விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன்
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 21:03 மணி வெள்ளி, திசம்பர் 27, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
சூன் 1: பன்னாட்டு குழந்தைகள் நாள்
- 1660 – மேரி டயர் மாசச்சுசெட்சில் குவேக்கர்களைத் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார்.
- 1958 – இனவன்முறைகளில் பாதிக்கப்பட்ட 4,397 தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
- 1962 – நாட்சி வதைமுகாம்களை உருவாக்கிய அடோல்வ் ஏச்மென் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.
- 1979 – 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
- 1981 – தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் (தற்போதைய கட்டடம் படத்தில்) பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
- 2001 – நேபாள அரசுப் படுகொலைகள்: நேபாளத்தின் முடிக்குரிய இளவரசர் திபெந்திரா தனது தந்தை மன்னர் பிரேந்திரா, தாயார் ஐசுவர்யா உட்பட குடும்பத்தினர் ஏழு பேரை சுட்டுக் கொன்றார்.
- 2009 – இரியோ டி செனீரோவில் இருந்து பாரிசு சென்று கொண்டிருந்த ஏர் பிரான்சு ஏஎப் 447 விமானம் பிரேசில் கரைக்கப்பால் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 228 பேரும் உயிரிழந்தனர்.
அ. தா. பன்னீர்செல்வம் (பி. 1888)
அண்மைய நாட்கள்: மே 31 – சூன் 2 – சூன் 3
- 1615 – பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.
- 1896 – மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1924 – ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்துப் பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அரசுத்தலைவர் கால்வின் கூலிஜ் அறிமுகப்படுத்தினார்.
- 1953 – இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணியாக முடிசூடினார் (படம்). தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதலாவது பெரிய பன்னாட்டு சர்வதேச நிகழ்வு இதுவாகும்.
- 1964 – பலத்தீன விடுதலை இயக்கம் அமைக்கப்படட்து.
- 1966 – நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
- 2012 – முன்னாள் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
டி. எஸ். துரைராஜ் (இ. 1986) · சி. ஜெயபாரதி (இ. 2015) · கவிக்கோ அப்துல் ரகுமான் (இ. 2017)
அண்மைய நாட்கள்: சூன் 1 – சூன் 3 – சூன் 4
- 1839 – சீனாவில் லின் சீசு பிரித்தானிய வணிகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1.2 மில்லியன் கிகி அபினியை அழித்தார். முதலாம் அபினிப் போர் ஆரம்பமானது.
- 1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
- 1984 – அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற்கோயிலுள் (படம்) இந்திய இராணுவத்தினர் புகுந்தனர். சூன் 6 வரை இடம்பெற்ற இந்நடவடிக்கையில் 5,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
- 1992 – ஆத்திரேலியாவில் எடி மாபோ தாக்கல் செய்த மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கின் தீர்ப்பின் படி, பழங்குடியினரின் நிலங்களின் உரிமையை அவர்களுக்கே திரும்ப வழங்கப்பட்டது.
- 2007 – விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு தமிழ்ப் பணியாளர்கள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மு. கருணாநிதி (பி. 1924) · ஜெய்சங்கர் (இ. 2000) · இரா. திருமுருகன் (இ. 2009)
அண்மைய நாட்கள்: சூன் 2 – சூன் 4 – சூன் 5
சூன் 4: ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்
- 1707 – ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
- 1878 – உதுமானியப் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது.
- 1896 – என்றி போர்டு (படம்) பெற்றோலில் இயங்கும் தனது முதலாவது தானுந்தை வெற்றிகரமாகச் சோதித்தார்.
- 1917 – முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன.
- 1919 – பெண்களின் உரிமைகள்: பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலத்துக்கு அமெரிக்க சட்டமன்றம் அனுமதி அளித்தது.
- 1987 – பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.
- 1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
வ. வே. சு. ஐயர் (இ. 1925) · எஸ். பி. பாலசுப்பிரமணியம் (பி. 1946) · நந்தி (இ. 2005)
அண்மைய நாட்கள்: சூன் 3 – சூன் 5 – சூன் 6
சூன் 5: உலக சுற்றுச்சூழல் நாள்
- 1862 – தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்டப்பட்டது.
