மொகிந்தர் அமர்நாத்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

மொகிந்தர் அமர்நாத் பரத்வாஜ் (Mohinder Amarnath Bhardwaj) (பிறப்பு செப்டம்பர் 24, 1950, பாட்டியாலா, இந்தியா) 1969–1989 காலத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடிய ஓர் துடுப்பாட்ட வீரர். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நேரலை ஒளிபரப்புகளிலும் துறை வல்லுநராக ஆட்டவிமரிசனம் செய்துவருகிறார். உடன் விளையாடும் நண்பர்கள் வட்டத்தில் "ஜிம்மி" எனச் செல்லமாக அழைக்கப்படும் இவர் புகழ்பெற்ற முன்னாள் துடுப்பாட்டவீரரும் விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் முதல் அணித்தலைவராகவும் இருந்த லாலா அமர்நாத்தின் மகனாவார். இவரது சகோதரர் சுரிந்தர் அமர்நாத்தும் தேது துடுப்பாட்ட வீரராக இந்திய அணியில் இடம் பெற்றவர். மற்றொரு சகோதரர் ராசீந்தர் அமர்நாத்தும் முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரராக இருந்து தற்போது துடுப்பாட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.

மொகிந்தர் அமர்நாத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மொகிந்தர் அமர்நாத் பரத்வாச்
பட்டப்பெயர்ஜிம்மி
மட்டையாட்ட நடைவலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகப் பந்து வீச்சாளர்
உறவினர்கள்லாலா அமர்நாத், சுரிந்தர் அமர்நாத்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 69)திசம்பர் 24 1969 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசனவரி 11 1988 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 85)சூன் 7 1975 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபஅக்டோபர் 30 1989 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுகள் ஒ.ப.து
ஆட்டங்கள் 69 85
ஓட்டங்கள் 4378 1924
மட்டையாட்ட சராசரி 42.50 30.53
100கள்/50கள் 11/24 2/13
அதியுயர் ஓட்டம் 138 102*
வீசிய பந்துகள் 3676 2730
வீழ்த்தல்கள் 32 46
பந்துவீச்சு சராசரி 55.68 42.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/63 3/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
47/– 23/–
மூலம்: [1], அக்டோபர் 8 2009
மொகிந்தர் அமர்நாத்தின் துடுப்பாட்ட சாதனைகள் - வரைபடம்.


வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகிந்தர்_அமர்நாத்&oldid=3765849" இலிருந்து மீள்விக்கப்பட்டது