வலம்புரி சோமநாதன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வலம்புரி சோமநாதன் (பிறப்பு: 1928) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி எனும் வலம்புரியில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத் துறையில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் வெளியான “காந்தி” திரைப்படத்திற்குத் தமிழில் மொழிமாற்றம் செய்தவர். இவர் எழுதிய “புத்த மகா காவியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]
'வலம்புரி' சோமநாதன் | |
---|---|
பிறப்பு | சோமநாதன் 1928 வலம்புரி, புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 2010 |
பணி | பத்திரிக்கை ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் |
திரைப்படங்கள்தொகு
இயக்கம்
- லலிதா (1976)
- சிகப்புக்கல் மூக்குத்தி (1979)
தயாரிப்பு
- திருமணம் (1958)
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)
வசனம்
- மணமகள் தேவை (1950)
- மங்கையர் திலகம் (1955)
- கானல் நீர் (1961)
மேற்கோள்கள்தொகு
- ↑ "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 செப்டம்பர் 2012. 10 அக்டோபர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
ஆதாரம்தொகு
- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.