- 1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 1959 – லீ குவான் யூ (படம்) தலைமையில் சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
- 1974 – பொன். சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றிவளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
- 1984 – புளூஸ்டார் நடவடிக்கை: இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் படி, சீக்கியர்களின் பொற்கோயில் மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1995 – போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.
தஞ்சை இராமையாதாஸ் (பி. 1914) · ரெங்கநாதன் சீனிவாசன் (இ. 1958) · கே. கணேஷ் (இ. 2004)
அண்மைய நாட்கள்: சூன் 4 – சூன் 6 – சூன் 7
சூன் 6: தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
- 1674 – மராட்டியப் பேரரசராக சிவாஜி (படம்) முடிசூடினார்.
- 1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
- 1859 – ஆத்திரேலியா: குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை எனப் பெயரிடப்பட்ட நோமண்டி சண்டை ஆரம்பமானது. 155,000 கூட்டுப் படையினர் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரைகளில் தரையிறங்கி, அத்திலாந்திக் சுவரைத் தகர்த்து முன்னேறினர்.
- 1974 – சுவீடனில் நாடாளுமன்ற முடியாட்சி அமைக்கப்பட்டது.
- 1981 – பீகார் தொடருந்து விபத்து: இந்தியாவில் தொடருந்து ஒன்று பாக்மதி ஆறு பாலம் ஒன்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் 268 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காணாமல் போயினர்.
- 2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
சா. கணேசன் (பி. 1908) · மு. சி. பூரணலிங்கம் பிள்ளை (இ. 1947) · ஆலங்குடி சோமு (இ. 1990)
அண்மைய நாட்கள்: சூன் 5 – சூன் 7 – சூன் 8
- 1099 – முதலாவது சிலுவைப் போர்: எருசலேம் மீதான முற்றுகை ஆரம்பமானது.
- 1494 – தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தை (படம்) இரண்டு நாடுகளாகத் துண்டாடும் உடன்படிக்கை எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையில் எட்டப்பட்டது.
- 1929 – வத்திக்கான் நகரை தனிநாடாக அங்கீகரிக்கும் உடன்பாடு இத்தானிய இராச்சியத்துக்கும் திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையில் ஏற்பட்டது.
- 1938 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனத் தேசியவாதிகளின் அரசு சப்பானிய இராணுவத்தின் முற்றுகையைத் தடுக்கும் முகமாக மஞ்சள் ஆற்றைப் பெருக்கெடுக்கச் செய்ததில் 900,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1962 – அல்ஜியர்ஸ் பல்கலைக்கழக நூலகக் கட்டடம் வலதுசாரித் தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்டதில், 500,000 இற்கும் அதிகமான நூல்கள் எரிந்தன.
- 2000 – இசுரேல், லெபனான் ஆகியவற்றிற்கிடையேயான எல்லைக் கோட்டை ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்தது.
- 2007 – ஈழப்போர்: கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
பொன்னம்பலம் குமாரசுவாமி (இ. 1906) · மு. செ. விவேகானந்தன் (இ. 1999) · அல்லாடி ராமகிருஷ்ணன் (இ. 2008)
அண்மைய நாட்கள்: சூன் 6 – சூன் 8 – சூன் 9
சூன் 8: உலகப் பெருங்கடல்கள் நாள்
- 1783 – ஐசுலாந்தில் லாக்கி (படம்) எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் உயிரிழந்தனர். அடுத்த ஏழாண்டுகள் அங்கு பஞ்சம் நிலவியது.
- 1856 – 194 பிட்கன் தீவினரைக் கொண்ட ஒரு குழு நோர்போக் தீவை அடைந்து அத்தீவில் மூன்றாவது குடியிருப்பை ஆரம்பித்தனர்.
- 1953 – வாசிங்டன் உணவகங்களில் கறுப்பினத்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 1967 – ஆறு நாள் போர்: அமெரிக்காவின் லிபர்ட்டி என்ற ஆய்வுக் கப்பல் இசுரேலின் வான்படையினரால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 171 பேர் காயமடைந்தனர்.
