வதாதிகா குகைக் கல்வெட்டு

வதாதிகா குகைக் கல்வெட்டு, இது மௌகரி வம்ச மன்னர் அனந்தவர்மனின் நாகார்ஜுனி மலை குகைக் கல்வெட்டு என்றும் அழைக்கப்படும். பீகாரில் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள கயை நகரத்திற்கு வடக்கே 16 மைல் தொலைவில் உள்ளது. பராபர் குகைகள் அருகே உள்ள நாகார்ஜுனி மலைக் குகையில் குப்தர் எழுத்துமுறையில் சமசுகிருத மொழியில் காணப்படும் இக்கல்வெட்டு கிபி 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு காலத்தியது. குப்தப் பேரரசு காலத்திய இக்கல்வெட்டு ஓம் என்ற சின்னத்தை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இது பூதபதி (சிவன்) மற்றும் தேவி (பார்வதி) தெய்வச் சிலைக்கு இக்குகையை அர்ப்பணித்ததைக் குறிக்கிறது. இது 18ம் நூற்றாண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்கு வந்தபோது காணாமல் போன அர்த்தநாரீசுவரர் சிலையாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.[1]

வதாதிகா குகைக் கல்வெட்டு
வதாதிகா குகையில் சைவம் தொடர்பான சுமஸ்கிருத மொழியில் குப்தர் எழுத்துமுறையில் செதுக்கப்பட்ட கல்வெட்டு
செய்பொருள்குகைச் சுவரில்
எழுத்துசமசுகிருதம், குப்தர் எழுத்துமுறை
உருவாக்கம்5 அல்லது 6ம் நூற்றாண்டு
காலம்/பண்பாடுமௌகரி வம்சம்
கண்டுபிடிப்புகயா மாவட்டம், பிகார், இந்தியா
இடம்நாகார்ஜுனி மலை, பராபர் குகைகள்
தற்போதைய இடம்வதாதிகா குகை

வரலாறு

தொகு
 
வதாதிகா குகைகள் மற்றும் பராபர் குகைகள்

வதாதிகா குகை கிமு 3 ஆம் நூற்றாண்டில் ஆசீவகத் துறவிகளுக்கு அசோகரால் பரிசளிக்கப்பட்ட ஆரம்பகால குகையாகும். நாகார்ஜுனி குகைகள் கிமு 214 இல் அசோகரின் பேரானால் குடையப்பட்டது.

ஆர்தர் பாஷாமின் கூற்றுப்படி, இந்த குகைகளில் செதுக்கப்பட்ட உருவங்கள் மற்றும் கல்வெட்டுகள் நாகார்ஜுனி மற்றும் பராபர் குகைகள் கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதை நிறுவ உதவுகின்றது.[2] இக்குகைகளில் வசித்தவர்கள் ஆசீவகத் துறவிகள் ஆவார். ஒரு கட்டத்தில் ஆசீவகர்கள் இக்குகைகளை கைவிட்டனர். இங்கு போதிமுலா மற்றும் கிளேச-காந்தார கல்வெட்டுகள் காணப்படுவதால் பௌத்தப் பிக்குகளும் இந்தக் குகைகளைப் பயன்படுத்தினர் எனத்தெரியவருகிற்து. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மௌகாரி வம்சம்த்தைச் சேர்ந்த அனந்தவர்மன் என்ற இந்து மன்னன், 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் இந்த மூன்று குகைகளில் வைணமம், சைவம் மற்றும் சாக்த சமயங்களின் இந்து தெய்வ விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார்.[4] குடமுழுக்கை குறிக்க, அவர் சமஸ்கிருத மொழியில் கல்வெட்டுகளை நிறுவினார். இந்தக் கல்வெட்டுகள் அப்போது நடைமுறையில் இருந்த குப்தர் எழுத்துமுறை உள்ளது.[2][3] [ இங்கு தற்போது பல கல்லறைகள் இருப்பதால் 14-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, இப்பகுதி முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

வடதிகா குகைக் கல்வெட்டு முதன்முதலில் 1785 ஆம் ஆண்டில் ஜே. எச். ஹாரிங்டன் என்பவரால் அறியப்பட்டது. ஹாரிங்டன் நகலெடுத்த கல்வெட்டு முதலில் சார்லஸ் வில்கின்ஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. 1847 ஆம் ஆண்டில், மார்க்கம் கிட்டோ ஒரு புதிய கண்-நகலை உருவாக்கி அதை ராஜேந்திரலால் மித்ராவின் புதிய மொழிபெயர்ப்புடன் வெளியிட்டார்.[4] ஜான் ஃப்ளீட் 1888 இல் மற்றொரு திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பை வெளியிட்டார்..[1]

விளக்கம்

தொகு

கல்வெட்டு சுமார் 4.25 அடி (1.30 மீட்டர்) மற்றும் 1.5 அடி (0.46 மீட்டர்) பரப்பளவில் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது குப்தர் எழுத்துமுறையில் எட்டு வரிகளைக் கொண்டுள்ளது. இதில் தோராயமாக 1 அங்குலம் (25 மிமீ) உயரமுள்ள எழுத்துக்கள் உள்ளன.

