வடகவுஞ்சி (Vadagounchi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு மலைக் கிராமம் (ஊர்). கொடைக்கானல் வருவாய் வட்டத்தின் 15 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:15) ஆகும்.[4]

வடகவுஞ்சி
—  கிராமம்  —
வடகவுஞ்சி
இருப்பிடம்: வடகவுஞ்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°12′06″N 77°21′50″E / 10.2018°N 77.3639°E / 10.2018; 77.3639
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

முக்கிய பயிர் தொகு

இங்கு மலைத் தோட்டப் பயிர்களான மலைவாழை, பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, காபி, பழங்கள் அதிகமாக விளைகின்றன.

அமைவிடம் தொகு

பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் பழனியிலிருந்து சுமார் 39 கி.மீ.தூரத்திலும், கொடைக்கானலில் இருந்து 22 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1025 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் கொடைக்கானல் மலைகளில் மிக உயரமான மலைச் சிகரம் பெருமாள் மலைச் சிகரம் (உயரம்.2066 மீட்டர்) அமைந்துள்ளது. இந்திரா காந்தி தேசிய வன விலங்கு சரணாலயம் இக்கிராமத்தின் கிழக்கு எல்லையோடு முடிகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வடகவுஞ்சியில் 3838 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 960. எழுத்தறிவு பெற்றவர்கள் 2141 பேர். இதில் 1244 பேர் ஆண்கள்; 897 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 64.03. ஆறு வயதுக்குட்பட்டோர் 14.77 சதவீதம் ஆவர்.[5]

குள்ள மனிதர்களின் குகை வீடுகள் தொகு

 
குள்ள மனிதர்களின் குகை வீடுகள்

இக்கிராமத்தின் வட கிழக்குப் பகுதியில் செம்பரான்குளம் பகுதியில் குள்ள மனிதர்களின் மூன்று அடி உயரமுள்ள குகைவீடுகள் உள்ளது. வீடுகள் முழுவதும் கருங்கற்களால் ஒரு ஒழுங்கமைவோடு கட்டப்பட்டுள்ளது. வீட்டினுள் இருவர் மட்டுமே தங்கும் இடவசதியுடன் அமைக்கப்பட்டும், மேற்கூரைகள் ஒர் அடி கனமுள்ள கருங்கற் பலகைகளால் மூடப்பட்டும் உள்ளது.

அடிக்குறிப்பு தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
  5. "Rural - Dindigul District;Kodaikanal Taluk;Vadagounchi Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகவுஞ்சி&oldid=3659151" இலிருந்து மீள்விக்கப்பட்டது