விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர்
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 14:12 மணி செவ்வாய், திசம்பர் 24, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
செப்டம்பர் 1: உசுபெக்கிசுத்தான் - விடுதலை நாள் (1991)
- 1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் (படம்) பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.
- 1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.
- 1914 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1923 – டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.
- 1939 – செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்து வைத்தன.
- 1939 – ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.
- 1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.
அ. வரதநஞ்சையர் (பி. 1877) · செம்பை வைத்தியநாதர் (பி. 1895) · தனிநாயகம் அடிகள் (இ. 1980)
அண்மைய நாட்கள்: ஆகத்து 31 – செப்டெம்பர் 2 – செப்டெம்பர் 3
செப்டம்பர் 2: உலகத் தேங்காய் நாள்
- 1666 – லண்டனில் மூண்ட பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித பவுல் பேராலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. சப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் "மிசூரி" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.
- 1945 – வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் ஹோ சி மின் (படம்) தலைமையில் ஆட்சியை அமைத்தது.
- 1946 – பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.
- 1960 – திபெத்திய வரலாற்றில் முதல்தடவையாக மத்திய திபெத்திய நிருவாகத்தின் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இந்நாளை அவர்கள் 'சனநாயக நாள்' எனக் கொண்டாடுகிறார்கள்.
- 1988 – இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987: இலங்கையின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன வட-கிழக்கு மாகாணம் என இணைக்கப்பட்டது.
அருள் செல்வநாயகம் (இ. 1973) · வி. ச. காண்டேகர் (இ. 1976) · வி. தர்மலிங்கம் (இ. 1985)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 1 – செப்டெம்பர் 3 – செப்டெம்பர் 4
செப்டம்பர் 3: கத்தார் - விடுதலை நாள் (1971)
- 301 – உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ உருவாக்கப்பட்டது.
- 1759 – இலங்கை இடச்சு அரசு புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது.
- 1783 – அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் 1783 பாரிசு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான செருமனியின் படையெடுப்பை அடுத்து பிரான்சு, அமெரிக்கா, பிரித்தானியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகியன நேசப் படைகள் என்ற அமைப்பை ஏற்படுத்தி செருமனி மீது போர் தொடுத்தன.
- 1976 – அமெரிக்காவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கியது (படம்).
- 2004 – உருசியாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வில் 186 மாணவர்கள் உட்பட மொத்தம் 334 பேர் கொல்லப்பட்டனர்.
சி. இலக்குவனார் (இ. 1973) · ப. நீலகண்டன் (இ. 1992) · கே. எஸ். ராஜா (இ. 1994)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 2 – செப்டெம்பர் 4 – செப்டெம்பர் 5
- 1666 – இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.
- 1781 – லாஸ் ஏஞ்சலஸ் நகரம் எசுப்பானியக் குடியேறிகள் 44 பேரால் அமைக்கப்பட்டது.
- 1870 – பிரெஞ்சுப் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் (படம்) பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். பிரெஞ்சு மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.
- 1886 – 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி அமெரிக்கப் பழங்குடிகளின் தலைவர் யெரொனீமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தார்.
- 1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன் தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஈஸ்ட்மேன் கோடாக் என்பதை வணிகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
- 1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 1998 – இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
தி. சதாசிவம் (பி. 1902) · க. பாலசிங்கம் (இ. 1952) · குமாரி ருக்மணி (இ. 2007)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 3 – செப்டெம்பர் 5 – செப்டெம்பர் 6
செப்டம்பர் 5: ஆசிரியர் நாள் (இந்தியா)
- 1698 – உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு (படம்) அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார்.
- 1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு தேசிய மாநாடு பயங்கர ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
- 1882 – முதலாவது அமெரிக்கத் தொழிலாளர் நாள் ஊர்வலம் நியூயார்க்கில் இடம்பெற்றது.