வதாதிகா குகைக் கல்வெட்டின் எழுத்துக்கள்

தொகு

1. ஓம் ஆசித் ஸர்வ்வமஹிக்ஷிதா மானுர் இவ க்ஷத்ரஸ்திதேர் ததேஷிகஹ்_ஶ்ரீமான் மத்தகஜேந்திரகேலாகமனঃ ஸ்ரீயஜ்ஞவர்ம்மா நৃபঃ | 2. யஸ்யாஹுதஸஹஸ்ரநேத்ரவிரஹக்ஷாமா ஸதைவாத்வரைঃ_பௌலோமி சிரம் அஸ்ருபதமலினாம் தத்தே கபோலஶ்ரியம் ||

3. ஶ்ரீஶார்துலந்ঃபத்மஜঃ பராஹிதঃ ஶ்ரீபௌருஷঃ ஶ்ரூயதே|லோகே சந்திரமரீசிநிர்ம்மாலாகுணோ யோ நந்தவர்மாபிதঃ | 4. திருஷ்டத்ருஷ்டாவிபூதி கர்த்ருவரதாம் தேனாத்பூதாம் கரிதாம்|விம்வம் பூதபத்தேர் குஹாஶ்ரிதம் இடத் தேவ்யாஷ் ச பாயஜ் ||

5. அன்சாந்தக்ருஷ்டசார்ங்கப்ரவிதாதசராஜ்யாஸ்புரான்மாண்டலாந்த_வ்யக்தப்ருபாங்கலக்ஷ்மவ்யதிகரசாவலகண்டவக்த்ரேந்துவிம்வ | 6. அந்தயனந்தவர்ம்மா ஸ்மரஸத்ரிஷவபுர் ஜ்ஜீவிதே நிஸ்ப்ருஹாபிஷ்_தৃஷ்டா ஸ்தித்வா மৃগீபிঃ ஸுசிரம் அணிமிஷாஸ்நிக்தமுக்தேக்ஷபஶ்ச ||

7. அத்யாக்ருஷ்டாத் குரரவிருதஸ்பர்த்தின: ஷார்ங்கயந்த்ரா_2_த்வேகவித்த: ப்ரவிதாதகுணாத் இரித ஸௌஷ்டாஹவேன | 8. துரப்ராபி விமதிதகஜோத்ப்ராந்தவாஜி ப்ரவிரோ_2_வாணோ ரிஸ்த்ரிவ்யாசனபதாவிதேஷிகோ நந்தனாம்னா ||

– வதாதிகா குகைக் கல்வெட்டு[8]

ஃப்ளீட்டின் மொழிபெயர்ப்பு

தொகு

ஜான் ஃப்ளீட் இதை இவ்வாறு மொழிபெயர்த்தார்.

ஓம்! புகழ்பெற்ற யக்ஞவர்மன் என்ற புகழ்பெற்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவன் அனுவைப் போல, போர்வீரர் குலத்தைச் சேர்ந்தவர்களின் கடமையைப் பூமியின் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் அறிவுறுத்தினான்; யானையின் ஆட்டம் போல் இருந்த நடை; (மற்றும்) யாருடைய பலிகளின் மூலம் (தெய்வமான) பவுலோமி, ஆயிரம் கண்களைக் கொண்ட (இந்திரக் கடவுளின்) பிரிவினால் எப்பொழுதும் மெலிந்து, (இந்த மன்னனால் எப்போதும் அவளிடமிருந்து எப்போதும் இல்லாதவாறு) அழைக்கப்பட்டு, அழகைப் பெற்றாள் (அவளது) கன்னங்கள் நீண்ட நேரம் கண்ணீரால் கசிந்தன.

அவர், அனந்தவர்மன் என்ற பெயர் கொண்ட புகழ்பெற்ற மன்னன் சர்துலாவின் மகன்; உலகில் பிறருக்கு உதவி செய்பவராகவும், (மற்றும்) அதிர்ஷ்டமும், ஆண்மையும் உடையவராகவும், (மற்றும்) சந்திரனின் கதிர்களைப் போல களங்கமற்ற நற்குணங்கள் நிறைந்தவராகவும் இருப்பவர். அவரால் இவ்வாறு உண்டாக்கப்பட்டது (கடவுள்) பூதபதி [குறிப்பு 1] மற்றும் (தெய்வம்) தேவியின் (இந்த) குகையில் வைக்கப்பட்டுள்ள அற்புதமான விக்கிரகம்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 DR Bhandarkar, BC Chhabra & GS Gai 1981, ப. 221-222.
  2. 2.0 2.1 Arthur Llewellyn Basham (1951). History and Doctrines of the Ajivikas, a Vanished Indian Religion. Motilal Banarsidass. pp. 153–159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1204-8.
  3. Piotr Balcerowicz (2015). Early Asceticism in India: Ajivikism and Jainism. Taylor & Francis. pp. 335–336. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-53852-3.;For more on Maukhari dating, see: Maukhari dynasty, Encyclopaedia Britannica
  4. Markham Kittoe (1847), Notes on the Caves of Burabur, Journal of the Asiatic Society of Bengal, Volume 16, pages 401-406