விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர்
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 12:20 மணி சனி, நவம்பர் 23, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
அக்டோபர் 1: உலக சைவ உணவு நாள், அனைத்துலக முதியோர் நாள்
- 1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
- 1833 – இலங்கையில் சட்டவாக்கப் பேரவை, மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.
- 1946 – நாட்சித் தலைவர்களுக்கு நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டன.
- 1949 – சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் மா சே துங் , சீன மக்கள் குடியரசு உருவானதை தியனன்மென் சதுக்கத்தில் அறிவித்தார்.
- 1953 – சென்னை மாநிலத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
- 1969 – கான்கோர்டு (படம்) விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தைத் தாண்டிப் பறந்தது.
- 1989 – தற்பால்சேர்க்கைத் திருமணத்தை உலகில் முதன் முதலாக டென்மார்க் சட்டபூர்வமாக்கியது.
சிவாஜி கணேசன் (பி. 1927) · பாபநாசம் சிவன் (இ. 1973) · பூர்ணம் விஸ்வநாதன் (இ. 2008)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 30 – அக்டோபர் 2 – அக்டோபர் 3
அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி, அனைத்துலக வன்முறையற்ற நாள்
- 1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியாலைக் கண்டுபிடித்தார்.
- 1865 – இலங்கையின் முதலாவது தொடருந்து போக்குவரத்து சேவை கொழும்புக்கும் அம்பேபுசைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது.
- 1925 – தொலைக்காட்சித் திட்டத்தின் முதலாவது சோதனையை ஜான் லோகி பைர்டு நடத்தினார்.
- 1937 – டொமினிக்கன் குடியரசில் வசிக்கும் எயிட்டிய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார்.
- 1955 – ஆரம்பகாலக் கணினிகளில் ஒன்றான எனியாக் மூடப்பட்டது.
- 1968 – மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தின் முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்று 10 நாட்களில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
- 1972 – இலங்கையின் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழரசுக் கட்சித் தலைவர் சா. ஜே. வே. செல்வநாயகம் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார்.
காசிவாசி செந்திநாதையர் (பி. 1848) · ஐராவதம் மகாதேவன் (பி. 1930) · காமராசர் (படம், இ. 1975)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 1 – அக்டோபர் 3 – அக்டோபர் 4
அக்டோபர் 3: ஈராக் - விடுதலை நாள் (1932)
- 1833 – இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
- 1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.
- 1935 – இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது. இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் ஆரம்பமானது.
- 1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
- 1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
- 1990 – செருமானிய மீளிணைவு (படம்): செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.
- 2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.
க. வச்சிரவேல் முதலியார் (இ. 1989) · ம. பொ. சிவஞானம் (இ. 1995) · ஆ. கந்தையா (இ. 2011)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 2 – அக்டோபர் 4 – அக்டோபர் 5
அக்டோபர் 4: அசிசியின் புனித பிரான்சிசு (படம்) திருவிழா, உலக விலங்கு நாள்
- 1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின.
- 1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
- 1957 – பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக சிங்கள இனவாதிகள் கண்டிக்கு நடைப்பயணம் நடத்தினர்.
- 1957 – புவியைச் சுற்றி வந்த முதலாவது செயற்கைக்கோள் என்ற சாதனையை சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் 1 ஏற்படுத்தியது.
- 1963 – கியூபா, எயிட்டி ஆகிய நாடுகளைத் சூறாவளி புளோரா தாக்கியதில் 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1985 – கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நிறுவப்பட்டது.
சுப்பிரமணிய சிவா (பி. 1884) · திருப்பூர் குமரன் (பி. 1904) · சாலை இளந்திரையன் (இ. 1998)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 3 – அக்டோபர் 5 – அக்டோபர் 6
அக்டோபர் 5: போர்த்துக்கல் - குடியரசு நாள் (1910)
- 1450 – பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- 1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.
- 1795 – இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
- 1905 – ரைட் சகோதரர்கள் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர் (படம்).
- 1948 – துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- 1978 – தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
- 1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.
இராமலிங்க அடிகள் (பி. 1823) · ரா. கி. ரங்கராஜன் (பி. 1927) · சோ ராமசாமி (பி. 1934)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 4 – அக்டோபர் 6 – அக்டோபர் 7
- 1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய செருமானியர் ஆவர்.
- 1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது.
- 1976 – சீன பிரதமர் நால்வர் குழுவையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.