- 1932 – பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
- 1972 – செருமனியில் மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இசுரேலிய வீரர்களின் மீது பாலத்தீனப் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 – கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்: மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
வ. உ. சிதம்பரம்பிள்ளை (பி. 1872) · ஔவை துரைசாமி (பி. 1903) · பொ. வே. சோமசுந்தரனார் (பி. 1909)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 4 – செப்டெம்பர் 6 – செப்டெம்பர் 7
செப்டம்பர் 6: சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)
- 1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
- 1803 – பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் (படம்) வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்.
- 1873 – இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது.
- 1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
- 1965 – இந்தியா லாகூர் நகரைத் தாக்கியது. இந்திய-பாக்கித்தான் போர் முழு அளவில் ஆரம்பமானது.
- 1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
இலங்கையர்கோன் (பி. 1915) · சாலை இளந்திரையன் (பி. 1930) · பாரூக் மரைக்காயர் (பி. 1937)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 5 – செப்டெம்பர் 7 – செப்டெம்பர் 8
செப்டம்பர் 7: பிரேசில் - விடுதலை நாள் (1822)
- 70 – உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது.
- 1911 – இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் லண்டன் நகர் மீது 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர் (படம்). 50 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
- 1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.
- 1977 – பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.
- 1996 – யாழ்ப்பாணத்தில் கைதடியில் கிருசாந்தி குமாரசாமி என்ற மாணவி இலங்கை இராணுவத்தினரால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
சங்கரதாசு சுவாமிகள் (பி. 1867) · பி. பானுமதி (பி. 1925) · வசுந்தரா தேவி (இ. 1988)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 6 – செப்டெம்பர் 8 – செப்டெம்பர் 9
செப்டம்பர் 8: உலக எழுத்தறிவு நாள், மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991)
- 1514 – நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன.
- 1727 – இங்கிலாந்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.
- 1900 – டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1905 – தெற்கு இத்தாலியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1978 – கறுப்பு வெள்ளி: தெகுரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது ஈரானில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.
- 2016 – நாசா ஒசைரிசு-ரெக்சு (படம்) என்ற தனது சிறுகோள்-நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது 101955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023-இல் பூமி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவன் (பி. 1913) · சின்னப்பா தேவர் (இ. 1978) · குன்னக்குடி வைத்தியநாதன் (இ. 2008)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 7 – செப்டெம்பர் 9 – செப்டெம்பர் 10
செப்டம்பர் 9: தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991)
- 1543 – மேரி இசுட்டுவர்ட் (படம்) 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது இசுக்காட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.
- 1776 – அமெரிக்கக் காங்கிரசு அதன் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு அதிகாரபூர்வமாக அமெரிக்க ஐக்கிய நாடு எனப் பெயரிட்டது.
- 1799 – பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
- 1839 – ஜான் எர்செல் முதலாவது கண்ணாடித் தட்டு ஒளிப்படத்தை எடுத்தார்.
- 1944 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத்-சார்பு அரசு பதவியேற்றது.
- 1969 – கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் நடுவண் அரசு முழுவதும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
- 1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
- 1993 – பலத்தீன விடுதலை இயக்கம் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தது.
கல்கி (பி. 1899) · இராம. வீரப்பன் (பி. 1925) · ஆனந்த குமாரசுவாமி (இ. 1947)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 8 – செப்டெம்பர் 10 – செப்டெம்பர் 11
- 1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர்.
- 1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
- 1780 – இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில் பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்தது.
- 1898 – ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் (படம்) சுவிட்சர்லாந்தில் கொலை செய்யப்பட்டார்.
- 2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் முழு உறுப்பு நாடாக இணைந்தது.
- 2008 – வரலாற்றில் மிகப்பெரும் அறிவியல் கருவியான பெரிய ஆட்ரான் மோதுவி ஜெனீவாவில் இயங்க ஆரம்பித்தது.
பின்னத்தூர் அ. நாராயணசாமி (பி. 1862) · எல். டி. சாமிக்கண்ணு (இ. 1925) · ஏ. கே. செட்டியார் (இ. 1983)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 9 – செப்டெம்பர் 11 – செப்டெம்பர் 12
- 1803 – தில்லி போர்: இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் போது, பிரித்தானியப் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.
