வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூன் 2007
- ஜூன் 1 - அம்பாறையில் இருந்து பொத்துவில் பகுதிக்குச் சென்ற இலங்கை இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் இரு முச்சக்கர வாகனங்கள் பதுங்கித் தாக்குதலுக்கு உள்ளாகியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஜூன் 2 - வவுனியா பம்பைமடுவில் இராணுவத்தினரின் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஆயுதக்கிடங்கு ஒன்று வெடித்துச் சிதறியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். (தமிழ்நெட்), (சண்டே டைம்ஸ்) பதிவு
- ஜூன் 3 - வவுனியா பம்பைமடு இராணுவ பீரங்கி தளத்தின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுத்தி, ஆயுதத் தளபாடங்களையும் இராணுவ கவச வாகனங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகப் புலிகள் கூறியுள்ளனர். (பிபிசி)
- ஜூன் 3 - கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் உடல்கள் இரத்தினபுரியில் மீட்கப்பட்டன. (தமிழ்நெட்)
- ஜூன் 7 - கொழும்பு, வெள்ளவத்தையில் விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக் காவற்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி உள்ளனர். (பிபிசி)
- ஜூன் 8 - புத்தளம், வென்னப்புவவில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (தமிழ்நெட்)
- ஜூன் 13 - திருகோணமலையில் மெர்சி கோர்ப்ஸ் என்ற அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டார். (பிபிசி), (புதினம்)
- ஜூன் 19 - தமிழ்நெட் இணையத்தளத்தை இலங்கை அரசு தடை செய்தது. (புதினம்)
- ஜூன் 20 - கிழக்கு இலங்கையில் தாம் 30 விடுதலைப் புலிகளைக் கொன்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். (பிபிசி)
- ஜூன் 21 - யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். (புதினம்)
- ஜூன் 22 - வவுனியாவில் மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். (புதினம்) (ரொய்ட்டர்ஸ்)
- ஜூன் 28 - அம்பாறை, திருக்கோவில் பிரதேச சபைத் தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தில்லைநாதன் உதயகுமார் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டார். (புதினம்)