- 1976 – தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1995 – வேறொரு சூரியனை சுற்றி வரும் முதலாவது கோள் 51 பெகாசி பி (படம்) கண்டுபிடிக்கப்பட்டது.
- 2008 – அநுராதபுரம் குண்டுவெடிப்பு: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
புலமைப்பித்தன் (பி. 1935) · சுகுமாரி (பி. 1940) · ப. சுப்பராயன் (இ. 1962)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 5 – அக்டோபர் 7 – அக்டோபர் 8
- 1763 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் வட அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு பழங்குடிகளின் பிரதேசங்களை வெள்ளையினக் குடியேற்றங்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.
- 1858 – பிரித்தானிய அரசினால் கைது செய்யப்பட்ட கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் சா சஃபார் (படம்) இரங்கூனிற்கு நாடு கடத்தப்பட்டார்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: மெக்கலம் குறிப்பு சப்பானியரை அமெரிக்கா மீது தாக்குதலை நடத்தத் தூண்டுவதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவை ஐரோப்பாவில் போரில் ஈடுபடுத்த முன்மொழிந்தது.
- 1949 – கம்யூனிச செருமன் மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1950 – அன்னை தெரேசா பிறரன்பின் பணியாளர்கள் சபையை நிறுவினார்.
- 1959 – சோவியத் விண்கலம் லூனா 3 முதற்தடவையாக எடுத்த சந்திரனின் அதி தூரத்திய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
மு. செல்லையா (பி. 1906) · கோ. சுப்பிரமணியன் (பி. 1906) · ஞானக்கூத்தன் (பி. 1938)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 6 – அக்டோபர் 8 – அக்டோபர் 9
- 1856 – சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே இரண்டாம் அபினிப் போர் ஆரம்பமானது.
- 1871 – சிகாகோ பெருந்தீயில் (படம்) 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் உயிரிழந்தனர்
- 1932 – இந்திய வான்படை நிறுவப்பட்டது.
- 1967 – கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைது செய்யப்பட்டனர்.
- 1991 – குரோவாசியா, சுலோவீனியா மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- 2005 – காசுமீரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாக்கித்தான், இந்தியா, ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்து, 69,000–75,266 வரையானோர் காயமடைந்தனர். 2.8 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (இ. 1959) · பி. ஆர். பந்துலு (இ. 1974) · வீரமணி ஐயர் (இ. 2003)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 7 – அக்டோபர் 9 – அக்டோபர் 10
- 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது.
- 1740 – டச்சுக் குடியேறிகளும் பல்வேறு அடிமைக் குழுக்களும் பட்டாவியாவில் உள்ளூர் சீன இனத்தவரைக் கொலை செய்ய ஆரம்பித்தனர். சாவகத் தீவில் இரண்டாண்டுகள் நீடித்த போரில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
- 1967 – சே குவேரா (படம்) பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
- 2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
எம். பக்தவத்சலம் (பி. 1897) · மு. இராமலிங்கம் (பி. 1908) · பி. எஸ். வீரப்பா (பி. 1911)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 8 – அக்டோபர் 10 – அக்டோபர் 11
- 1760 – டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் சுயாட்சியைப் பெற்றனர்.
- 1780 – கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
- 1846 – நெப்டியூனின் மிகப்பெரிய சந்திரன் டிரைட்டனை (படம்) ஆங்கிலேய வானியலாளர் வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.
- 1980 – வடக்கு அல்சீரியாவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2,633 பேர் உயிரிழந்தனர்.
- 1986 – எல் சால்வடோர் தலைநகர் சான் சல்வடோரில் 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1987 – விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.
சாமுவேல் பிஸ்க் கிறீன் (பி. 1822) · மு. வரதராசன் (இ. 1974) · மனோரமா (இ. 2015)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 9 – அக்டோபர் 11 – அக்டோபர் 12
அக்டோபர் 11: பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்
- 1649 – 10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் படைகள் வெக்சுபோர்டு நகரைத் தாக்கியதில், 2,000 அயர்லாந்துக் கூட்டமைப்புப் படையினரும், 1,500 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
- 1811 – முதலாவது நீராவிப் படகுக் கப்பல் சேவை ஜூலியானா நியூயார்க்கிற்கும் நியூ செர்சி, ஓபோகின் நகருக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1865 – ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூறுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
- 1899 – இரண்டாம் பூவர் போர் ஆரம்பம். தென்னாப்பிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கும் திரான்சுவால், ஆரஞ்சு இராச்சியத்தின் பூவர்களுக்கும் இடையே போர் ஆரம்பமானது (படம்).
