விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 20
- 1498 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்தர் சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது.
- 1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
- 1857 – கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் தில்லியைக் கைப்பற்றின. சிப்பாய்க் கிளர்ச்சி (படம்) முடிவுக்கு வந்தது.
- 1909 – நான்கு பிரித்தானியக் குடியேற்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தென்னாபிரிக்க ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் வாக்களித்தது.
- 1990 – சவுக்கடி படுகொலைகள்: இலங்கை, மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்றில் சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டனர்.
- 2001 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" அறிவித்தார்.
இரா. இராகவையங்கார் (பி. 1870) · அன்னி பெசண்ட் (இ. 1933) · டி. ஆர். ராஜகுமாரி (இ. 1999)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 19 – செப்டெம்பர் 21 – செப்டெம்பர் 22