- 1972 – வியட்நாம் போர்: ஒன்பது வயது சிறுமி நேப்பாம் குண்டு வீசப்பட்டதில் காயமடைந்தது வீதி வழியே ஓடி வருவதை அசோசியேட்டட் பிரெசு செய்தியாளர் படம் பிடித்தார். இப்படத்திற்கு பின்னர் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.
- 2004 – 1882 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அவதானிக்கப்பட்டது.
வைத்திலிங்கம் துரைசுவாமி (பி. 1874) · மதுரை மணி ஐயர் (இ. 1968) · பி. ஏ. பெரியநாயகி (இ. 1990)
அண்மைய நாட்கள்: சூன் 7 – சூன் 9 – சூன் 10
- 68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- 1667 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: மெட்வே மீதான இடச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது.
- 1762 – பிரித்தானியப் படைகள் அவானா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. ஏழாண்டுப் போர்க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது.
- 1900 – இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா (படம்) பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.
- 1903 – அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.
- 1959 – முதலாவது அணுவாற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 2010 – ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.
பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர் (பி. 1898) · ப. சுந்தரேசனார் (இ. 1981)
அண்மைய நாட்கள்: சூன் 8 – சூன் 10 – சூன் 11
- 1782 – சியாமின் மன்னராக முதலாம் இராமா (படம்) முடி சூடினார்.
- 1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.
- 1801 – சிவகங்கையின் சின்னமருது ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும் என்ற தனது விடுதலைப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
- 1986 – மண்டைதீவுக் கடல் படுகொலைகள்: யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1996 – வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
- 2003 – நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
வே. தில்லைநாயகம் (பி. 1925) · கே. முத்தையா (இ. 2003) · கிரேசி மோகன் (இ. 2019)
அண்மைய நாட்கள்: சூன் 9 – சூன் 11 – சூன் 12
- 1594 – எசுப்பானியாவின் மன்னர் இரண்டாம் பிலிப்பு பிலிப்பீன்சின் உள்ளூர்ப் பெருங்குடிகள், மற்றும் அதிகாரிகளின் உரிமைகளையும் சலூகைகளையும் அங்கீகரித்ததன் மூலம், தனது ஆட்சியை அங்கு உறுதிப்படுத்திக் கொண்டார்.
- 1898 – சீனாவில் சமூக, அரசியல் கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நூறு நாள்கள் சீர்திருத்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1935 – அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது பண்பலை ஒலிபரப்பை அறிமுகப்படுத்தினார்.
- 1937 – பெரும் துப்புரவாக்கம்: சோவியத் ஒன்றியத்தில் யோசப் ஸ்டாலினின் உத்தரவுப்படி எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1956 – கல்லோயா படுகொலைகள்: இலங்கையின் வடக்கே கல்லோயாவில் சிங்களக் குடியேறிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1963 – தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
- 2004 – நாசாவின் காசினி-ஐசென் விண்ணுளவி சனிக் கோளின் பீபி துணைக்கோளை (படம்) அண்டிச் சென்றது.
மு. கா. சித்திலெப்பை (பி. 1838) · ஏ. சி. திருலோகச்சந்தர் (பி. 1930) · பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இ. 1995)
அண்மைய நாட்கள்: சூன் 10 – சூன் 12 – சூன் 13
சூன் 12: பிலிப்பீன்சு - விடுதலை நாள் (1898)
- 1775 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
- 1902 – ஆத்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
- 1914 – உதுமானியப் பேரரசில் துருக்கியர்கள் 50 முதல் 100 கிரேக்கர்களைப் படுகொலை செய்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோரை இனக்கருவறுப்பு என்ற பெயரில் வெளியேற்றினர்.
- 1964 – தென்னாபிரிக்காவின் கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு (படம்) ஆயுள்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- 1990 – உருசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து உருசியாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.