- 1893 – சிகாகோவில் இடம்பெற்ற முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தை அமெரிக்கர்களுக்கு அறிமுகம் செய்தார்.
- 1906 – மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..
- 1973 – சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. அரசுத்தலைவர் சால்வடோர் அயேந்தே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் அகஸ்தோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 2001 – நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் (படம்) மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
டி. கே. சிதம்பரநாதர் (பி. 1882) · பாரதியார் (இ. 1921) · சாண்டில்யன் (இ. 1987)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 10 – செப்டெம்பர் 12 – செப்டெம்பர் 13
- கிமு 490 – மாரத்தான் போர் (படம்): கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் இந்நாளில் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.
- 1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
- 1857 – மத்திய அமெரிக்கா என்ற கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.
- 1948 – முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாக்கித்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
- 1959 – லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1974 – எத்தியோப்பியாவின் பேரரசராக 58 ஆண்டுக் காலம் பதவியில் இருந்த முதலாம் ஹைலி செலாசி இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
சி. வை. தாமோதரம்பிள்ளை (பி. 1832) · ரஞ்சன் (இ. 1983) · சுவர்ணலதா (இ. 2010)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 11 – செப்டெம்பர் 13 – செப்டெம்பர் 14
- 1501 – மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
- 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: போரின் திருப்புமுனையாக பிரித்தானியர் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இச்சமரில் பிரான்சிசு கீ இயற்றிய பாடல் பின்னர் அமெரிக்காவின் தேசியப் பண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1948 – ஐதராபாதில் நுழைந்து அதனை இந்திய ஒன்றியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
- 1953 – நிக்கிட்டா குருசேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1971 – மா சே துங்கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனாவை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் மங்கோலியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1993 – நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்தை வெள்ளை மாளிகை சந்தித்தார் (படம்).
மு. நல்லதம்பி (பி. 1896) · எம். கே. றொக்சாமி (பி. 1932) · ஆர். சூடாமணி (இ. 2010)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 12 – செப்டெம்பர் 14 – செப்டெம்பர் 15
செப்டம்பர் 14: இந்தி மொழி நாள்
- 1752 – கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.
- 1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மாஸ்கோவினுள் நுழைந்தன. உருசியப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.
- 1846 – கோத் படுகொலைகள்: ஜங் பகதூர் ராணாவும் (படம்) அவரது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.
- 1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி செப்டம்பர் 6 இல் இடம்பெற்ற கொலைமுயற்சியில் காயமடைந்து இறந்தார்.
- 1948 – போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியத் தரைப்படை அவுரங்காபாது நகரைக் கைப்பற்றியது.
- 1959 – சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.
பொன்னம்பலம் அருணாசலம் (பி. 1853) · யூ. ஆர். ஜீவரத்தினம் (பி. 1927) · கௌதம நீலாம்பரன் (இ. 2015)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 13 – செப்டெம்பர் 15 – செப்டெம்பர் 16
செப்டம்பர் 15: அனைத்துலக மக்களாட்சி நாள்
- 1830 – லிவர்பூல் முதல் மான்செஸ்டர் வரையான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்ட இதே நாளில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் அசுக்கிசன் உயிரிழந்தார். இவரே வரலாற்றில் தொடருந்து விபத்தில் இறந்த முதலாவது நபராக அறியப்படுகிறார்.
- 1835 – சார்லசு டார்வின் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
- 1916 – முதலாம் உலகப் போர்: முதற்தடவையாக பீரங்கி வண்டிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.
- 1935 – செருமனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.
- 1952 – ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எத்தியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.
- 1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
- 2017 – சனிக் கோளை ஆய்வு செய்வதற்காக 1997 இல் ஏவப்பட்ட காசினி-ஐசென் (படம்) விண்கலம் தன் பணிகளை முடித்துக்கொண்டு அழிந்தது.
