விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல்
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 03:29 மணி புதன், நவம்பர் 27, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
- 1867 – சிங்கப்பூர் பிரித்தானியக் குடியேற்ற நாடாகியது.
- 1873 – அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் மூழ்கியதில் 547 உயிரிழந்தனர்.
- 1933 – ஆங்கிலேய துடுப்பாட்ட வீரர் வால்ட்டர் அமொண்ட் 336 நியூசிலாந்துக்கு எதிரான தேர்வுப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 336 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர்: வங்காளதேசத்தில் பாக்கித்தான் இராணுவம் 1,000 பொதுமக்களைப் படுகொலை செய்தது.
- 1976 – ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
- 1979 – ஈரான் 99% மக்களின் ஆதரவான வாக்களிப்பின் மூலம் ஓர் இசுலாமியக் குடியரசாகியது. ஷாவின் அரசு முடிவுக்கு வந்தது.
- 1997 – ஏல்-பாப் வால்வெள்ளி (படம்) பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.
சி. கணேசையர் (பி. 1878) · தி. வே. கோபாலையர் (இ. 2007) · சி. வி. ராஜேந்திரன் (இ. 2018)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 31 – ஏப்பிரல் 2 – ஏப்பிரல் 3
ஏப்பிரல் 2: பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள், உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்
- 1800 – லுடுவிக் வான் பேத்தோவன் தனது முதலாவது சிம்பொனியை வியன்னாவில் அரங்கேற்றினார்.
- 1900 – புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் தீர்மானம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 1976 – இளவரசர் நொரடோம் சீயனூக் கம்போடியத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
- 1979 – சோவியத், சிவெர்திலோவ்சுக் நகரில் உள்ள உயிரி-ஆயுத ஆய்வுகூடத்தில் தவறுதலாக ஆந்திராக்சு நுண்ணுயிரிகள் வெளியேற்றப்பட்டதால் 66 பேர் உயிரிழந்தனர், கணக்கிலடங்கா உயிரினங்கள் கொல்லப்பட்டன.
- 1982 – போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகள் மீது அர்கெந்தீனா போர் தொடுத்தது.
- 1984 – ராகேஷ் சர்மா (படம்) சோயூஸ் விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
வ. வே. சு. ஐயர் (பி. 1881) · ந. மு. வேங்கடசாமி நாட்டார் (பி. 1884) · மு. தளையசிங்கம் (இ. 1973)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 1 – ஏப்பிரல் 3 – ஏப்பிரல் 4
- 1505 – இலங்கையில் முதன் முதலாகப் போர்த்துக்கீசர் வந்திறங்கினர்.
- 1885 – விசைப்பொறிகளின் வடிவமைப்புக்கான செருமனியக் காப்புரிமத்தை காட்லீப் டைம்லர் பெற்றார்.
- 1895 – ஆஸ்கார் வைல்டு தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை ஆரம்பமானது, இறுதியில் தற்பால்சேர்க்கை குற்றத்திற்காக அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
- 1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1973 – உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பை நியூயோர்க் நகரில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் மேற்கொண்டார்.
- 1974 – 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் உயிரிழந்தனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.
- 1975 – அமெரிக்காவின் பாபி ஃபிஷர் அனத்தோலி கார்ப்பொவுடன் (படம்) சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
அ. சிதம்பரநாதச் செட்டியார் (பி. 1907) · ஔவை துரைசாமி (இ. 1981)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 2 – ஏப்பிரல் 4 – ஏப்பிரல் 5
ஏப்பிரல் 4: செனிகல் – விடுதலை நாள் (1960)
- 1660 – ஆங்கிலேய உள்நாட்டுப் போரில் குற்றம் இழைத்தவர்களுக்குப் பகிரங்க மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வெளியிட்டார்.
- 1905 – இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் அங்கேரியை செருமனியிடம் இருந்து விடுவித்துத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- 1949 – பனிப்போர்: பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.
- 1968 – அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் (படம்) டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
- 1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.
- 1979 – பாக்கித்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (பி. 1855) · கா. ம. வேங்கடராமையா (பி. 1912) · மகரம் (இ. 2001)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 3 – ஏப்பிரல் 5 – ஏப்பிரல் 6
- 1710 – ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது.
- 1930 – மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் போர்க்கப்பல்கள் உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையைத் தாக்கின. தென்மேற்குப் பகுதியில் கோர்ன்வால், டோர்செட்சயர் என்னும் இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின.