- 1991 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
சி. ஜே. எலியேசர் (பி. 1918) · சிபில் கார்த்திகேசு (இ. 1948) · வி. கிருஷ்ணமூர்த்தி (இ. 2014)
அண்மைய நாட்கள்: சூன் 11 – சூன் 13 – சூன் 14
- 1774 – அடிமைகள் இறக்குமதியை றோட் தீவு தடை செய்தது. வட அமெரிக்கக் குடியேற்றங்களில் அடிமை இறக்குமதியைத் தடை செய்த முதல் நாடு இதுவாகும்.
- 1917 – முதலாம் உலகப் போர்: இலண்டன் நகர் மீது செருமனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
- 1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
- 1983 – பயனியர் 10 நெப்டியூனின் சுற்றுவட்டத்தை எட்டி, மத்திய சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் என்ற சாதனையை எட்டியது.
- 2000 – தென்கொரியாவின் அரசுத்தலைவர் கிம் டாய் ஜுங், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லை வடகொரியத் தலைநகர் பியொங்யாங்கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
- 2006 – நியூ ஹரைசன்ஸ் (படம்) விண்கலம் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 ஏபிஎல் என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
ஜேம்ஸ் இரத்தினம் (பி. 1905) · க. வெள்ளைவாரணனார் (இ. 1988)
அண்மைய நாட்கள்: சூன் 12 – சூன் 14 – சூன் 15
சூன் 14: உலக குருதிக் கொடையாளர் நாள்
- 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை அமைக்கப்பட்டது.
- 1830 – அல்ஜீரியாவில் பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமானது.
- 1907 – நோர்வே பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.
- 1940 – 728 போலந்துப் போர்க் கைதிகள் நாட்சிகளின் அவுசுவித்சு வதைமுகாமின் (படம்) முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.
- 1946 – மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்.
- 1949 – இரண்டாம் அல்பேர்ட் என்ற ஒரு செம்முகக் குரங்கு வி-2 ஏவுகணை ஒன்றில் 134 கிமீ (83 மைல்) உயரத்திற்கு சென்று, விண்வெளிக்கு சென்ற முதலாவது குரங்கு என்ற பெயரைப் பெற்றது. இது விண்வெளியிலேயே உயிரிழந்தது.
- 2017 – இலண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் உயரமான குடியிருப்பு மனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 பேர் உயிரிழந்தனர், 74 பேர் காயமடைந்தனர்.
கௌதம நீலாம்பரன் (பி. 1948) · க. சீ. கிருட்டிணன் (இ. 1961) · காகா இராதாகிருஷ்ணன் (இ. 2012)
அண்மைய நாட்கள்: சூன் 13 – சூன் 15 – சூன் 16
- 1667 – முதலாவது மனித குருதி மாற்றீடு மருத்துவர் சான் பாட்டிசுட் தெனி (படம்) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
- 1752 – மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்.
- 1844 – இயற்கை இறப்பர் பதப்படுத்தும் முறை சார்லசு கூடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
- 1846 – அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் எல்லைக்கோடு ராக்கி மலைத்தொடர் முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.
- 1878 – குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இவ்வாய்வே பின்னர் அசையும் திரைப்படம் உருவாக மூலமாக அமைந்தது.
- 1888 – முடிக்குரிய இளவரசர் வில்லியம் செருமானியப் பேரரசின் கடைசி மன்னராக முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம், மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், இவ்வாண்டு செருமனியின் மூன்று பேரரசர்களின் ஆட்சி ஆண்டு ஆகும்.
மணவை முஸ்தபா (பி. 1935) · மு. அண்ணாமலை (இ. 1948) · க. அ. நீலகண்ட சாத்திரி (இ. 1975)
அண்மைய நாட்கள்: சூன் 14 – சூன் 16 – சூன் 17
- 1773 – வங்காளம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முதன்மை மாகாணமானது. உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது.
- 1819 – குசராத்து, கச்சு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,550 பேர் உயிரிழந்தனர்.
- 1883 – இங்கிலாந்தில் விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
- 1940 – லித்துவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.
- 1958 – 1956 அங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- 1963 – வஸ்தோக் 6: உருசியாவின் வலந்தீனா தெரசுக்கோவா (படம்) விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
- 2010 – பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.
