விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 25
ஆகத்து 25: உருகுவை - விடுதலை நாள் (1825)
- 1609 – இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி (படம்) தனது முதலாவது தொலைநோக்கியை (படம்) வெனிசில் அறிமுகப்படுத்தினார்.
- 1630 – இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி இராச்சியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1803 – யாழ்ப்பாணம் பனங்காமப் பற்று மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவைத் தாக்கிக் கைப்பற்றினான். விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
- 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வாசிங்டன் எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் அமெரிக்கக் காங்கிரசு நூலகம், அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளால் பாரிசு விடுவிக்கப்பட்டது.
- 2012 – வொயேஜர் 1 விண்கலம் விண்மீனிடைவெளிக்குச் சென்ற முதலாவது மனிதரால் உருவாக்கப்பட்ட விண்பொருள் என்ற சாதனையை நிலைநாட்டியது.
கிருபானந்த வாரியார் (பி. 1906) · எஸ். ஜி. கிட்டப்பா (பி. 1906) · வ. சு. செங்கல்வராயர் (இ. 1971)
அண்மைய நாட்கள்: ஆகத்து 24 – ஆகத்து 26 – ஆகத்து 27