வாண்டையார்

வாண்டையார்‌ (Vandayar) என்னும்‌ பட்டம்‌ வண்டையர்‌ என்னும்‌ பெயரின்‌ திரிபாகக் கொள்ளப்படுகிறது.[1] வாண்டையார்‌ என்னும்‌ பட்டம்‌ கள்ளர்‌ இனத்தவரின்‌ பட்டப்‌ பெயர்களுள்‌ ஒன்று என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி விளக்கம்தருகிறது.[2] சோழர் காலத்தில் வாளுடையவர்கள் என்பவர்கள், பிற்காலத்தில் மருவி வாண்டையார்கள் என அழைக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.[3]

கருணாகரத் தொண்டைமான் வண்டையர்‌ கோன்‌ என அழைக்கப்பட்டமையும்‌, வல்லம்‌ என்னும்‌ தென்னார்க்காட்டுப்‌ பகுதியை ஆண்டவன்‌ வல்லவரையன்‌ வண்டையத்‌ தேவன்‌ எனப்பட்டதும்‌ காணலாம்‌.[4] கலிங்கத்துப்‌ பரணியின்‌ பாடல்களில்‌ வண்டைமன்‌ தொண்டைமான்‌, வண்டைநகர்‌ அரசன்‌, வண்டையர்க்கு அரசு, வண்டை வேந்தன்‌. வண்டையர்‌ அரசன்‌, வண்டையர்‌ கோன்‌” என்றெல்லாம்‌ கருணாகரத்‌ தொண்டைமான்‌ சிறப்பித்து அழைக்‌ கப்படுகிறான்‌.[5] வாண்டையார், தெத்து வாண்டையார், பருதி வாண்டையார், நெடுவாண்டையார், வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன் என்று மருவி கள்ளர்‌ இனத்தவரின்‌ பட்டப்‌ பெயர்களாக உள்ளன. [6]

கல்வெட்டுகளில் வாண்டையார்

தொகு
  • 1453 ஆண்டு அறந்தாங்கி தொண்டைமான் அழகிய மணவாளப்பெருமாள்‌ தொண்டைமானார் ஆட்சியில் பழங்கரை புராதனபுரீசுவரர்‌ கோயில்‌ வடபுற கல்வெட்டில் வாண்டையார்கள் குறிக்கப்படுகிறார்கள்.[7]
  • 17 ஆம் நூற்றாண்டு சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூர்‌ வட்டம்‌, ஆறகளூர் வெளிப்பாளையத்தில்‌ உள்ள நவகண்ட சிற்பம்‌ அருகே வயலில்‌ இருக்கும்‌ பலகைக்கலில், மாரிமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார்‌ என்பவர்‌ ஆறகமூரில்‌ உள்ள திருக்காமீசுரமுடைய தம்பினாருக்கு குமாரபாளையம்‌ என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார்.[8]
  • தஞ்சாவூர்' தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் கிழக்குத்‌ திருச்சுற்று தரையில்‌ உள்ள கல்வெட்டில் மாரியப்ப வாண்டையார்‌ மகன்‌ குப்பமுத்து என்பவன்‌ யாசகம்‌ பெற்று, மக்கள்‌ இட்ட அந்த உபயம்‌ கொண்ரு பெரிய பிரகாரத்தின்‌ தளவரிசை வகையறா போட்டதை அறியலாம்‌.[9]


வாண்டையார் பெயரில் உள்ள இடங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. கள்ளர் பட்டங்கள் வரலாறு. p. 76.
  2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. p. 45.
  3. Martial races of undivided India. p. 272.
  4. கள்ளர்_பட்டப்_பெயர்களும்_அரச_மரபினரும் (PDF). p. 5.
  5. சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும். p. 135.
  6. வாண்டையார் வரலாறு.
  7. அறந்தாங்கித் தொண்டைமான்கள். p. 85.
  8. Avanam Journal Collections. p. 116.
  9. தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள். p. 88.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாண்டையார்&oldid=4140621" இலிருந்து மீள்விக்கப்பட்டது