வால்டர் ராபின்ஸ்
வால்டர் ராபின்ஸ் (Walter Robins, பிறப்பு: சூன் 3 1906, இறப்பு: திசம்பர் 12 1968), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 612 ஓட்டங்கள் எடுத்தார். இதில் அதிகபட்சமாக 108 ஓட்டங்களை எடுத்தார். இதில் 1நூறு ஓட்டங்களையும் 3 அரை நூறு ஓட்டங்களையும் எடுத்தார். 379 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1929 -37 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1] |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுராபின்ஸ் 1906 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி ஸ்டாஃபோர்டில் பிறந்தார். இவரது தந்தை விவியன் ஹாரி ராபின்ஸ் (1880-1963), முதல் உலகப் போருக்கு முன்பு ஸ்டாஃபோர்ட்ஷையருக்காக மைனர் கவுன்டி துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியவர், நேர் விலகு பந்து வீச்சாளராகவும் வலது கை மட்டையாளராகவும் இருந்தார் [1] [2] 1917 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் லண்டனுக்கு குடிபெயர்ந்தது. அங்கு, வால்டர் ராபின்ஸ் ஹைகேட் பள்ளியில் பயின்றார் . [1] இவர் முதலில் தூட்ப்பாட்டத்தினை தனது தந்தையால் பயிற்றுவிக்கப்பட்டார்.
ஹைகேட்டில், ராபின்ஸ் முதல் லெவன் அணியில் , 1922 முதல் 1925 வரை நான்கு ஆண்டுகள் விளையாடினார். தனது இறுதி ஆண்டில் தலைவராக இருந்தார், அதில் இவர் 62.76 என்ற மட்டையாட்ட சராசரியில் 816 ஓட்டங்கள் எடுத்தார், மேலும் 15.18 என்ற பந்துவீச்சு சராசரியில் 60 இழப்புகளை வீழ்த்தினார். இந்த புள்ளிவிவரங்களில் ஆல்டென்ஹாம் பள்ளிக்கு எதிராக எடுத்த 206 ஓட்டங்களும் அடங்கும்; [3] இவரது பன்முக திறனுக்காக இவரை விஸ்டன் , "இந்த ஆண்டின் சிறந்த பள்ளி மாணவர்களில் ஒருவர்" எனக் குறிப்பிட்டது. [1] 1925 ஆம் ஆண்டு கோடையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு முன்பு, ராபின்ஸ் முதல் தரத் துடுப்பட்டத்தில் அறிமுகமானார், இவர் கவுண்டி வாகையாளர் தொடரில் மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். [3] ஆகஸ்ட் 19 அன்று வொர்செஸ்டர்ஷையர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்த போட்டி நடைபெற்றது. இவர் தனது ஒரே ஆட்டப் பகுதியில் 0 ஓட்டங்களுக்குஆட்டமிழந்தார், பந்து வீசவில்லை. [4]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுராபின்ஸ் தனது துடுப்பாட்ட வாழ்க்கை முழுவதிலும் ஒரு தொழில் முறை அற்ற போட்டிகளில் விளையாடினார்.மேலும் செல்வந்தராக இல்லாததால், 1928 இல் கேம்பிரிட்ஜிலிருந்து பட்டம் பெறாமல் இவர் வேலை தேட வேண்டியிருந்தது. இதன் விளைவாக,இவரால் பெரும்பாலும் மாவட்ட மற்றும் சர்வதேச மட்டத்தில் தனது துடுப்பாட்ட வாழ்க்கையைத் தொடர இயலாமல் போனது.ஆரம்பத்தில் இவர் சர் ஜூலியன் கானுக்காக தளபாடங்கள் தொழிலில் பணியாற்றினார். தீவிர துடுப்பாட்ட ஆர்வலரான கான், தனது தனிப்பட்ட லெவன் அணியின் முதுகெலும்பாக அமைந்த ஏராளமான துடுப்பாட்ட வீரர்களை வேலைக்கு அமர்த்தினார், இது 1930 களில் முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. பின்னர், ராபின்ஸ் ஒரு வெற்றிகரமான குடும்ப காப்பீட்டு தரகு நிறுவனத்தில் பணிபுரிந்தார், இது கானின் உதவியுடன் நிறுவப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது, ராபின்ஸ் ராயல் விமானப்படையில் பணியாற்றினார். 1943 இல், லார்ட்ஸில் நடந்த இரண்டு நாள் போட்டியில், ஆஸ்திரேலிய கீத் கார்மோடி தலைமையிலான டொமினியன்ஸ் லெவன் அணிக்கு எதிராக இங்கிலாந்து லெவன் அணியின் தலைவராக இருந்தார். டொமினியன்ஸ் அணியில் எதிர்கால ஆஸ்திரேலிய தேர்வுத் துடுப்பாட்ட பன்முக வீரரான கீத் மில்லர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் தேர்வுத் துடுப்பாட்ட பந்து வீச்சாளர் லியரி கான்ஸ்டன்டைன் ஆகியோர் இருந்தனர். இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து லெவன் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [5]