செப்டம்பர் 26
நாள்
(செப்டெம்பர் 26 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 26 (September 26) கிரிகோரியன் ஆண்டின் 269 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 270 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 96 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 46 – யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான்.
- 1087 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான்.
- 1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
- 1371 – செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.
- 1580 – சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.
- 1687 – மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்து மீதான வில்லியமின் முற்றுகையை ஆம்ஸ்டர்டம் நகரசபை ஆதரித்து வாக்களித்தது.
- 1687 – ஏதென்சு நகரத்தை முற்றுகையிட்ட உதுமானியரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது.
- 1777 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின.
- 1799 – சூரிக்கில் அலெக்சாந்தர் கொர்சக்கோவ் தலைமையில் இடம்பெற்ற இரண்டாவது சமரில் ஆஸ்திரிய-உருசியப் படைகள் பிரான்சிய-சுவிட்சர்லாந்து படைகளிடம் தோற்றன.
- 1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.
- 1907 – நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.
- 1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம். 1.2 மில்லியம் அமெரிக்கப் போர் வீரர்கள் பங்குபெற்றனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.
- 1950 – கொரியப் போர்: ஐநா ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றின.
- 1953 – ஐக்கிய இராச்சியத்தில் சீனி மீதான பங்கீட்டு முறை நிறுத்தப்பட்டது.
- 1954 – சப்பானின் தொடருந்துப் படகு டோயா மாரு சூறாவளியில் சிக்கி மூழ்கியதில் 1,172 பேர் உயிரிழந்தனர்.
- 1959 – முதல் நாளில் சுடப்பட்டுப் படுகாயமடைந்த இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இறந்தார்.
- 1959 – சப்பானை சூறாவளி வேரா தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர், 1.6 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
- 1960 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம் ரிச்சார்ட் நிக்சனுக்கும், ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் சிகாகோவில் இடம்பெற்றது.
- 1960 – பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
- 1973 – அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் மிகக் குறைந்த நேரத்தில் பறந்து சாதனை நிலைநாட்டியது.
- 1980 – மியூனிக் நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், 211 பேர் காயமடைந்தனர்.
- 1983 – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
- 1984 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை சீனாவிடம் 1997 இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.
- 1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீரும் அருந்தா உண்ணா நோன்பு இருந்து உயிர்துறந்தார்.
- 1997 – இந்தோனேசியாவின் கருடா விமானம் மேடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் உயிரிழந்தனர்.
- 1997 – இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிசு தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.
- 2002 – செனிகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 2007 – வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 60 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
- 2008 – சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற சாதனை படைத்தார்.
- 2009 – பிலிப்பீன்சு, சீனா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளை கெத்சானா சூறாவளி தாக்கியதில் 700 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1820 – ஈஸ்வர சந்திர வித்யாசாகர், இந்திய மெய்யியலாளர், ஓவியர் (இ. 1891)
- 1833 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல்வாதி (இ. 1891)
- 1849 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (இ. 1936)
- 1867 – வின்சர் மெக்கே, அமெரிக்க இயங்குபடக் கலைஞர் (இ. 1934)
- 1876 – எடித் அப்போட், அமெரிக்க பொருளியலாளர், சமூக சேவையாளர் (இ. 1957)
- 1878 – பியதோசி நிகோலயேவிச் கிரசோவ்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1948)
- 1886 – ஆர்ச்சிபால்ட் ஹில், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ. 1977)
- 1888 – தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 1965)
- 1890 – பாபநாசம் சிவன், கருநாடக இசை அறிஞர் (இ. 1973)
- 1894 – ஜே. எல். பி. ரோச் விக்டோரியா, தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1962)
- 1897 – ஆறாம் பவுல் (திருத்தந்தை) (இ. 1978)
- 1908 – பெரியசாமி தூரன், கருநாடக இசை அறிஞர் (இ. 1987)
- 1913 – திருக்குறள் வீ. முனிசாமி, தமிழறிஞர் (இ. 1994)
- 1923 – தேவ் ஆனந்த், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2011)
- 1926 – துளசி கிரி, நேபாள பிரதமர் (இ. 2018)
- 1926 – வ. விஜயபாஸ்கரன், தமிழக இதழாசிரியர், எழுத்தாளர் (இ. 2011)
- 1932 – மன்மோகன் சிங், இந்தியாவின் 13வது பிரதமர்
- 1934 – ஏர்னெஸ்ட் மக்கின்டயர், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் ஆங்கில நாடகாசிரியர்
- 1936 – வின்னி மண்டேலா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (இ. 2018)
- 1944 – தோப்பில் முகமது மீரான், தமிழக எழுத்தாளர் (இ. 2019)
- 1965 – பெத்ரோ பொரொசென்கோ, உக்ரைனின் 5வது அரசுத்தலைவர்
- 1966 – பூரி ஜெகன்நாத், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- 1979 – டாவி ரோயிவாசு, எசுத்தோனியாவின் 16வது பிரதமர்
- 1981 – செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிசு வீராங்கனை
- 1985 – அபிசேக் ரகுராம், இந்திய கருநாடக இசைப் பாடகர்
- 1989 – சந்தியா, தென்னிந்திய நடிகை
இறப்புகள்
- 1842 – ரிச்சர்டு வெல்லசுலி, பிரித்தானிய அரசியல்வாதி, இந்தியத் தலைமை ஆளுநர் (பி. 1760)
- 1915 – கீர் ஹார்டி, இசுக்கொட்டிய இடதுசாரி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1856)
- 1922 – இலெவ் அலெக்சாண்ட்ரோவிக் சுகேவ், உருசிய வேதியியலாளர் (பி. 1873)
- 1954 – தேசிக விநாயகம்பிள்ளை, தமிழகக் கவிஞர் (பி. 1876)
- 1959 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கையின் 4வது பிரதமர் (இ. 1899)
- 1966 – சே. ப. இராமசுவாமி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, ஆளுநர் (பி. 1879)
- 1978 – மன்னே சீகுபான், நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (பி. 1886)
- 1987 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் (பி. 1963)
- 2010 – குளோரியா ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகை (பி. 1910)
- 2014 – ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர், அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1932)
- 2019 – ஜாக் சிராக், பிரான்சின் 22வது அரசுத்தலைவர் (பி. 1932)
- 2022 – எஸ். வி. இரமணன், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர்
சிறப்பு நாள்
- டொமினியன் நாள் (நியூசிலாந்து)
- புரட்சி நாள் (யெமன்)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 26 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்