குறிப்புகள் ஏதும் குறிக்கப்படாவிட்டாதவை, எல்லாம் தமிழ் படங்களாகும்.
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2006 வட்டாரம் வீணா அதிசயா என்று வரவு வைக்கப்பட்டுள்ளது
2007 உன்னாலே உன்னாலே ஜான்சியின் தோழி சிறப்புத் தோற்றம்
2008 காலைய்பனி சம்வேத்னா அதிசயா என்று வரவு வைக்கப்பட்டுள்ளது
ஜெயம்கொண்டன் பூங்கொடி
2009 பேராண்மை கல்பனா
2010 தென்மேற்கு பருவகாற்று பேச்சி
2011 போராளி மாரி சிறந்த துணை நடிகைக்கான எடிசன் விருது
பரிந்துரை, சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது
2012 தூனீக தூனீக நீது தெலுங்கு படம்
2013 சொன்னா புரியாது அஞ்சலி
சித்திரையில் நிலாச்சோறு கௌரி
2019 கண்ணே கலைமானே முத்துலட்சுமி
பக்ரீத் கீதா
2021 புத்தன் ஏசு காந்தி அறிவிக்கப்படும் படப்பிடிப்பு

குறிப்புகள்

தொகு
  1. https://nettv4u.com/celebrity/tamil/movie-actress/vasundhara-kashyap
  2. "Vasundhara in Mani Ratnam's film?". IndiaGlitz. 2008-09-09. Archived from the original on 2008-09-10. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.
  3. "Close shave for actress". IndiaGlitz. 2007-05-17. Archived from the original on 2007-05-19. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.
  4. "Vasundra in Mani Rathnam's films". Archived from the original on 22 October 2008. பார்க்கப்பட்ட நாள் 28 May 2011.
  5. Vijayakumar, Sindhu (2009-11-03). "Vasundhara is in no hurry". The Times Of India. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுந்தரா_காஷ்யப்&oldid=4114416" இலிருந்து மீள்விக்கப்பட்டது