கருமுத்து தியாகராசர் (பி. 1893) · டி. ஆர். மகாலிங்கம் (பி. 1924)
அண்மைய நாட்கள்: சூன் 15 – சூன் 17 – சூன் 18
சூன் 17: ஐசுலாந்து – விடுதலை நாள் (1944)
- 1631 – மும்தாசு மகால் (படம்) பிள்ளைப்பேற்றின் போது இறந்தார். அவரது கணவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் அடுத்த 17 ஆண்டுகளுக்கு மும்தாசுக்கான நினைவுச்சின்னமான தாஜ்மகாலைக் கட்டுவதில் முனைந்தார்.
- 1885 – விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
- 1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தார்.
- 1939 – பிரான்சில் கடைசித் தடவையாக பகிரங்கமாகக் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1940 – எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன. 1991 இலேயே இவை விடுதலை பெற்றன.
- 1953 – பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 1967 – அணுகுண்டு சோதனை: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.
மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா (பி. 1883) · வாஞ்சிநாதன் (இ. 1911) · மீ. ப. சோமு (பி. 1921)
அண்மைய நாட்கள்: சூன் 16 – சூன் 18 – சூன் 19
- 1815 – நெப்போலியப் போர்கள்: வாட்டர்லூ சமரில் நெப்போலியன் பொனபார்ட் வெல்லிங்டன் பிரபுவினால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் பிரான்சின் அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.
- 1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு அறிக்கைகளை ஆல்ஃவிரடு அரசல் வாலேசுவிடம் இருந்து பெற்றார். இதனை அடுத்து டார்வின் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டி வந்தது.
- 1928 – வானோடி அமேலியா ஏர்ஃகாட் அத்திலாந்திக்குப் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
- 1946 – சமூகவுடைமைவாதி ராம் மனோகர் லோகியா போத்துக்கீசருக்கு எதிராக கோவாவில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
- 1953 – 1952 எகிப்தியப் புரட்சி முடிவுக்கு வந்தது. முகமது அலி வம்சம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1983 – சாலஞ்சர் விண்ணோடம்: சாலி றைட் (படம்) விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
பி. கக்கன் (பி. 1920, இ. 1908) · கோபுலு (பி. 1924) · பஞ்சு அருணாசலம் (பி. 1921)
அண்மைய நாட்கள்: சூன் 17 – சூன் 19 – சூன் 20
- 1586 – வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் தோல்வியடைந்ததை அடுத்து ஆங்கிலேயக் குடியேறிகள் ரோனோக் தீவில் இருந்து வெளியேறினர்.
- 1862 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது.
- 1867 – மெக்சிகோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் (படம்) மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1987 – எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- 1988 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.
- 1991 – அங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
- 2012 – விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். 2019 இல் கைது செய்யப்படும் வரை அங்கேயே அவர் தங்கியிருந்தார்.
ஜெகசிற்பியன் (பி. 1925) · ராபின் மெக்கிலாசன் (இ. 2012) · ஏ. எல். ராகவன் (இ. 2020)
அண்மைய நாட்கள்: சூன் 18 – சூன் 20 – சூன் 21
- 1837 – விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசியாக முடிசூடினார்.
- 1840 – சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (படம்) குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.
- 1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக முறை தொலைபேசி சேவையை கனடாவில் ஆரம்பித்தார்.
- 1921 – சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.
- 1944 – சோதனை ஏவுகணை எம்.டபிள்யூ 18014 வி-2 176 கிமீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனை படைத்தது.
- 1990 – இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
து. உருத்திரமூர்த்தி (இ. 1971) · சுரதா (இ. 2006) · ஆர். பிச்சுமணி ஐயர் (இ. 2015)
அண்மைய நாட்கள்: சூன் 19 – சூன் 21 – சூன் 22
சூன் 21: பன்னாட்டு யோகா நாள் · உலக இசை நாள்
- 1621 – முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1734 – மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார்.
- 1736 – இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட அச்சியந்திரசாலையை ஒல்லாந்தர் நிறுவினர்.
- 1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியும் அவரது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.
- 2006 – புளூட்டோவின் (படம்) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு துணைக்கோள்களுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.
- 2009 – கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.