அறிஞர் அண்ணா (பி. 1909) · கம்பதாசன் (பி. 1906) · மறைமலை அடிகள் (இ. 1950)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 14 – செப்டெம்பர் 16 – செப்டெம்பர் 17
செப்டம்பர் 16: மெக்சிக்கோ (1810), பப்புவா நியூ கினி (1975) விடுதலை நாள்
- 1959 – முதலாவது வெற்றிகரமான ஒளிநகலி செராக்சு 914 நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1961 – அப்துஸ் சலாம் தலைமையில் விண்வெளி ஆய்வு ஆணையத்தை பாக்கித்தான் நிறுவியது.
- 1963 – மலாயா கூட்டமைப்பு, சிங்கப்பூர், வடக்கு போர்ணியோவின் சபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா (கொடி படத்தில்) உருவாக்கப்பட்டது. ஆனாலும் சிங்கப்பூர் விரைவில் விலகி தனி நாடாகியது.
- 1978 – ஈரானில் தபாசு நகரை 7.4 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்தனர்.
- 2000 – இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.
- 2002 – விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.
எம். எஸ். சுப்புலட்சுமி (பி. 1916) · வி. சிவசாமி (பி. 1933) · தென்கச்சி கோ. சுவாமிநாதன் (இ. 2009)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 15 – செப்டெம்பர் 17 – செப்டெம்பர் 18
- 1795 – மேஜர் பிரேசர் தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின.
- 1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து உருசியாவிடம் கையளிக்கப்பட்டது.
- 1858 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழ்கடல் தொலைத்தந்திக் கம்பிகள் தணக்காய் முனைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பதிக்கப்பட்டன.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர் (படம்): மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
- 1948 – ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.
- 1949 – திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினர்.
- 2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
தந்தை பெரியார் (பி. 1879) · திரு. வி. க (இ. 1953) · எம். ஆர். ராதா (இ. 1979)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 16 – செப்டெம்பர் 18 – செப்டெம்பர் 19
- 1812 – மாஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெத்ரோவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.
- 1906 – ஆங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் உயிரிழந்தனர்.
- 1919 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1948 – ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை போலோ நடவடிக்கையை இந்தியா கைவிட்டது.
- 1961 – ஐநாவின் பொதுச்செயலர் டாக் அமாசெல்டு (படம்) காங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
- 2014 – ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் 55.3% இசுக்கொட்லாந்து மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.
பரலி சு. நெல்லையப்பர் (பி. 1889) · இரட்டைமலை சீனிவாசன் (இ. 1945) · க. வேந்தனார் (இ. 1966)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 17 – செப்டெம்பர் 19 – செப்டெம்பர் 20
செப்டம்பர் 19: செயிண்ட் கிட்சும் நெவிசும் – விடுதலை நாள் (1983)
- 1658 – யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.
- 1778 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 1881 – சூலை 2-இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.
- 1893 – உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1893 – சுவாமி விவேகானந்தர் (படம்) சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
- 1991 – ஏட்சி பனிமனிதன் இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான்.
கே. பி. சுந்தராம்பாள் (இ. 1980) · உ. ஸ்ரீநிவாஸ் (இ. 2014) · பொ. பூலோகசிங்கம் (இ. 2019)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 18 – செப்டெம்பர் 20 – செப்டெம்பர் 21
- 1498 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்தர் சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது.
- 1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
- 1857 – கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் தில்லியைக் கைப்பற்றின. சிப்பாய்க் கிளர்ச்சி (படம்) முடிவுக்கு வந்தது.
- 1909 – நான்கு பிரித்தானியக் குடியேற்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தென்னாபிரிக்க ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் வாக்களித்தது.
- 1990 – சவுக்கடி படுகொலைகள்: இலங்கை, மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்றில் சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டனர்.
- 2001 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" அறிவித்தார்.
இரா. இராகவையங்கார் (பி. 1870) · அன்னி பெசண்ட் (இ. 1933) · டி. ஆர். ராஜகுமாரி (இ. 1999)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 19 – செப்டெம்பர் 21 – செப்டெம்பர் 22
- 1776 – நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது.
