வண்டலூர் தொடருந்து நிலையம்
வண்டலூர் தொடருந்து நிலையம் (Vandalur railway station, நிலையக் குறியீடு:VDR) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
வண்டலூர் | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
வண்டலூர் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை 45, வண்டலூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°04′41″N 80°15′42″E / 13.0780°N 80.2616°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 7 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | VDR | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | 9 சனவரி 1965[1] | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
இது சென்னைக் கடற்கரையில் இருந்து 34 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 45இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 37 மீட்டர் உயரத்தில் உள்ளது.
வரலாறு
தொகுதாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)