- 2012 – 200 ஆப்கானிய ஏதிலிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்திற்கும் கிறிஸ்துமசு தீவுக்கும் இடையில் மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காணாமல் போயினர்.
வே. ஆனைமுத்து (பி. 1925) · கே. வி. மகாதேவன் (இ. 2001)
அண்மைய நாட்கள்: சூன் 20 – சூன் 22 – சூன் 23
- 1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி (படம்) உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
- 1658 – போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.
- 1897 – பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் இந்தியாவின் புனே நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1992 – வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்தனர்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.
நா. பொன்னையா (பி. 1892) · சு. வேலுப்பிள்ளை (இ. 2007) · இரா. கனகரத்தினம் (இ. 2016)
அண்மைய நாட்கள்: சூன் 21 – சூன் 23 – சூன் 24
சூன் 23: பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்
- 1594 – அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
- 1658 – இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.
- 1757 – இந்தியாவில் பலாசி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராச் உத் தவ்லா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை ராபர்ட் கிளைவ் (படம்) தலைமையிலான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.
- 1868 – தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார்.
- 1980 – இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார்.
- 1985 – அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் பறந்து கொண்டிருந்த இந்திய விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 329 பேர் உயிரிழந்தனர்.
மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து (இ. 1983)
அண்மைய நாட்கள்: சூன் 22 – சூன் 24 – சூன் 25
- 1314 – இராபர்ட்டு புரூசு தலைமையிலான இசுக்கொட்லாந்துப் படைகள் இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தன. இசுக்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.
- 1856 – இலங்கையில் புகைப்படக்கலை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1894 – பிரான்சின் அரசுத்தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ (படம்) இத்தாலிய அரச எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
- 1939 – சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது.
- 1948 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
- 1950 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
- 1997 – ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
கா. அப்பாத்துரை (பி. 1907) · கண்ணதாசன் (பி. 1927) · எம். எஸ். விஸ்வநாதன் (பி. 1928)
அண்மைய நாட்கள்: சூன் 23 – சூன் 25 – சூன் 26
சூன் 25: மொசாம்பிக் - விடுதலை நாள்
- 1678 – வெனிசைச் சேர்ந்த எலேனா பிசுகோபியா (படம்) முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1803 – கண்டிப் போர்கள்: கண்டியில் மேஜர் டேவி தலைமையிலான பிரித்தானியப் படையினர் கண்டி அரசிடம் சரணடைந்தனர். ஏராளமான பிரித்தானியர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சு அதிகாரப்பூர்வமாக செருமனியிடம் சரணடைந்தது.
- 1950 – வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியப் போர் ஆரம்பமானது.
- 1975 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
- 1996 – சவூதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1997 – ஆளில்லா புரோகிரஸ் விண்கலம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் மோதியது.
முத்து வடுகநாதர் (இ. 1772) · அ. மாற்கு (பி. 1933) · நடராஜா ரவிராஜ் (பி. 1962)
அண்மைய நாட்கள்: சூன் 24 – சூன் 26 – சூன் 27
சூன் 26: சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
- 1409 – மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா பொதுச்சங்கம் உரோமின் திருத்தந்தை பன்னிரெண்டாம் கிரகோரியையும் பன்னிரண்டாம் பெனடிக்டையும் இணைத்ததை அடுத்து, பெத்ரோசு பிலார்கசு எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் ஆக நியமிக்கப்பட்டார்.
- 1541 – இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ (படம்) லிமாவில் கொல்லப்பட்டார்.
- 1803 – கண்டிப் போர்கள்: கண்டியில் சரணடைந்த பிரித்தானியப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டனர்.
- 1843 – நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஒங்கொங் தீவு பிரித்தானியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது.
- 1886 – ஆன்றி முவாசான் புளோரின் தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.
- 1948 – முதலாவது இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷாக்லி பெற்றார்.