- 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
- 1898 – பேரரசி டோவாகர் சிக்சி (படம்) சீனாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். நூறு-நாள் சீர்திருத்த எழுச்சி முடிவுக்கு வந்தது.
- 1942 – பெரும் இன அழிப்பு: யோம் கிப்பூர் யூத விடுமுறை நாளன்று மேற்கு உக்ரைனில் 2588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
- 1949 – மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.
- 1989 – இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எம். டி. பார்த்தசாரதி (பி. 1910) · சரோஜினி வரதப்பன் (பி. 1921) · தமிழ்ஒளி (பி. 1924)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 20 – செப்டெம்பர் 22 – செப்டெம்பர் 23
செப்டம்பர் 22: பல்கேரியா (1908), மாலி (1960) - விடுதலை நாள்
- 1896 – பிரித்தானியாவின் அரச வம்சத்தில் விக்டோரியா மகாராணி அவருடைய தாத்தா மூன்றாம் ஜார்ஜை விட அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையைப் பெற்றார்.
- 1914 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது (படம்).
- 1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
- 1970 – மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் பதவி விலகினார்.
- 1995 – நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
- 2014 – நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
விந்தன் (பி. 1916) · பி. பி. ஸ்ரீநிவாஸ் (பி. 1930) · அசோகமித்திரன் (பி. 1931)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 21 – செப்டெம்பர் 23 – செப்டெம்பர் 24
- 1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
- 1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. சமய சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
- 1803 – இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (படம்) அசாயே என்ற இடத்தில் பிரித்தானியாவுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்றது.
- 1846 – நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1932 – இப்னு சவூது தலைமையில் சவூதி அரேபியா ஒன்றிணைந்தது.
- 1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.
- 1983 – இலங்கை, மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த 41 தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.
கு. அழகிரிசாமி (பி. 1923) · பி. யு. சின்னப்பா (இ. 1951) · ஷோபா (பி. 1962)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 22 – செப்டெம்பர் 24 – செப்டெம்பர் 25
செப்டம்பர் 24: கினி பிசாவு – விடுதலை நாள் (1973)
- 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.
- 1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டனர்.
- 1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார்.
- 1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் (படம்) அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
- 1932 – மாநில சட்டமன்றங்களில் தலித்துகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் பூனா ஒப்பந்ததிற்கு மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.
- 1993 – கம்போடியாவில் மன்னராட்சி மீண்டும் நிறுவப்பட்டு, நொரடோம் சீயனூக் மன்னராக முடிசூடினார்.
- 2015 – சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 1,100 பேர் உயிரிழந்தனர்
ஏ. வி. பி. ஆசைத்தம்பி (பி. 1929) · பம்மல் சம்பந்த முதலியார் (இ. 1964) · பத்மினி (இ. 2006)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 23 – செப்டெம்பர் 25 – செப்டெம்பர் 26
- 1862 – செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1906 – கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை எசுப்பானியாவில் இயக்கிக் காட்டப்பட்டது. தொலைக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
- 1926 – அடிமை வணிகத்தைத் தடுக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் உலக நாடுகள் அணியின் ஆதரவில் கையெழுத்திடப்பட்டது.
- 1959 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (படம்) சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தார்.
- 1983 – வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.
- 1992 – செவ்வாய்க் கோளை நோக்கிய "செவ்வாய் நோக்கி" என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 11 மாதங்களின் பின்னர் இவ்விண்கலம் செயலிழந்தது.
உடுமலை நாராயணகவி (பி. 1899) · எஸ். பி. பாலசுப்பிரமணியம் (இ. 2020)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 24 – செப்டெம்பர் 26 – செப்டெம்பர் 27
- 1580 – சர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.
- 1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.
- 1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம். 1.2 மில்லியம் அமெரிக்கப் போர் வீரர்கள் பங்குபற்றினர்.
- 1959 – சப்பானை சூறாவளி வேரா தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர், 1.6 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
- 1984 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை சீனாவிடம் 1997 இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.
- 1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீரும் அருந்தா உண்ணா நோன்பு இருந்து உயிர்துறந்தார்.
