வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் பெப்ரவரி 2008
- பெப்ரவரி 29:
- பெப்ரவரி 28:
- பெப்ரவரி 23:
- கொழும்பு கல்கிசையில் பேருந்து ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- பெப்ரவரி 22:
- கிழக்கு மாகாணம் பொத்துவிலில் 11 மற்றும் 13 வயது மாணவர்களின் உடல்கள் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டன. (டெய்லிமிரர்)
- கிளிநொச்சி பூநகரியில் இலங்கை வான்படை நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 4 சிறார்கள் உள்ளிட்ட 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 11 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- பெப்ரவரி 16:
- மன்னாரில் பண்டிவிரிச்சானிலும், பாலமோட்டையிலும் இலங்கைப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் 11 படையினர் கொல்லப்பட்டு 23 பேர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- பெப்ரவரி 13:
- வவுனியாவில் தட்டான்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- பெப்ரவரி 12:
- மன்னார் தள்ளாடி இலங்கைப் படையினரின் ஆட்டிலெறிப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டு 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். (புதினம்), {டெய்லிமிரர்)
- பெப்ரவரி 6:
- இலங்கைக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். (புதினம்)
- பெப்ரவரி 4:
- மணலாறுப் பகுதியில் பேருந்து ஒன்று கிளைமோர்த் தாக்குதலில் சிக்கியதில் 10 பொதுமக்கள், 2 படையினர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர்.(டெய்லிமிரர்)
- இலங்கை, மொனராகல புத்தல காட்டுப்பகுதியில் உழவூர்தி ஒன்று கிளைமோர்த் தாக்குதலில் சிக்கியதில் படையினர் மூவர் படுகாயமடைந்தனர். (டெய்லிமிரர்)
- பெப்ரவரி 3:
- பெப்ரவரி 2:
- இலங்கையின் மாத்தளை மாவட்டம் தம்புள்ள என்ற இடத்தில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டு, 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (பிபிசி), (புதினம்)