செப்டம்பர் 17
நாள்
(செப்டெம்பர் 17 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 17 (September 17) கிரிகோரியன் ஆண்டின் 260 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 261 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 105 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 456 – உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான்.
- 1382 – அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார்.
- 1620 – செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது.
- 1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.
- 1631 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது.
- 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் கோட்டைத் தாக்குதலுடன் கனடா மீதான முற்றுகை ஆரம்பமானது.
- 1787 – ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.
- 1795 – மேஜர் பிரேசர் தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின.
- 1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து உருசியாவிடம் கையளிக்கப்பட்டது.
- 1811 – சாவகம் பிரித்தானியாவிடம் வீழ்ந்தது.[1]
- 1849 – அமெரிக்க செயற்பாட்டாளர் ஹேரியட் டப்மேன் அடிமை நிலையில் இருந்து தப்பினார்.
- 1858 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழ்கடல் தொலைத்தந்திக் கம்பிகள் தணக்காய் முனைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பதிக்கப்பட்டன.[2]
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
- 1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): யாலு ஆற்றில் மிகப் பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.
- 1900 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: மாபிட்டாக் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கரைத் தோற்கடித்தன.
- 1908 – ரைட் சகோதரரினால் செலுத்தப்பட்ட வானூர்தி தரையில் மோதியதில் தோமசு செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.
- 1928 – சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.
- 1930 – குர்தியரின் அரராத் கிளர்ச்சியை துருக்கி முறியடித்தது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியால் தாக்கி அழிக்கப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
- 1941 – ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு: சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.
- 1944 – மார்க்கெட் கார்டன் நடவடிக்கை: நேசப் படைகளின் வான்படையினர் வான்குடைகள் மூலம் நெதர்லாந்தில் தரையிறங்கின.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.
- 1948 – ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.
- 1949 – திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினர்.
- 1949 – டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
- 1965 – பாக்கித்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 1974 – வங்காளதேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.
- 1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.
- 1978 – இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1980 – போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
- 1980 – நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில் பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.
- 1987 – தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- 1988 – தென் கொரியாவின் சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.
- 1991 – எசுத்தோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்சல் தீவுகள் மைக்குரோனீசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.
- 1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.
- 1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
- 2011 – வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கம் நியூயார்கில் ஆரம்பமானது.
பிறப்புகள்
- 1764 – ஜான் குட்ரிக், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1786)
- 1826 – பேர்னாட் ரீமன், செருமானிய-இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1866)
- 1857 – கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி, உருசிய அறிவியலாளர் (இ. 1935)
- 1864 – அனகாரிக தர்மபால, இலங்கை பௌத்த அறிஞர் (இ. 1933)
- 1879 – ஈ. வெ. இராமசாமி, இந்திய அரசியல்வாதி, திராவிடர் கழக நிறுவனர் (இ. 1973)
- 1889 – வ. ரா., தமிழக எழுத்தாளர் (இ. 1951)
- 1895 – வெ. சாமிநாத சர்மா, தமிழறிஞர் (இ. 1978)
- 1897 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் ஆளுநர், முதலாவது சனாதிபதி (இ. 1981)
- 1906 – ஜே. ஆர். ஜெயவர்தனா, இலங்கையின் 1-வது நிறைவேற்றதிகார அரசுத்தலைவர் (இ. 1996)
- 1913 – யூகின் ஓடம், அமெரிக்க உயிரியலாளர், சூழலியலாளர் (இ. 2002)
- 1915 – மக்புல் ஃபிதா உசைன், இந்திய ஓவியர், இயக்குநர் (இ. 2011)
- 1930 – லால்குடி ஜெயராமன், இந்திய வயலின் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 2013)
- 1939 – மேரி சாந்தி தைரியம், மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி
- 1944 – ரைன்ஹோல்ட் மெஸ்னெர், இத்தாலிய மலையேறி
- 1950 – நரேந்திர மோதி, இந்தியாவின் 15வது பிரதமர்
- 1953 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், (இ. 2015)
- 1956 – அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ், கிர்கித்தானின் 4வது அரசுத்தலைவர்
- 1965 – பிறையன் சிங்கர், அமெரிக்க இயக்குநர்
- 1986 – ரவிச்சந்திரன் அசுவின், இந்தியத் துடுப்பாட்டக்காரர்
இறப்புகள்
- 1179 – பிங்கெனின் ஹில்டெகார்ட், செருமானியப் புனிதர் (பி. 1098)
- 1621 – ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (பி. 1542)
- 1911 – எட்மோனியா லூவிசு, அமெரிக்க சிற்பி (பி. 1844)
- 1933 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியல் வல்லுனர் (பி. 1861)
- 1947 – சி. வி. ராமன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- 1959 – கு. வன்னியசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1911)
- 1953 – திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)
- 1979 – எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)
- 1994 – கார்ல் பொப்பர், ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1902)
- 2013 – இஜி டொயோடா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1913)
- 2021 – தாணு பத்மநாபன், இந்திய இயற்பியலாளர், பேராசிரியர் (பி. 1957)
சிறப்பு நாள்
- ஆத்திரேலியக் குடியுரிமை நாள்
- ஆசிரியர் நாள் (ஒண்டுராசு)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 28
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 17 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்