- 1943 – அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெல்ஜியத்தின் மீது தவறுதலாக குண்டுகளை வீசியதில் 209 சிறுவர்கள் உட்பட 900 பேர் கொல்லப்பட்டனர்.
- 1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் (படம்) முதலமைச்சரானார்.
- 1971 – இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
சு. சி. பிள்ளை (பி. 1901) · க. கைலாசபதி (பி. 1933) · ஏ. பி. நாகராசன் (இ. 1977)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 4 – ஏப்பிரல் 6 – ஏப்பிரல் 7
- 1782 – தாய்லாந்து மன்னர் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் இராமா மன்னராக முடி சூடினார். சக்ரி வம்ச ஆட்சி ஆரம்பமானது. இந்நாள் சக்ரி நாள் என நினைவுகூரப்படுகிறது.
- 1814 – பிரான்சின் பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
- 1869 – செலுலாயிடு கண்டுபிடிக்கப்பட்டது.
- 1896 – 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.
- 1930 – மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தை (படம்) முடித்து வைத்து, கையளவு உப்பை எடுத்து "இதனுடன், நான் ஆங்கிலேயப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்", என அறிவித்தார்.
- 1994 – ருவாண்டா மற்றும் புருண்டி அரசுத்தலைவர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டா இனப்படுகொலைகள் ஆரம்பமானது.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை (பி. 1815) · கோ. நம்மாழ்வார் (பி. 1938) · இல. செ. கந்தசாமி (இ. 1992)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 5 – ஏப்பிரல் 7 – ஏப்பிரல் 8
- 1541 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.
- 1927 – முதலாவது தொலைத்தூர தொலைக்காட்சி சேவை வாசிங்டன் நகரம், நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் மேற்கொள்ளப்பட்டது.
- 1943 – உக்ரைனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாட்சிகள் 1,100 யூதர்களை நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.
- 1948 – உலக சுகாதார அமைப்பு (சின்னம் படத்தில்) ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.
- 1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டாவின் கிகாலியில் துட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
- 2003 – அமெரிக்கப் படைகள் பக்தாதைக் கைப்பற்றின. அடுத்த இரு நாட்களில் சதாம் உசைனின் ஆட்சி வீழ்ந்தது.
- 2015 – தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு ஆந்திரப்பிரதேச கடத்தல் தடுப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
கே. சுப்பிரமணியம் (இ. 1971) · ஏ. வி. பி. ஆசைத்தம்பி (இ. 1979) · கோ. நா. இராமச்சந்திரன் (இ. 2001)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 6 – ஏப்பிரல் 8 – ஏப்பிரல் 9
- 1767 – தாய்லாந்தின் அயூத்தியா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது.
- 1820 – பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே (படம்) பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டார்.
- 1911 – இடச்சு இயற்பியலாளர் எயிக் ஆன்சு மீக்கடத்துதிறனைக் கண்டுபிடித்தார்.
- 1929 – இந்திய விடுதலை இயக்கம்: தில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.
- 1950 – இந்தியாவும் பாக்கித்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- 1985 – போபால் பேரழிவு: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.
காருக்குறிச்சி அருணாசலம் (இ. 1964) · ஏ. எம். ராஜா (இ. 1989) · ஜெயகாந்தன் (இ. 2015)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 7 – ஏப்பிரல் 9 – ஏப்பிரல் 10
- 1860 – எதுவார்து-லேயோன் இசுக்காட் டெ மார்ட்டின்வில் என்பவர் தனது போனோட்டோகிராஃப் இயந்திரத்தில் முதல் தடவையாக மனித ஒலியைப் பதிவு செய்தார்.
- 1865 – கூட்டமைப்புத் தளபதி ராபர்ட் ஈ. லீ (படம்) தனது 26,765 பேருடனான படைகளுடன் வர்ஜீனியாவில் யுலிசீஸ் கிராண்ட்டிடம் சரணடைந்ததில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: பட்டான் சமர் முடிவுற்றது. சப்பானின் 1-ஆம் வான்படை இந்தியப் பெருங்கடலில் நடத்திய தாக்குதலில் பிரித்தானியாவின் எர்மெசு என்ற வானூர்தித் தாங்கிக் கப்பல், ஆத்திரேலியாவின் வம்பயர் என்ற போர்க் கப்பல் ஆகியன மூழ்கின.
