ஏப்ரல் 23
நாள்
(ஏப்பிரல் 23 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஏப்ரல் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMXXIV |
ஏப்ரல் 23 (April 23) கிரிகோரியன் ஆண்டின் 113 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 114 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 252 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1014 – அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார்.
- 1016 – எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.
- 1343 – எசுத்தோனியாவில் செருமனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 பேர் கொல்லப்பட்டனர்.
- 1635 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1639 – புனித ஜார்ஜ் கோட்டை சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது.
- 1655 – ஆங்கிலோ-எசுப்பானியப் போரின் போது சாந்தோ தொமிங்கோ மீதான தாக்குதல் ஆரம்பமானது, எனினும் ஏழு நாட்களில் இது தோல்வியடைந்தது.
- 1660 – சுவீடன், மற்றும் போலந்து ஆகியவற்றிற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
- 1661 – இரண்டாம் சார்லசு இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடி சூடினார்.
- 1815 – உதுமானியப் பேரரசுடன் செர்பியா இணைக்கப்பட்டதை அடுத்து செர்பியர்களின் இரண்டாவது புரட்சி ஆரம்பமானது.
- 1867 – சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.
- 1879 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தின் கட்டடம் ஒன்று தீயில் எரிந்து சேதமடைந்தது.
- 1905 – யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.[1]
- 1932 – நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.
- 1940 – மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் உயிரிழந்தனர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதென்ஸ் நகரை விட்டு வெளியேறினார்
- 1945 – இரண்டாம் உலகப் போர்: எர்மன் கோரிங் நாட்சி ஜெர்மனியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு அனுமதி கேட்டு இட்லருக்குத் தந்தி அனுப்பினார்.
- 1949 – சீன உள்நாட்டுப் போர்: மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அமைக்கப்பட்டது.
- 1966 – முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.
- 1967 – சோவியத்தின் சோயுஸ் 1 விண்கலம் விளாதிமிர் கொமொரோவுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவம் கிழக்குப் பாக்கித்தானில் (இன்றைய வங்காளதேசம்) ஜதிபாங்கா என்ற இடத்தில் 3,000 இற்கும் அதிகமான இந்துக்களைக் கொன்றனர்.
- 1987 – ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- 1990 – நமீபியா ஐநாவில் 160-வது உறுப்பு நாடாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 50வது உறுப்பு நாடாகவும் சேர்க்கப்பட்டது.
- 1993 – இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.
- 1993 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
- 1993 – எரித்திரியாவில் ஐநாவின் கண்காணிப்பில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
- 1997 – அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2005 – முதலாவது யூடியூப் காணொளி "ஜாவெட்" என்பவரால் வெளியிடப்பட்டது.[2]
- 2013 – ஈராக்கில் அவீஜா நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 28 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.
- 2018 – கனடா, தொராண்டோவில் வாகனம் ஒன்று நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.[3]
பிறப்புகள்
- 1628 – ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட், டச்சுக் கணிதவியலாளர், அரசியல்வாதி (இ. 1704)
- 1791 – ஜேம்ஸ் புகேனன், ஐக்கிய அமெரிக்காவின் 15வது அரசுத்தலைவர் (இ. 1868)
- 1827 – எ. ஆ. கிருட்டிணப் பிள்ளை, கிறித்தவத் தமிழ்ப் புலவர் (இ. 1900)
- 1858 – மேக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1947)
- 1858 – ராமாபாய், இந்தியப் பெண்ணுரிமைப் போராளி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1922)
- 1876 – எஸ். குமாரசாமி ரெட்டியார், தமிழக அரசியல்வாதி
- 1895 – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, பிரித்தானியப் படைத்துறை அதிகாரி (இ. 1967)
- 1896 – திமீத்திரி மக்சூத்தொவ், சோவியத் உருசிய வானியலாளர் (இ. 1964)
- 1902 – ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின், நோபல் பரிசு பெற்ற ஐசுலாந்து எழுத்தாளர் (இ. 1998)
- 1906 – குத்தூசி குருசாமி, தமிழகப் பெரியாரிய அறிஞர், எழுத்தாளர் (இ. 1965)
- 1935 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (இ. 2009)
- 1935 – காக்கநாடன், மலையாள எழுத்தாளர் (இ. 2011)
- 1938 – எஸ். ஜானகி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
- 1949 – போல் கொலியர், ஆங்கிலேய பொருளியலாளர்
- 1972 – தமிழினி, தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 2015)
- 1977 – ஜான் சீனா, அமெரிக்க மற்போர் வீரர்
- 1977 – கால் பென், குஜராத்தி-அமெரிக்க நடிகர்
- 1990 – தேவ் பட்டேல், ஆங்கிலேய நடிகர்
- 2018 – கேம்பிரிட்ச் இளவரசர் லூயி
இறப்புகள்
- 303 – புனித ஜார்ஜ், உரோமை இராணுவ வீரர் (பி. 275)
- 1200 – சூ சி, சீன மெய்யியலாளர் (பி. 1130)
- 1616 – வில்லியம் சேக்சுபியர், ஆங்கிலேயக் கவிஞர், நடிகர், எழுத்தாளர் (பி. 1564)
- 1850 – வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1770)
- 1923 – சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று ஆய்வாளர் (இ. 2002)
- 1958 – நட் உலுண்ட்மார்க், சுவீடிய வானியலாளர் (பி. 1889)
- 1973 – தீரேந்திர வர்மா, இந்திக் கவிஞர், மொழியியல் ஆய்வாளர் (பி. 1897)
- 1992 – சத்யஜித் ராய், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1921)
- 1992 – சி. வடிவேலு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1929)
- 1993 – லலித் அத்துலத்முதலி, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)
- 1997 – லீலாவதி, தமிழக இடதுசாரி அரசியல்வாதி
- 1999 – எம். வி. ராஜம்மா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1921)
- 2007 – போரிஸ் யெல்ட்சின், உருசியாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1931)
- 2009 – ரூபராணி ஜோசப், இலங்கை மலையக எழுத்தாளர்
- 2012 – அப்பச்சன், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1925)
- 2013 – சம்சாத் பேகம், இந்திப் பின்னணிப் பாடகி (பி. 1919)
- 2023 – ராண்டார் கை, இந்தியத் தமிழ்த் திரைப்பட, சட்ட எழுத்தாளர் (பி. 1937)
சிறப்பு நாள்
- உலகப் புத்தக நாள்
- ஐநா ஆங்கில மொழி நாள்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)
- ↑ "This Is the First Ever YouTube Video". Time. பார்க்கப்பட்ட நாள் 2017-04-22.
- ↑ "Toronto van attack: Suspect quizzed after 10 pedestrians killed". BBC. 24 April 2018. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)