வால்மீகி நாயக்கர்

இந்திய அரசியல்வாதி

வால்மீகி நாயக் (Valmiki Nayak) (5 சூன் 1951 - 17 சூலை 2021) இந்திய அரசியல்வாதி மற்றும் சித்தாப்புரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து கர்நாடக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். [1]

வால்மீகி நாயக்கர்
சட்டப் பேரவை உறுப்பினர், கர்நாடகா
பதவியில்
2009–2013
முன்னையவர்மல்லிகார்ச்சுன் கர்கெ
பின்னவர்பிரியங்க் எம். கார்கே
தொகுதிசித்தாப்புரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு05-சூன்-1951 [1]
வாடி, Hyderabad State, இந்தியா
இறப்பு19-மார்ச்-2021 (வயது 69)
வாடி, கருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்சோனா பாய்
பிள்ளைகள்இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் [1]
வாழிடம்வாடி [1]
கல்விபல்கலைக்கழக முந்தைய படிப்பு [1]
வேலைதொழிலாளி [1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

வால்மீகி நாயக் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இந்திய சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஏசிசி லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பு வரை படித்தார். வால்மீகி நாயக் சோனா பாயை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். [1]

அரசியல் வாழ்க்கை

தொகு

1986-87 ஆம் ஆண்டு வாடியில் மண்டல் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். [2] இவர் 1999 கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாபுராவ் சவானை எதிர்த்து சகாபாத்தில் போட்டியிட்டு 7866 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[3] பின்னர் அவர் 2008 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் சித்தப்பூரில் இருந்து மல்லிகார்ச்சுன் கார்கேவிடம் தோற்கடிக்கப்பட்டார்.[4] குல்பர்கா லோக்சபா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக 15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மல்லிகார்ச்சுன் கார்கேவால் காலியான ஒரு தொகுதியான சித்தப்பூரில் இருந்து 2009 இடைத்தேர்தலில் பிரியங்க் எம். கார்கேவை ( மல்லிகார்சூன் கார்கேவின் மகன்) எதிர்த்து வால்மீகி நாயக் வெற்றி பெற்றார். [5] இருப்பினும் அவர் 2013 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டு பிரியங்க் எம். கார்கேவிடம் தோற்றார்.[6]

இறப்பு

தொகு

காலை நடைப்பயணத்தின் போது இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது மற்றும் குல்பர்காவில் உள்ள ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். அவரது உடல் பின்னர் அவரது சொந்த இடமான வாடிக்கு மாற்றப்பட்டது. அங்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. [2][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Member Bioprofile - Valmiki Nayak" (PDF). kla.kar.nic.in. 2014-09-29. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
  2. 2.0 2.1 Staff Correspondent (2021-03-19). "Valmiki Naik, former BJP MLA, passes away" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/valmiki-naik-former-bjp-mla-passes-away/article34112242.ece. 
  3. "Shahabad Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
  4. "Chitapur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
  5. "Chittapur Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
  6. "ಹದಿನಾಲ್ಕನೇ ಕರ್ನಾಟಕ ವಿಧಾನ ಸಭೆ" [Fourteenth Karnataka Legislative Assembly]. kla.kar.nic.in (in ஆங்கிலம் and கன்னடம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
  7. "ವಾಲ್ಮಿಕಿ ನಾಯಕ ನಿಧನ ಲಂಬಾಣಿ ಸಮುದಾಯಕ್ಕೆ ತುಂಬಲಾರದ ನಷ್ಟ : ಸಚಿವ ಪ್ರಭು ಚವ್ಹಾಣ್ Valmiki Nayak death-Lamani society-Prabhu Chavhan - Lokadarshan Daily Kannada News". www.lokadarshan.news. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்மீகி_நாயக்கர்&oldid=3823996" இலிருந்து மீள்விக்கப்பட்டது