- 1952 – ஊகோ பாலிவியானின் அரசு பொலிவிய தேசியப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் வேளாண்மைச் சீர்திருத்தம், பொது வாக்குரிமை, தேசியமயமாக்கல் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.
- 1957 – சூயெசு நெருக்கடி: எகிப்தில், சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
- 1967 – போயிங் 737 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
அரியட் வின்சுலோ (பி. 1796) · முசிரி சுப்பிரமணிய ஐயர் (பி. 1899)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 8 – ஏப்பிரல் 10 – ஏப்பிரல் 11
- 1606 – வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முகமாக இலண்டன் பகம்பனி என்ற நிறுவனத்தை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னர் அமைத்தார்.
- 1658 – யாழ்ப்பாணத்தில், ஊர்காவற்றுறைக் கோட்டை (படம்) இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்டது.
- 1815 – இந்தோனீசியாவில் தம்போரா எரிமலை வெடித்ததில் பல தீவுகள் அழிந்தன. சூலை 15 வரை இது நீடித்தது. 71,000 பேர் உயிரிழந்தனர்.
- 1821 – கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி உதுமானிய அரசினால் தூக்கிலிடப்பட்டு, அவரது உடல் பொசுபோரசு நீரிணையில் எறியப்பட்டது.
- 1868 – அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய-இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கூட்டுப் படைகளின் இருவர் கொல்லப்பட்டனர்.
- 1912 – டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.
- 2010 – போலந்து விமானம் ஒன்று உருசியாவில் சிமோலென்ஸ்க் நகரில் வீழ்ந்ததில், போலந்து அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி, அவரது மனைவி, மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 96 பேர் உயிரிழந்தனர்.
நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை (இ. 1964) · என். வரதராஜன் (இ. 2012)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 9 – ஏப்பிரல் 11 – ஏப்பிரல் 12
- 1689 – மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி ஆகியோர் பெரிய பிரித்தானியாவின் முடிக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- 1713 – எசுப்பானிய மரபுரிமைப் போரில் ஈடுபட்ட பெரும்பாலான ஐரோப்பிய அரசுகளுக்கிடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- 1955 – ஆங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காசுமிர் பிரின்செசு என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர், மூவர் உயிர் தப்பினர். இவ்விமானத்தில் பயணம் செய்யவிருந்த சீனப் பிரதமர் சோ என்லாய் கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்துச் செய்தார்.
- 1957 – பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒப்புதல் அளித்தது.
- 1979 – தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவைக் கைப்பற்றின. உகாண்டா அரசுத்தலைவர் இடி அமீன் (படம்) நாட்டை விட்டு வெளியேறினார்.
- 2007 – அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.
கி. வா. ஜகந்நாதன் (பி. 1906) · ரெங்கநாதன் சீனிவாசன் (பி. 1910) · அய்க்கண் (இ. 2020)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 10 – ஏப்பிரல் 12 – ஏப்பிரல் 13
ஏப்பிரல் 12: மனித விண்வெளிப் பயணத்துக்கான பன்னாட்டு நாள்
- 1831 – இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பிரஃப்டன் தொங்கு பாலத்தில் போர் வீரர்கள் அனிவகுத்து சென்றதில் பாலம் உடைந்தது.
- 1832 – இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.
- 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னிசியில் சரணடைந்த அனைத்து ஆப்பிரிக்க-அமெரிக்கப் படையினரும் கூட்டமைப்புப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1955 – யோனாசு சால்க் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.
- 1961 – பனிப்போர்: விண்வெளிப் போட்டி: சோவியத் விண்ணோடி யூரி ககாரின் (படம்) விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1980 – லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.
- 1981 – முதலாவது விண்ணோடம் கொலம்பியா ஏவப்பட்டது.
சே. ப. நரசிம்மலு நாயுடு (பி. 1854) · வைத்திலிங்கம் துரைசுவாமி (இ. 1966) · நெ. து. சுந்தரவடிவேலு (இ. 1993)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 11 – ஏப்பிரல் 13 – ஏப்பிரல் 14
- 1829 – பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் வாக்களிக்கவும், நாடாளுமன்றத்தில் அமரவும் உரிமை அளித்தது.
