வரைவு:வக்கம் புருஷோத்தமன்
வக்கம் புருஷோத்தமன் | |
---|---|
2012 இல் புருஷோத்தமன் | |
9வது மிசோரம் மாநில ஆளுநர் | |
பதவியில் 2 செப்டம்பர் 2011[1] – 6 சூலை 2014 | |
முன்னையவர் | மதன் மோகன் லகேரா |
பின்னவர் | கம்லா பெனிவால் |
14வது திரிபுரா ஆளுநர் | |
பதவியில் 30 சூன் 2014 – 14 சூலை 2014 | |
முன்னையவர் | தேவானந்த் கோன்வார் |
பின்னவர் | பத்மநாப ஆச்சார்யா |
கேரளா சட்டமன்றத்தின் சபாநாயகர் | |
பதவியில் 2001–2004 1982–1984 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வக்கம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா (தற்போதைய திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம், இந்தியா) | 12 ஏப்ரல் 1928
இறப்பு | 31 சூலை 2023 திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம், இந்தியா | (அகவை 95)
தேசியம் | இந்திய மக்கள் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | டாக்டர் லில்லி புருஷோத்தமன் |
பிள்ளைகள் | 3 |
வக்கம் பி. புருஷோத்தமன் (12 ஏப்ரல் 1928 - 31 சூலை 2023) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2011 முதல் 2014 வரை மிசோரம் மாநிலத்தின் ஆளுநராகவும், கேரள சட்டமன்றத்தின் சபாநாயகராகவும், மாநில அமைச்சராகவும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றினார்.
12 ஏப்ரல் 1928 அன்று பானு பணிக்கர்-பவானி ஆகியோருக்கு மூத்த மகனாக பழைய திருவிதாங்கூர் இராச்சியத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள வக்கம் என்னும் ஊரில் பிறந்தார்.[2]
இவர் 1946இல் மாணவர் காங்கிரஸின் (தற்போது கேரள மாணவர் சங்கம் என்று அழைக்கப்படும்) தீவிர ஊழியராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1953 இல் வக்கம் பஞ்சாயத்து உறுப்பினரானார். பின்னர், திருவனந்தபுரம் மாவட்ட காங்கிரசு தலைவராகவும், கேரளப் பிரதேச காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றினார். அகில இந்திய காங்கிரசு குழுவின் 35 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக உள்ளார். [3]
அரசியல் வாழ்க்கை
தொகு1970, 1977, 1980 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் ஆற்றிங்கல் சட்டமன்றத் தொகுதியில் இருந்து கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். செ. அச்சுத மேனன் தலைமையிலான அமைச்சரவையில் 1971 முதல் 1977 வரை விவசாயம் மற்றும் தொழிலாளர் அமைச்சர் பதவியை வகித்தார். எ. கி. நாயனார் அமைச்சரவையில் 1980 முதல் 1981 வரை சுகாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார்.[4] இவர் 1982 முதல் 1984 வரை கேரள சட்டமன்றத்தின் சபாநாயகராக பணியாற்றினார். பின்னர் ஆலப்புழா மக்களவைத் தொகுதியின் சார்பாக 1984-1991 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை இந்திய மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்.[5] [6] 1993 முதல் 1996 வரை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக பணியாற்றினார். 1996 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலில் ஆற்றிங்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001 ஆம் ஆண்டு ஆற்றிங்கல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக சபாநாயகரானார், 2001 முதல் 2004 வரை இப்பதவி வகித்தார்.
மன்றம் | தேர்தல் | தொகுதி | விளைவு | வாக்கு வித்தியாசம் |
---|---|---|---|---|
கேரள சட்டமன்றம் | 1967 | ஆற்றிங்கல் | தோல்வி | 5045 |
1970 | வெற்றி | 11531 | ||
1977 | வெற்றி | 8560 | ||
1980 | வெற்றி | 13073 | ||
1982 | வெற்றி | 7359 | ||
மக்களவை (இந்தியா) | 1984 | ஆலப்புழா | வெற்றி | 37764 |
1989 | வெற்றி | 25123 | ||
1991 | தோல்வி | 14075 | ||
கேரள சட்டமன்றம் | 1996 | ஆற்றிங்கல் | தோல்வி | 1016 |
2001 | வெற்றி | 10816 |
மிசோரம் மாநில ஆளுநர்
தொகு26 ஆகத்து 2011 அன்று, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில், மதன் மோகன் லகேராவுக்குப் பதிலாக வக்கம் பி. புருஷோத்தமனை மிசோரத்தின் புதிய ஆளுநராக நியமித்தார். இவர் மிசோரத்தின் 18வது ஆளுநராக 2 செப்டம்பர் 2011 அன்று பதவியேற்றார். இவர் நாகாலாந்துக்கு மாற்றப்பட்டதால் 11 சூலை 2014 அன்று தனது இப்பதவியை ராஜினாமா செய்தார். [7]
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு
தொகுபுருஷோத்தமன் தனது குழந்தை பருவ காதலியான டாக்டர். லில்லி புருஷோத்தமன் என்பவரை மணந்தார், இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அந்தக் குழந்தைகளின் பெயர் பிஜு, பினு மற்றும் பிந்து.[3] இவரது மூத்த மகன் பிஜு 18 சனவரி 2012 அன்று காலமானார்.
வக்கம் புருஷோத்தமன் 31 சூலை 2023 அன்று தனது 95ஆவது வயதில் காலமானார். [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vakkom B Purusothaman new governor of Mizoram". தி எகனாமிக் டைம்ஸ். 2011-09-02. http://economictimes.indiatimes.com/news/politics/nation/vakkom-b-purusothaman-new-governor-of-mizoram/articleshow/9839329.cms.
- ↑ "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-12.
- ↑ 3.0 3.1 "VakkomPurushothaman". stateofkerala.in. Archived from the original on 15 October 2011. பார்க்கப்பட்ட நாள் 6 September 2011.
- ↑ "VakkomPurushothaman".
- ↑ "KERALA LEGISLATURE - MEMBERS Vakkom B. Purushothaman". பார்க்கப்பட்ட நாள் 4 October 2012.
- ↑ "Governor Vakkom Purushothaman". பார்க்கப்பட்ட நாள் 4 October 2012.
- ↑ "Mizoram governor VB Purushothaman resigns". Patrika Group. 11 July 2014. http://www.patrika.com/news/mizoram-governor-vb-purushothaman-resigns/1017270.
- ↑ Former Kerala speaker Vakkom Purushothaman dies at 95