ஏப்ரல் 8
நாள்
(ஏப்பிரல் 8 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஏப்ரல் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMXXIV |
ஏப்ரல் 8 (April 8) கிரிகோரியன் ஆண்டின் 98 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 99 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 267 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 217 – உரோமைப் பேரரசர் கரகல்லா படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் அவரது பிரிட்டோரியக் காவல்படைத் தலைவர் மார்க்கசு மாக்ரீனசு பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
- 876 – டைர் அல்-ஆக்கில் சமர் பக்தாதை சபாரித்துகளிடம் வீழாமல் பாதுகாத்தது.
- 1232 – மங்கோலிய–சின் போர்: மங்கோலியர் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் மீது முற்றுகையை ஆரம்பித்தனர்.
- 1277 – உவேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது.
- 1767 – தாய்லாந்தின் அயூத்தியா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது.
- 1820 – பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1832 – முன்னூறு அமெரிக்கப் படையினர் மிசோரியின் செயின்ட் லூயிசில் இருந்து சவுக் என்ற தொல்குடி அமெரிக்கர்களுடன் போரிடுவதற்காக அனுப்பப்பட்டனர்.
- 1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டார்.
- 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.
- 1866 – ஆத்திரியப் பேரரசுக்கு எதிராக இத்தாலியும் புருசியாவும் அணி திரண்டன.
- 1867 – முதலாவது எக்ஸ்போ கண்காட்சி பாரிசு நகரில் ஆரம்பமானது.
- 1886 – வில்லியம் கிளாட்ஸ்டோன் அயர்லாந்தின் சுயாட்சி சட்டமூலத்தை பிரித்தானிய மக்களவையில் சமர்ப்பித்தார்.
- 1906 – ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இறந்தார்.
- 1911 – இடச்சு இயற்பியலாளர் எயிக் ஆன்சு மீக்கடத்துதிறனைக் கண்டுபிடித்தார்.
- 1913 – அமெரிக்க மேலவைக்கு நேரடித் தேர்தல் நடத்துவதகு சட்டமியற்றப்பட்டது.
- 1918 – முதலாம் உலகப் போர்: நடிகர்கள் டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், சார்லி சாப்ளின் ஆகியோர் போருக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
- 1919 – பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி தில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
- 1924 – இசுலாமிய நீதிமன்றங்கள் துருக்கியில் இல்லாதொழிக்கப்பட்டன.
- 1929 – இந்திய விடுதலை இயக்கம்: தில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகை: [[சோவியத் ஒன்றியம்|சோவியத் படையினர் லென்ன்கிராதுக்கான தொடருந்துப் பாதையை அமைத்தனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.
- 1943 – அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் ஊதியங்களையும், பொருட்களின் விலைகளையும் முடக்கினார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் அனோவர் நகரில் 4,000 அரசியல் கைதிகளை ஏற்றிச் சென்ற தொடருந்து மீது தவறுதலான வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தப்பியவர்கள் நாட்சிகளால் கொல்லப்பட்டனர்.
- 1950 – இந்தியாவும் பாக்கித்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- 1954 – கனடிய வான்படை விமானம் ஒன்று திரான்சு கனடா விமானம் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.
- 1954 – தென்னாப்பிரிக்காவின் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
- 1960 – இரண்டாம் உலகப் போரின் பின்னர் இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்ட செருமானியப் பிரதேசங்களை 280 மில்லியன் மார்க்குகளுக்கு கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் நெதர்லாந்தும் மேற்கு செருமனியும் கையெழுத்திட்டன.
- 1961 – பாரசீக வளைகுடாவில் டாரா என்ற கப்பலில் பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 238 பேர் கொல்லப்பட்டனர்.
- 1970 – இசுரேல் விமானங்கள் எகிப்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டுகளை வீசியதில் 46 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
- 1985 – போபால் பேரழிவு: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.
- 1993 – மாக்கடோனியக் குடியரசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
- 2000 – அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் உயிரிழந்தனர்.
- 2004 – தார்ஃபூர் போர்: சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
பிறப்புகள்
- 1732 – டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1796)
- 1864 – அபலா போஸ், மேற்கு வங்க சமூக சேவையாளர் (இ. 1951)
- 1892 – ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1970)
- 1892 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை (இ. 1979)
- 1911 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1997)
- 1917 – எஸ். இராமநாதன், தமிழக கருநாடக வாய்ப்பாட்டு, வீணை கலைஞர் (இ. 1988)
- 1938 – கோபி அன்னான், கானா நாட்டு பொருளியலாளர், ஐக்கிய நாடுகளின் 7வது பொதுச் செயலர்
- 1949 – ஜோன் மேடென், ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- 1954 – கோ. வா. உலோகநாதன், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2007)
- 1983 – அல்லு அர்ஜுன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1988 – நித்யா மேனன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை, பின்னணிப் பாடகி
இறப்புகள்
- 1461 – ஜியார்ஜ் வான் பியூயர்பக், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1423)
- 1857 – மங்கள் பாண்டே, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீரர் (பி. 1827)
- 1894 – பங்கிம் சந்திர சட்டர்ஜி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (பி. 1838)
- 1964 – காருக்குறிச்சி அருணாசலம், தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1907)
- 1968 – அரோல்டு டி. பாப்காக், அமெரிக்க வானியலாளர் (பி. 1882)
- 1969 – சினைதா அக்சென்சியேவா, உக்ரைனிய வானியலாளர் (பி. 1900)
- 1973 – பாப்லோ பிக்காசோ, எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1881)
- 1973 – நீலகண்ட ஸ்ரீராம், பிரம்மஞான சபை தலைவர் (பி. 1889)
- 1989 – ஏ. எம். ராஜா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1929)
- 1992 – டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர் (பி. 1907)
- 2008 – சரண் ராணி பாக்லீவால், இந்துத்தானி இசை, சரோத் இசைக் கலைஞர் (பி. 1929)
- 2013 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1925)
- 2015 – ஜெயகாந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1934)
- 2015 – நாகூர் இ. எம். ஹனீஃபா, தமிழக இசுலாமியப் பாடகர் (பி. 1925)
- 2016 – எலிசபெத் உரோயமர், அமெரிக்க வானியலாளர் (பி. 1929)
- 2022 – நாகை ஸ்ரீராம், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (பி. 1980)
- 2024 – பீட்டர் ஹிக்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1929)
சிறப்பு நாள்
- புத்தர் பிறந்தநாள் (யப்பான்)
- பன்னாட்டு உரோமா நாள்