- 1873 – ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 60 ஆபிரிக்க அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1919 – ஜலியான்வாலா பாக் படுகொலை (படம்): அமிருதசரில் ஜலியான்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் கொல்லப்பட்டனர். 1200 பேர் காயமடைந்தனர்.
- 1954 – காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
- 1970 – நிலா நோக்கிச் சென்று கொண்டிருந்த அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிசன் தாங்கி வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது.
- 1975 – லெபனானில் 27 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு 15-ஆண்டுக்கால உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- 1987 – மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.
மே. ரா. மீ. சுந்தரம் (பி. 1913) · பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (பி. 1930) · எஸ். பாலச்சந்தர் (இ. 1990)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 12 – ஏப்பிரல் 14 – ஏப்பிரல் 15
ஏப்பிரல் 14: உலக சித்தர்கள் நாள் · அம்பேத்கர் ஜெயந்தி
- 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார்.
- 1699 – நானக்சாகி நாட்காட்டியின் படி, கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குரு கோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
- 1828 – நோவா வெப்சுடர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
- 1865 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் (படம்) ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார். லிங்கன் அடுத்த நாள் இறந்தார்.
- 1894 – தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் என்ற ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
- 1958 – லைக்கா என்ற நாயை விண்ணுக்குக் கொண்டு சென்ற சோவியத்தின் இசுப்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்றுப்பாதையில் இருந்து வீழ்ந்தது.
- 1988 – சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
எம். ஆர். ராதா (பி. 1907) · இரமண மகரிசி (இ. 1950) · பி. பி. ஸ்ரீனிவாஸ் (இ. 2013)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 13 – ஏப்பிரல் 15 – ஏப்பிரல் 16
- 1450 – நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது.
- 1815 – சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது. இது 12 பணத்திற்கு இணையானது.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் கிளர்ச்சியைத் தடுப்பதற்காக 75,000 தன்னார்வலர்களைத் திரட்டுமாறு அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கேட்டுக் கொண்டார்.
- 1865 – முதல் நாள் சுடப்பட்ட அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார்.
- 1912 – இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிமலை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் (படம்) பயணிகள் கப்பல் வட அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் மொத்தம் 2,227 பேரில் 710 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
- 1923 – இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.
- 1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கப் போராட்டங்கள் ஆரம்பமானது.
சா. கிருஷ்ணசுவாமி (பி. 1871) · குன்றக்குடி அடிகள் (இ. 1995) · நாவண்ணன் (இ. 2006)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 14 – ஏப்பிரல் 16 – ஏப்பிரல் 17
- 1853 – இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவையை கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே (படம்) மும்பையில் போரி பந்தருக்கும் தானேக்கும் இடையில் ஆரம்பித்தது.
- 1917 – நாடு கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த விளாதிமிர் லெனின் உருசியா, பெத்ரோகிராத் திரும்பினார்.
- 1919 – அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற செருமனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1947 – அமெரிக்காவின் டெக்சாஸ் துறைமுகத்தில் சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் உயிரிழந்தனர்.
- 1961 – கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்சிய-லெனினியவாதி என்றும், கியூபா பொதுவுடைமை நாடு எனவும் அறிவித்தார்.
- 1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
பொன்னம்பலம் இராமநாதன் (பி. 1851) · பி.ஸ்ரீ (பி. 1886) · அநுத்தமா (பி. 1922)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 15 – ஏப்பிரல் 17 – ஏப்பிரல் 18
- 1492 – மசாலாப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பசு எசுப்பானிய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
- 1521 – லூதரனியம் தொடர்பான படிப்புகளுக்காக மார்ட்டின் லூதருக்கு எதிரான வழக்கு ஆரம்பமானது.
- 1895 – முதலாம் சீன சப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. தோற்கடிக்கப்பட்ட சிங் ஆட்சி கொரியா மீதான இறைமையைக் கைவிட்டது. சீனக் குடியரசின் பெங்கியெனின் தெற்குப் பகுதியை சப்பானிடம் கொடுத்தது.
- 1961 – அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பன்றிகள் விரிகுடாவில் தரையிறங்கியது (படம்).
- 1971 – முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1975 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நோம் பென்னைக் கைப்பற்றின. கம்போடிய அரசு சரணடைந்தது.
