வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் பெப்ரவரி 2008
- பெப்ரவரி 28:
- இஸ்ரேல் வான்படையினர் காசாப் பகுதியில் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் 32 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- கென்யாவில் உள்நாட்டுக் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து கூட்டரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக ஐநாவின் சிறப்புத் தூதர் கோஃபி அனான் அறிவித்தார். (விஓஏ)
- பெப்ரவரி 27:
- இங்கிலாந்தில் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (பிபிசி)
- பெப்ரவரி 24:
- கியூபாவின் அதிபராக பிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவூல் காஸ்ட்ரோ தெரிவுசெய்யப்பட்டார். (பிபிசி)
- பெப்ரவரி 22:
- வடக்கு ஈராக்கிற்கு மேலும் பத்தாயிரம் படையினரை துருக்கி அனுப்பியது. (ராய்ட்டர்ஸ்)
- ஐக்கிய அமெரிக்காவின் பி-2 போர் விமானம் ஒன்று குவாம் தீவில் வீழ்ந்து மோதியது. (பிபிசி)
- பெப்ரவரி 21:
- விண்ணிலிருந்து பூமியை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு செய்மதியான யூஎஸ்ஏ 193ஐ அமெரிக்கக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் பூமிக்கு அதனால் எவ்வித ஆபத்தும் இனி இல்லை எனவும் அமெரிக்கா அறிவித்தது. (ஃபொக்ஸ்நியூஸ்), (அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம்)
- வெனிசுவேலாவில் 46 பேருடன் சென்ற பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது. (ஏஎஃப்பி)
- பெப்ரவரி 20:
- இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் புளோரிடாவுக்கருகில் நடுவானில் மோதியது. (ஏஎஃப்பி)
- அட்லாண்டிஸ் விண்ணோடம் வெற்றிகரமாக பூமி திரும்பியது. (நாசா)
- இந்தோனீசியாவின் சுமாத்திரா தீவின் மேற்குக் கரையில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது. (யூஎஸ்ஜிஎஸ்)
- பெப்ரவரி 19:
- 51 ஆண்டுகள் கியூபாவின் ஜனாதிபதியாகவும் இராணுவத் தலைவராகவும் இருந்த பிடெல் காஸ்ட்ரோ தனது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (ஏஃப்பி)
- பெப்ரவரி 17:
- கொசோவோ நாடாளுமன்றம் சேர்பியாவிடமிருந்து ஒருதலைப் பட்சமாக விடுதலையாவதாக அறிவித்தது. (பிபிசி)
- கொசோவோ விடுதலையை இலங்கை அரசு நிராகரித்தது. (ஏஎஃப்பி)
- ஆப்கானிஸ்தான், கண்டகார் நகரில் தற்கொலைக் குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- பெப்ரவரி 16:
- பாகிஸ்தானில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- கொசோவோவின் விடுதலையை ஞாயிறு, பெப்ரவரி 17 இல் தாம் அறிவிக்கப்போவதாக அதன் பிரதமர் ஹஷீம் தாச்சி தெரிவித்தார். (ஏஎஃப்பி)
- பெப்ரவரி 13:
- ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக ஆஸ்திரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார். (ஏபிசி)
- பெப்ரவரி 11:
- கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். (ஏபிசி), (ஏஜ்)
- பெப்ரவரி 9:
- இலங்கை அனுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீபதி சூரியராச்சி கொல்லப்பட்டார். (புதினம்)
- பெப்ரவரி 7:
- நாசாவின் அட்லாண்டிஸ் விண்ணோடம் ஏழு விண்வெளி வீரர்களுடன் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது. (ஃபொக்ஸ் நியூஸ்)
- காதலர் தினம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் குணால் மும்பாயில் தற்கொலை செய்து கொண்டார். (தட்ஸ்டமில்)
- பெப்ரவரி 5:
- இந்தியாவின் ஆன்மிக குரு மகரிஷி மகேஷ் யோகி தனது 91வது அகவையில் நெதர்லாந்தில் காலமானார். (பிபிசி)
- ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் வீசிய கடும் சூறாவளியில் சிக்கி குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- பெப்ரவரி 4:
- சாட் தலைநகர் என்ஜமினாவிலிருந்து போராளிகள் வெளியேறினர். (அசோசியேட்டட் பிரஸ்)
- பெப்ரவரி 3:
- மேற்கு ருவாண்டாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- பெப்ரவரி 2:
- சாட் தலைநகர் என்ஜமினாவினுள் அந்நாட்டுப் போராளிகள் நுழைந்து அதிபர் மளிகையைச் சுற்றி வளைத்தனர். லிபியத் தலைவர் கேணல் கடாபியின் மத்தியஸ்தத்துடனான யுத்த நிறுத்தத்திற்கு சாட் போராளிகள் இணங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. (பிபிசி)
- பெப்ரவரி 1:
- இந்தியக் கடற்படையின் 2வது மிகப்பெரிய கப்பலான "ஜலஷ்வா" விபத்துக்குள்ளானதில் 5 மாலுமிகள் கொல்லப்பட்டனர். (இந்தியன் எக்ஸ்பிரஸ்)