பாபநாசம் சிவன் (பி. 1890) · பெரியசாமி தூரன் (பி. 1908) · தேசிக விநாயகம்பிள்ளை (இ. 1954)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 25 – செப்டெம்பர் 27 – செப்டெம்பர் 28
செப்டம்பர் 27: உலக சுற்றுலா நாள்
- 1590 – திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.
- 1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.
- 1983 – ரிச்சர்ட் ஸ்டால்மன் (படம்) குனூ செயற்றிட்டத்தை அறிவித்தார்.
- 1994 – மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஆங் சான் சூச்சி உருவாக்கினார்.
- 1996 – ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அரசுத்தலைவர் புரானுதீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அரசுத்தலைவர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
- 2007 – நாசா டோன் விண்கலத்தை சிறுகோள் பட்டையை நோக்கி ஏவியது.
ஜி. வரலட்சுமி (பி. 1926) · நாகேஷ் (பி. 1933) · சீர்காழி இரா. அரங்கநாதன் (இ. 1976)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 26 – செப்டெம்பர் 28 – செப்டெம்பர் 29
- 1795 – யாழ்ப்பாணத்தை தளபதி இசுட்டுவர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.
- 1871 – அடிமைகளுக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் தீர்மானத்தை பிரேசில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
- 1889 – நிறை மற்றும் அளவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோல் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.
- 1928 – அலெக்சாண்டர் பிளெமிங் (படம்) தனது ஆய்வுகூடத்தில் பாக்டீரியாக் கொல்லி ஒன்று வளருவதை அவதானித்தார். இது பின்னர் பெனிசிலின் எனப் பெயர் பெற்றது.
- 1994 – பால்ட்டிக் கடலில் சென்று கொண்டிருந்த எஸ்தோனியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் உயிரிழந்தனர்.
- 2018 – இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுகளில் இடம்பெற்ற 7.5 Mw அளவு நிலநடுக்கம் பெரும் ஆழிப்பேரலையை ஏற்படுத்தியதில் 4,340 பேர் உயிரிழந்தனர், 10,679 பேர் காயமடைந்தனர்.
வீ.கே (பி. 1920) · கே. ஏ. தங்கவேலு (இ. 1994)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 27 – செப்டெம்பர் 29 – செப்டெம்பர் 30
- 1717 – ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நகரின் பல தொன்மை வாய்ந்த கட்டடங்கள் அழிந்தன.
- 1923 – கட்டளைப் பலத்தீன் (படம்) நிறுவப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனின் கீவ் நகரில் பாபி யார் என்ற இடத்தில் குறைந்தது 33,771 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
- 1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.
- 2006 – பிரேசிலில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 154 பேர் உயிரிழந்தனர்.
- 2011 – வாச்சாத்தி வன்முறை: தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய 269 அதிகாரிகளும், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 17 பேரும் குற்றவாளிகள் என இந்தியாவின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இராஜா அண்ணாமலை (பி. 1881) · சி. சு. செல்லப்பா (பி. 1912) · அரங்க. சீனிவாசன் (பி. 1920)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 28 – செப்டெம்பர் 30 – அக்டோபர் 1
செப்டம்பர் 30: போட்சுவானா - விடுதலை நாள் (1966)
- 1882 – தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
- 1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து ஏறத்தாழ 500,000 பேரைக் கொன்று குவித்தார்.
- 1993 – லாத்தூர் நிலநடுக்கம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லாத்தூர், ஒசுமனாபாத் நகரங்களில் இடம்பெற்ற 6.2 அளவு நிலநடுக்கத்தில் 9,748 பேர் உயிரிழந்தனர்.
- 2001 – மத்தியப் பிரதேசம், மைன்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர்.
- 2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.
- 2007 – தமிழக சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் (படம்) மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக வாகையாளர் ஆனார்.
இராய. சொக்கலிங்கம் (இ. 1974) · சந்திரபோஸ் (இ. 2010)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 29 – அக்டோபர் 1 – அக்டோபர் 2