செப்டம்பர் 24
நாள்
(செப்டெம்பர் 24 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 24 (September 24) கிரிகோரியன் ஆண்டின் 267 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 268 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 98 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 787 – நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது.
- 1645 – முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன.
- 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.
- 1789 – அமெரிக்க உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது.
- 1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- 1840 – இலங்கை வங்கி தொடங்கப்பட்டது.[1]
- 1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார்.
- 1852 – நீராவி இயந்திரத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது வான்கப்பல் பாரிசில் இருந்து திராப்பெசு வரை 17 மைல் தூரம் பறந்தது.
- 1853 – மெலனீசியாவில் உள்ள நியூ கலிடோனியா தீவுகளை பிரான்சு கைப்பற்றியது.
- 1869 – ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அமெரிக்கா பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதில், தங்க விலை சரிந்தது.
- 1890 – இறுதிக்காலத் தூயோரின் இயேசு கிறிஸ்து சபை பலதுணை மணத்தைக் கைவிட்டது.
- 1898 – அமெரிக்க மிசன் யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமைத்தது.[1]
- 1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
- 1932 – பூனா ஒப்பந்தம்: மாநில சட்டமன்றங்களில் தலித்துகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.
- 1946 – கதே பசிபிக் நிறுவனம் ஆங்காங்கில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1948 – ஒண்டா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1950 – காட்டுத்தீ கனடா, மற்றும் புதிய இங்கிலாந்தின் பெரும் பகுதியை மூடியது. நீல நிலவு ஐரோப்பா வரை தெரிந்தது.
- 1960 – அணுவாற்றலில் இயங்கும் உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் "என்டர்பிரைசு" அமைக்கப்பட்டது.
- 1968 – சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.
- 1972 – இலண்டனில் இருந்து புறப்பட்ட யப்பான் ஏர்லைன்சு 472 வானூர்தி மும்பை சாண்டாகுரூசு வானூர்தி நிலையத்தில் இறங்குவதற்குப் பதிலாக சிறிய ஜூகு வானூர்தி நிலையத்தில் தரையிறங்கி பெரும் சேதமடைந்தது. 11 பேர் காயமடைந்தனர்.
- 1973 – கினி-பிசாவு போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1990 – சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.
- 1993 – கம்போடியாவில் மன்னராட்சி மீண்டும் நிறுவப்பட்டு, நொரடோம் சீயனூக் மன்னராக முடிசூடினார்.
- 1996 – ஐக்கிய நாடுகள் அவையில் 71 நாடுகளின் பிரதிநிதிகள் முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
- 2007 – பர்மாவில் யங்கோன் நகரில் 30,000 முதல் 100,000 வரையானோர் பர்மிய இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 2008 – தாபோ உம்பெக்கி தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
- 2013 – தெற்குப் பாக்கித்தானில் 7.7-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 327 பேர் உயிரிழந்தனர்.
- 2014 – மங்கல்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.
- 2015 – சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 1,100 பேர் உயிரிழந்தனர், 934 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1501 – கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர், சோதிடர் (இ. 1576)
- 1534 – குரு ராம் தாஸ், 4-வது சீக்கிய குரு (இ. 1581)
- 1564 – வில்லியம் ஆடம்சு, ஆங்கிலேய மாலுமி, நாடுகாண் பயணி (இ. 1620)
- 1777 – இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் அரசர் (இ. 1832)
- 1861 – பிகாஜி காமா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)
- 1887 – விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு, இந்தியாவின் தலைமை ஆளுநர், வைசிராய், பிரித்தானிய அரசியல்வாதி (இ. 1952)
- 1896 – எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1940)
- 1898 – சார்லட்டி மூர் சிட்டர்லி, அமெரிக்க வானியலாளர் (இ. 1990)
- 1902 – அயதுல்லா கொமெய்னி, மதத்தலைவர், அரசியல்வாதி, ஈரானின் 1வது அரசுத்தலைவர் (இ. 1989)
- 1929 – ஏ. வி. பி. ஆசைத்தம்பி, தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (இ. 1979)
- 1930 – யோன் யங், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 2018)
- 1936 – சிவந்தி ஆதித்தன், இந்தியத் தொழிலதிபர் (இ. 2013)
- 1937 – பாரதி மணி, தமிழக எழுத்தாளர், நடிகர் (இ. 2021)
- 1941 – தெ. ஞானசுந்தரம், தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர்
- 1946 – மரியா தெரசா உரூசு, சிலி வானியலாளர்
- 1950 – மொகிந்தர் அமர்நாத், இந்தியத் துடுப்பாளர்
- 1976 – ஸ்டீபனி மக்மஹோன், அமெரிக்க மற்போர் வீராங்கனை
- 1985 – இலினோர் காட்டன், கனடிய-நியூசிலாந்து எழுத்தாளர்
- 1989 – பியா உர்ட்சுபாக், பிலிப்பீனிய அழகி
இறப்புகள்
- 366 – லிபேரியஸ் (திருத்தந்தை)
- 1572 – டூப்பாக் அமாரு, இன்காக்களின் கடைசிப் பேரரசர்
- 1834 – பிரேசிலின் முதலாம் பெட்ரோ (பி. 1798)
- 1904 – நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு மருத்துவர் (பி. 1860)
- 1964 – பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகாசிரியர், வழக்கறிஞர், மேடை நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் (பி. 1873)
- 2003 – எட்வர்டு செயித், பாலத்தீனியப் போராளி, பத்திரிகையாளர் (பி. 1935)
- 2004 – இராஜா இராமண்ணா, இந்திய அணு அறிவியலறிஞர் (பி. 1925)
- 2006 – பத்மினி, தென்னிந்திய நடிகை (பி. 1932)
- 2007 – முருகேசு சுவாமிகள், இலங்கை இந்து ஆன்மீகவாதி (பி. 1933)
- 2009 – நாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி. 1932)
- 2012 – திலகன், மலையாளத் திரைப்பட நடிகர் (பி. 1938)
- 2020 – டீன் ஜோன்ஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1961)
சிறப்பு நாள்
- மரபு நாள் (தென்னாப்பிரிக்கா)
- விடுதலை நாள் (கினி-பிசாவு, போர்த்துகலிடம் இருந்து 1973)
- குடியரசு நாள் (டிரினிடாட் மற்றும் டொபாகோ)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 24 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்