அடிகளாசிரியர் (பி. 1910) · புலியூர்க் கேசிகன் (இ. 1992) · டி. கே. ராமமூர்த்தி (இ. 2013)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 16 – ஏப்பிரல் 18 – ஏப்பிரல் 19
ஏப்பிரல் 18: சிம்பாப்வே – விடுதலை நாள் (1980), உலக மரபுரிமை நாள்
- 1506 – இன்றைய புனித பேதுரு பேராலயத்திற்கான (படம்) அடிக்கல் நாட்டப்பட்டது.
- 1521 – மார்ட்டின் லூதருக்கு எதிரான விசாரணைகள் இரண்டாம் நாளாக இடம்பெற்றது. தனது லூதரனியம் பற்றிய கற்பித்தலை நிறுத்த அவர் உடன்படவில்லை.
- 1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
- 1909 – ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.
- 1930 – பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.
- 1958 – இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
- 1983 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (பி. 1858) · சாமிக்கண்ணு வின்சென்ட் (பி. 1883) · மால்கம் ஆதிசேசையா (பி. 1910)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 17 – ஏப்பிரல் 19 – ஏப்பிரல் 20
- 1818 – பிரான்சிய இயற்பியலாளர் அகஸ்டீன் பிரெனெல் "ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய குறிப்பை" வெளியிட்டார்.
- 1943 – ஆல்பர்ட் ஹாப்மன் தான் கண்டுபிடித்த எல்எஸ்டி எனும் போதை மருந்தை தனக்குத் தானே முதற் தடவையாக ஏற்றிக் கொண்டார்.
- 1954 – உருது, வங்காள மொழி ஆகியன பாக்கித்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
- 1975 – இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா (படம்) விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1988 – இந்திய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக மட்டக்களப்பில் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்த நிலையில் அன்னை பூபதி இறந்தார்.
- 1993 – ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்கக் காவல்துறையினரின் முற்றுகை, கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ், மற்றும் 18 சிறுவர்கள் உட்பட 76 பேர் கொல்லப்பட்டனர்.
கோ. சாரங்கபாணி (பி. 1903) · குமாரி ருக்மணி (பி. 1929) · திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி (இ. 1973)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 18 – ஏப்பிரல் 20 – ஏப்பிரல் 21
- 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார்.
- 1862 – லூயி பாஸ்ச்சர், கிளவுட் பெர்னாட் ஆகியோர் தன்னிச்சைப் பிறப்பாக்கம் என்ற கொள்கையை நிராகரிக்கும் பரிசோதனைகளை செய்து முடித்தனர்.
- 1902 – பியேர், மேரி கியூரி ஆகியோர் இரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்தினர்.
- 1946 – உலக நாடுகள் சங்கம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு, அதன் பெரும்பாலான அதிகாரங்கள் ஐக்கிய நாடுகள் அவைக்கு வழங்கப்பட்டன.
- 1961 – பனிப்போர்: கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பன்றிகள் விரிகுடா படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.
- 1972 – அப்பல்லோ திட்டம்: யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 (படம்) விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது (படம்).
- 1986 – இலங்கை, கிழக்கு மாகாணத்தில் கந்தளாய் அணை உடைந்ததில் 120 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.
சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் (பி. 1910) · பிரமிள் (பி. 1939) · ர. சு. நல்லபெருமாள் (இ. 2011)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 19 – ஏப்பிரல் 21 – ஏப்பிரல் 22
- 1506 – மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1526 – பானிப்பட் முதலாவது போர்: தில்லியின் கடைசி லௌதி சுல்தான் இப்ராகிம் லோடிக்கும் (படம்) தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் நடந்த போரில் இப்ராகிம் கொல்லப்பட்டார். பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார்.
- 1782 – இரத்தினகோசின் நகரம் (இன்றைய பேங்காக்) முதலாம் இராமா மன்னரால் அமைக்கப்பட்டது.
- 1964 – டிரான்சிட்-5பிஎன் என்ற செயற்கைக்கோள் சுற்றுவட்டத்தில் இணைய முடியாமல் வளி மண்டலத்தினுள் மீளத் திரும்பியது. 0.95கிகி கதிரியக்க புளுட்டோனியம் பரவலாக சிதறியது.
- 1987 – இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனர்.
