வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் பெப்ரவரி 2009
- பெப்ரவரி 15: பாகிஸ்தானில் சுவாட் பள்ளத்தாக்கில் 10 நாள் போர் நிறுத்தத்தை தலிபான்கள் அறிவித்தனர். (பிபிசி)
- பெப்ரவரி 14: பாகிஸ்தானில் தெற்கு வாசிரிஸ்தானில் அமெரிக்க வானூர்திகள் வீசிய ஏவுகணை வீச்சில் 25 பொது மக்கள் கொல்லப்பட்டனர். (நியூயோர்க் டைம்ஸ்)
- பெப்ரவரி 13: ஒரிசாவில் புவனேஸ்வர் நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர். (தாய்இந்தியன் செய்திகள்)
- பெப்ரவரி 12: நியூயோர்க்கில் விமானம் ஒன்று குடிமனை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- பெப்ரவரி 11: மோர்கன் சுவாங்கிராய் சிம்பாப்வேயின் புதிய தலைமை அமைச்சரானார். (பிபிசி)
- பெப்ரவரி 10: ஓக்லகோமாவில் லோன் குரோவ் என்ற இடத்தில் நிகழ்ந்த சூறாவளியில் 8 பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர். (ஓக்லகோமா)
- பெப்ரவரி 9:
- எகிப்தில் சக்காரா என்ற இடத்தில் 2,600 ஆண்டுகள் பழமையான பண்டைய எகிப்தின் 30 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. (ஏபி)
- கிரேக்கத்தில் லீக்கயோன் குன்றில் சூசுவின் பிறந்த இடம் கண்டுபிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. (பொக்ஸ் செய்திகள்)
- பெப்ரவரி 8: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பரவிய காட்டுத்தீ காரணமாக குறைந்தது 66 பேர் கொல்லப்பட்டனர். நானூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகின. (ஏபிசி)
- பெப்ரவரி 7: மடகஸ்காரில் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது காவற்துறையினர் சுட்டதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- பெப்ரவரி 5: ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தில் 503வது விக்கெட்டை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனையை முறியடித்தார். (ஸ்போர்ட்ஸ்24)
- பெப்ரவரி 1: 1744 இல் மூழ்கிய விக்டரி என்ற பிரித்தானியப் போர்க்கப்பலின் பகுதிகள் ஆங்கிலக் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டன. (தி ஏஜ்)