செருகளத்தூர் சாமா (பி. 1904) · ம. பொ. சிவஞானம் (பி. 1906) · எம். எம். தண்டபாணி தேசிகர் (இ. 1972)
அண்மைய நாட்கள்: சூன் 25 – சூன் 27 – சூன் 28
- 1556 – தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1806 – டச்சு இலங்கையில் கத்தோலிக்கர் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
- 1844 – பின்னாள் புனிதர்களின் கிறித்து சபையை நிறுவிய இரண்டாம் யோசப்பு இசுமித்தும் (படம்) அவரது சகோதரரும் இலினொய் சிறையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1941 – உருமேனியா லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1954 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
- 1981 – சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தனது "மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை" வெளியிட்டது. இதில் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் விளைவுகளுக்காக மா சே துங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
- 1982 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
சி. கணபதிப்பிள்ளை (பி. 1899) · அகிலன் (பி. 1922) · சி. ஆர். சுப்பராமன் (இ. 1952)
அண்மைய நாட்கள்: சூன் 26 – சூன் 28 – சூன் 29
- 1904 – டென்மார்க் பயணிகள் கப்பல் வடக்கு அத்திலாந்திக் பெருங்கடலில் சிறிய திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் உயிரிழந்தனர்.
- 1914 – ஆத்திரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி இளவரசி சோஃபி ஆகியோர் சாரயேவோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது காவ்ரீலோ பிரின்சிப் என்ற பொசுனிய-செர்பிய தேசியவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் தொடங்க இது காரணமானது.
- 1919 – வெர்சாய் ஒப்பந்தம் (படம்) பாரிசில் கையெழுத்திடப்பட்டது. செருமனிக்கும் முதலாம் உலகப் போரின் நேச அணிகளுக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.
- 1948 – பனிப்போர்: டீட்டோ–இசுட்டாலின் பிரிவை அடுத்து யுகொசுலாவியப் பொதுவுடமைவாதிகளின் அணி கொமின்ஃபோர்மில் இருந்து நீக்கப்பட்டது.
- 1950 – கொரியப் போர்: 100,000 இற்கும் அதிகமான பொதுவுடமை சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1995 – மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.
சிங்கராயர் தாவீது (பி. 1907) · சின்னப்பா தேவர் (பி. 1915) · எஸ். எஸ். கணேசபிள்ளை (பி. 1937)
அண்மைய நாட்கள்: சூன் 27 – சூன் 29 – சூன் 30
சூன் 29: சீசெல்சு – விடுதலை நாள் (1976)
- 1613 – இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது.
- 1814 – மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
- 1900 – நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் "நோபல் அறக்கட்டளை" ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது.
- 1975 – ஸ்டீவ் வாஸ்னியாக் முதலாவது ஆப்பிள் I கணினியை சோதித்தார்.
- 1995 – தென் கொரியாவின் சியோல் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் உயிரிழந்தனர், 937 பேர் காயமடைந்தனர்.
- 1995 – அட்லாண்டிசு விண்ணோடம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் முதல் தடவையாக இணைந்தது (படம்).
- 2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது.
ஆர். எஸ். மனோகர் (பி. 1907) · வ. ஐ. சுப்பிரமணியம் (இ 2009) · சூலமங்கலம் ஜெயலட்சுமி (இ. 2017)
அண்மைய நாட்கள்: சூன் 28 – சூன் 30 – சூலை 1
சூன் 30: கொங்கோ – விடுதலை நாள் (1960)
- 1688 – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்திற்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்கு வழிவகுத்தது.
- 1905 – சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
- 1908 – துங்குசுக்கா நிகழ்வு: புவியில் மாபெரும் உந்த நிகழ்வு (படம்) சைபீரியாவில் இடம்பெற்றது. எவரும் உயிரிழக்கவில்லை.
- 1934 – நீள் கத்திகளுடைய இரவு: இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை செருமனியில் நிகழ்ந்தது.
- 1971 – சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
- 1990 – கிழக்கு, மற்றும் மேற்கு செருமனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
- 1997 – ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
முத்தையா பாகவதர் (இ. 1945) · ராஜ ஸ்ரீகாந்தன் (பி 1948) · விந்தன் (இ. 1975)
அண்மைய நாட்கள்: சூன் 29 – சூலை 1 – சூலை 2