- 2019 – இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: கொழும்பு உட்படப் பல இடங்களில் உயிர்ப்பு ஞாயிறு நாளன்று மூன்று கிறித்தவத் தேவாலயங்கள், நான்கு உணவகங்களில் இசுலாமிய அரசு ஆதரவில் தேசிய தவ்கீத் ஜமாத் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
வி. கிருஷ்ணமூர்த்தி (பி. 1925) · பாரதிதாசன் (இ. 1964) · டி. ஆர். மகாலிங்கம் (இ. 1978)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 20 – ஏப்பிரல் 22 – ஏப்பிரல் 23
- 1529 – கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையே மலுக்கு தீவிகளின் கிழக்கே 17°-இல் கிழக்கே பிரிக்கப்பட்ட சரகோசா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது..
- 1889 – நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி ஆகியவற்றில் கிட்டத்தட்ட 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர் (படம்).
- 1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு எசுப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.
- 1906 – 1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஏதென்சு நகரில் ஆரம்பமானது.
- 1915 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் செருமனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.
- 2000 – ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
அ. இராகவன் (பி. 1902) · சாமிக்கண்ணு வின்சென்ட் (இ. 1942) · லால்குடி ஜெயராமன் (இ. 2013)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 21 – ஏப்பிரல் 23 – ஏப்பிரல் 24
ஏப்பிரல் 23: உலகப் புத்தக நாள்
- 1639 – புனித ஜார்ஜ் கோட்டை (படம்) சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: எர்மன் கோரிங் நாட்சி ஜெர்மனியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு அனுமதி கேட்டு இட்லருக்குத் தந்தி அனுப்பினார்.
- 1966 – முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.
- 1967 – சோவியத்தின் சோயுஸ் 1 விண்கலம் விளாதிமிர் கொமொரோவுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவம் கிழக்குப் பாக்கித்தானில் ஜதிபாங்கா என்ற இடத்தில் 3,000 இற்கும் அதிகமான இந்துக்களைக் கொன்றனர்.
- 1993 – எரித்திரியாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
- 2005 – முதலாவது யூடியூப் காணொளி வெளியிடப்பட்டது.
குத்தூசி குருசாமி (பி. 1906) · இ. முருகையன் (பி. 1935) · எம். வி. ராஜம்மா (இ. 1999)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 22 – ஏப்பிரல் 24 – ஏப்பிரல் 25
ஏப்பிரல் 24: உலக ஆய்வக விலங்குகள் நாள்
- 1915 – கான்ஸ்டன்டீனபோலில் 250 ஆர்மீனிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்மீனிய இனப்படுகொலை ஆரம்பமானது.
- 1916 – அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர்.
- 1926 – செருமனி, சோவியத் ஒன்றியம் இரண்டும் மூன்றாவது நாடு ஒன்று மற்றைய நாட்டைத் தாக்க முற்படும் போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடுநிலைமை வகிக்கும் உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டது.
- 1957 – சூயெசு நெருக்கடி: ஐநா அமைதிப்படை தருவிக்கப்பட்டதை அடுத்து சுயஸ் கால்வாய் மீண்டும் திறக்கப்பட்டது.
- 1967 – சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த உருசிய வீரர் விளாடிமிர் கொமரோவ் (படம்) அவரது வான்குடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
- 2004 – ஐக்கிய அமெரிக்கா லிபியா மீது 18 ஆண்டுகளுக்கு முன்னர் விதித்த பொருளாதாரத் தடையை நீக்கியது. லிபியா பேரழிவு ஆயுதங்களை அழிக்க உடன்பட்டது.
- 2013 – வங்காளதேசம், டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர்.
ஜி. யு. போப் (பி. 1820) · ஜெயகாந்தன் (பி. 1934) · சூலமங்கலம் ஜெயலட்சுமி (பி. 1937)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 23 – ஏப்பிரல் 25 – ஏப்பிரல் 26
- 1792 – கில்லட்டின் மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது.
- 1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர்த்தொடர் ஆரம்பமானது. ஆத்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டன.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனிய ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. பெனிட்டோ முசோலினி கைது செய்யப்பட்டார்.
- 1954 – முதலாவது செயல்முறை சூரிய மின்கலம் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- 1974 – போர்த்துகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
- 1983 – பயனியர் 10 (படம்) விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
- 2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.
புதுமைப்பித்தன் (பி. 1906) · மு. வரதராசன் (பி. 1912) · ரா. பி. சேதுப்பிள்ளை (இ. 1961)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 24 – ஏப்பிரல் 26 – ஏப்பிரல் 27
ஏப்பிரல் 26: அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்
- 1962 – நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.
