ஏப்ரல் 17
நாள்
(ஏப்பிரல் 17 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஏப்ரல் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMXXIV |
ஏப்ரல் 17 (April 17) கிரிகோரியன் ஆண்டின் 107 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 108 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 258 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1080 – டென்மார்க் மன்னர் மூன்றாம் அரால்ட் இறந்தார். நான்காம் கானூட் புதிய மன்னராக முடி சூடினார்.
- 1492 – மசாலாப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பசு எசுப்பானிய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
- 1521 – லூதரனியம் தொடர்பான படிப்புகளுக்காக மார்ட்டின் லூதருக்கு எதிரான வழக்கு ஆரம்பமானது.
- 1797 – சர் ரால்ஃப் அபர்குரொம்பி புவெர்ட்டோ ரிக்கோவின் சான் வான் நகரைத் தாக்கினார். அமெரிக்கக் கண்டத்தில் எசுப்பானியப் பிரதேசங்கள் மீது நடந்த மிகப்பெரும் ஊடுருவலாக இது கணிக்கப்படுகிறது.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகி, அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பில் 8-வது மாநிலமாக இணைந்தது.
- 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரொலைனாவின் பிளைமவுத் நகரத் தாக்குதலை ஆரம்பித்தன.
- 1895 – முதலாம் சீன சப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. தோற்கடிக்கப்பட்ட சிங் ஆட்சி கொரியா மீதான இறைமையைக் கைவிட்டது. சீனக் குடியரசின் பெங்கியெனின் தெற்குப் பகுதியை சப்பானிடம் கொடுத்தது.
- 1912 – உருசியப் படையினர் சைபீரியாவின் வடகிழக்கில் பணிநிறுத்தம் செய்த தங்கச் சுரங்கத் தொழிலாளர் மீது சுட்டதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியப் பேரரசு செருமனியிடம் சரணடைந்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் மொண்டீசு நகரம் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1946 – கடைசி பிரான்சியப் படையினர் சிரியாவில் இருந்து வெளியேறினர்.
- 1949 – அயர்லாந்தின் 26 மாவட்டங்கள் பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகின.
- 1961 – அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பன்றிகள் விரிகுடாவில் தரையிறங்கியது.
- 1969 – செக்கோசிலவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டூப்செக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1970 – அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
- 1971 – முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1975 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நோம் பென்னைக் கைப்பற்றின. கம்போடிய அரசு சரணடைந்தது.
- 1978 – ஆப்கானித்தானின் இடதுசாரி அரசியல்வாதி மீர் அக்பர் கைபர் படுகொலை செய்யப்பட்டார்.
- 1986 – 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
- 2004 – இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.
- 2006 – டெல் அவீவ் உணவகம் ஒன்றில் பல்லத்தீன தற்கொலைக் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.
- 2013 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் உரத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற ஒரு வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
- 2014 – நாசாவின் கெப்லர் விண்கலம் பிறிதொரு விண்மீனின் வாழ்தகமைப் பகுதியில் புவிக்கு ஒப்பான கோள் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தியது.
பிறப்புகள்
- 44 – எவரிஸ்துஸ் (திருத்தந்தை) (இ. 107)
- 1598 – ஜியோவானி ரிக்கியொலி, இத்தாலிய மதகுரு, வானியலாளர் (இ. 1671)
- 1756 – தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805)
- 1887 – இசுடெபானி ஹோரோவிட்சு, போலந்து வேதியியலாளர் (இ. 1942)
- 1899 – வின்சென்ட் விகில்சுவொர்த், பிரித்தானிய உயிரியலாளர் (இ. 1994)
- 1910 – அடிகளாசிரியர், தமிழகத் தமிழறிஞர் (இ. 2012)
- 1912 – தகழி சிவசங்கரப் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (இ. 1999)
- 1915 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் 6வது பிரதமர் (இ. 2000)
- 1916 – ஆ. தியாகராசா, இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1981)
- 1917 – வ. சுப. மாணிக்கம், தமிழகத் தமிழறிஞர், கவிஞர் (இ. 1989)
- 1959 – சான் பீன், ஆங்கிலேய நடிகர்
- 1966 – விக்ரம், தமிழ்த் திரைப்பட நடிகர்
- 1972 – முத்தையா முரளிதரன், இலங்கைத் துடுப்பாளர்
- 1979 – சித்தார்த், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர்
- 1981 – சாந்தி சௌந்திரராஜன், தமிழக தடகள விளையாட்டு வீராங்கனை
- 1981 – மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (இ. 2015)
இறப்புகள்
- 1680 – கத்தேரி தேக்கக்விதா, அமெரிக்கப் புனிதர் (பி. 1656)
- 1790 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், அரசியல்வாதி (பி. 1706)
- 1859 – தாந்தியா தோபே, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1814)
- 1942 – சான் பத்தீட்டு பெரென், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1870)
- 1946 – வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (பி. 1869)
- 1975 – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் (பி. 1888)
- 1989 – மு. ச. காரியப்பர், இலங்கை அரசியல்வாதி (பி. 1899)
- 1992 – புலியூர்க் கேசிகன், தமிழக எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் (பி. 1923)
- 1994 – ரோஜர் ஸ்பெர்ரி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1913)
- 2004 – சௌந்தர்யா, தென்னிந்திய நடிகை (பி. 1971)
- 2013 – டி. கே. ராமமூர்த்தி, தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1922)
- 2013 – வி. எஸ். ரமாதேவி, கருநாடக மாநிலத்தின் 13வது ஆளுநர் (பி. 1934)
- 2014 – கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (பி. 1927)
- 2014 – கர்பால் சிங், மலேசிய அரசியல்வாதி (பி. 1940)
- 2015 – கி. லோகநாதன், மலேசியத் தமிழறிஞர், உளவியலாளர் (பி. 1940)
- 2021 – விவேக், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1961)
சிறப்பு நாள்
- உலக ஈமோபீலியா நாள்
- பெண்கள் நாள் (காபோன்)
- விடுதலை நாள் (சிரியா, பிரான்சிடம் இருந்து 1946)