- 1963 – லிபியாவில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1964 – தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
- 1981 – ஈழப்போர்: மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1986 – சோவியத் ஒன்றியம், உக்ரைனில் செர்னோபில் அணு உலை விபத்து (படம்) ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
- 1989 – உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்று வங்காளதேசத்தின் நடுப்பகுதியைத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர்.
- 2005 – 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.
பெ. சுந்தரம் பிள்ளை (இ. 1897) · சீனிவாச இராமானுசன் (இ. 1920) · சா. ஜே. வே. செல்வநாயகம் (இ. 1977)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 25 – ஏப்பிரல் 27 – ஏப்பிரல் 28
ஏப்பிரல் 27: சியேரா லியோனி (1961), டோகோ (1960) - விடுதலை நாள்
- 1521 – போர்த்துக்கேய நாடுகாண் பயணி பெர்டினண்ட் மகலன் (படம்) பிலிப்பீன்சுப் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
- 1667 – பார்வையற்ற ஜான் மில்டன் தான் எழுதிய பாரடைசு லொஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.
- 1865 – 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல்தானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கியதில் 1,700 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கூட்டணிப் படையினராவார்.
- 1981 – கணினிச் சுட்டியை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1993 – காபோனில் லிப்ரவில் அருகே இடம்பெற்ற விமான விபத்தில் சாம்பியாவின் தேசிய காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1994 – தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.
- 2007 – எசுத்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செஞ்சேனை நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை (பி. 1914) · கு. ப. ராஜகோபாலன் (இ. 1944) · பிரபஞ்சன் (பி. 1945)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 26 – ஏப்பிரல் 28 – ஏப்பிரல் 29
ஏப்பிரல் 28: தொழிலாளர் நினைவு நாள்
- 1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது.
- 1758 – இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் நகரை (இன்றைய பாக்கித்தானில்) துராணியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1920 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஒன்பது செருமனிய கடற்படைப் படகுகள் டைகர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானியப் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 946 பேர் கொல்லப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பெனிட்டோ முசோலினியும் (படம்) அவரது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
- 2005 – இலங்கை ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிட்டி தியாகராயர் (இ. 1925) · உ. வே. சாமிநாதையர் (இ. 1942) · தி. வே. சுந்தரம் (இ. 1955)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 27 – ஏப்பிரல் 29 – ஏப்பிரல் 30
ஏப்பிரல் 29: பன்னாட்டு நடன நாள்
- 1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார்.
- 1910 – பிரித்தானியப் பொதுமக்களுக்கு வளங்களைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்துடனான வரவு செலவுத் திட்டத்தை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
- 1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 6-வது இந்தியப் படைப் பிரிவு உதுமானியப் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் இவா பிரான் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத்துத் திருமணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் தற்கொலை புரிந்து கொண்டனர்.
- 1967 – வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்த காரணத்தினால், முகம்மது அலியின் (படம்) குத்துச்சண்டைப் பதக்கங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன.
- 1991 – வங்காளதேசத்தில், சிட்டகொங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1997 – 1993 வேதி ஆயுத உடன்படிக்கை அமுலுக்கு வந்தது. வேதி ஆயுதங்கள் தயாரிப்பு தடை செய்யப்பட்டது.
பாரதிதாசன் (பி. 1891) · சுவர்ணலதா (பி. 1973) · கோபுலு (இ. 2015)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 28 – ஏப்பிரல் 30 – மே 1
ஏப்பிரல் 30: வியட்நாம் ஒருங்கிணைப்பு நாள்
- 1492 – எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது.
- 1803 – லூசியானா வாங்கல்: ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.
- 1897 – ஜெ. ஜெ. தாம்சன் அணுவடித்துகளாக இலத்திரனைக் கண்டுபிடித்ததாக இலண்டனில் அறிவித்தார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் (படம்) தனது மனைவி இவாவுடன் பியூரர் பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் பெர்லினில் செருமனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
- 1975 – கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றின. தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
- 1993 – உலகளாவிய வலையின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.
- 2008 – உருசியாவின் கடைசிப் பேரரசர் இரண்டாம் நிக்கொலாசின் பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
கா. சு. பிள்ளை (இ. 1945) · லோங் அடிகள் (இ. 1961) · நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் (இ. 2001)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 29 – மே 1 – மே 2