- 1958 – நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.
- 1987 – விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தனர்.
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (பி. 1820) · வேதநாயகம் பிள்ளை (பி. 1826) · கே. பி. சுந்தராம்பாள் (பி. 1908)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 10 – அக்டோபர் 12 – அக்டோபர் 13
- 1492 – கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார்.
- 1785 – ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மதராசு கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்.
- 1798 – இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் (படம்) ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
- 1871 – பிரித்தானிய இந்தியா குற்றப் பரம்பரைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி 160 இற்கும் மேற்பட்ட உள்ளூர் குழுக்கள் 'குற்ற சமூகங்களாக' அறிவிக்கப்பட்டன. 1949 இல் இச்சட்டம் விலக்கப்பட்டது.
- 1994 – மெகல்லன் விண்ணுளவி வெள்ளியின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை நாசா இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.
- 2002 – பாலியில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.
ச. வையாபுரிப்பிள்ளை (பி. 1891) · நெ. து. சுந்தரவடிவேலு (பி. 1912) · வெ. ப. சுப்பிரமணியர் (இ. 1946)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 11 – அக்டோபர் 13 – அக்டோபர் 14
- 54 – உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார்.
- 1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச்சு தெரிவு செய்யப்பட்டது.
- 1972 – உருகுவை வான்படை விமானம் ஒன்று அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்
- 1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
- 2013 – மத்தியப் பிரதேசம், ததியா மாவட்டத்தில் ரத்தன்கார் மாதா கோவிலில் நவராத்திரி நாளில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.
- 2016 – மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது.
புதுவை சிவம் (பி. 1908) · சிட்டி பாபு (பி. 1936) · சங்கரலிங்கனார் (இ. 1956)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 12 – அக்டோபர் 14 – அக்டோபர் 15
அக்டோபர் 14: உலகத் தர நிர்ணய நாள்
- 1586 – இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
- 1912 – அமெரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் மில்வாக்கியில் பரப்புரை நடத்திய போது, மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனால் சுடப்பட்டார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: சூலை 20 இல் இடம்பெற்ற இட்லரின் படுகொலை முயற்சி தொடர்பாக இராணுவ அதிகாரி இர்வின் ரோமெல் கட்டாயமாகத் தற்கொலை செய்யத் தூண்டப்பட்டு இறந்தார்.
- 1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
- 1956 – இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் (படம்) தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
- 1964 – லியொனீது பிரெசுனேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நிக்கித்தா குருசேவ் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.
இலங்கையர்கோன் (இ. 1961) · சில்லையூர் செல்வராசன் (இ. 1995) · சுந்தர ராமசாமி (இ. 2005)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 13 – அக்டோபர் 15 – அக்டோபர் 16
அக்டோபர் 15: உலகக் கைகழுவும் நாள்
- 1582 – புதிய நாட்காட்டியை திருத்தந்தை பதின்மூன்றாம் கிரெகொரி ஐரோப்பிய கத்தோலிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தினார்.
- 1764 – ஆர்க்காடு படைகளின் போர் வீரரும் கிழக்கிந்தியப் படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கிய மருதநாயகம் ஆங்கிலேயர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
- 1815 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் செயிண்ட் எலனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
- 1917 – செருமனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி (படம்) பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
- 1932 – டாட்டா ஏர்லைன்சு விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது. இது பின்னர் ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1957 – பிரித்தானியக் கடற்படைத் தளம் அடங்கலான திருகோணமலைத் துறைமுகத்தை பிரித்தானியா இலங்கையிடம் கையளித்தது.
- 1987 – புர்க்கினா பாசோவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் தோமசு சங்காரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஏ. பீம்சிங் (பி. 1924) · அப்துல் கலாம் (பி. 1931) · தருமபுரம் ப. சுவாமிநாதன் (இ. 2009)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 14 – அக்டோபர் 16 – அக்டோபர் 17
- 1799 – பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
- 1846 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் ஈதர் மயக்க மருந்தை முதற்தடவையாக மாசச்சூசெட்சு பொது மருத்துவமனையில் பரிசோதித்தார்.
- 1905 – பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.
- 1946 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: போர்க் குற்றம் சாட்டப்பட்ட நாட்சி தலைவர்களின் தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
- 1951 – பாக்கித்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலி கான் (படம்) இராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- 2006 – இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லாது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் (பி. 1700) · மு. கதிரேசச் செட்டியார் (பி. 1881) · செம்பை வைத்தியநாத பாகவதர் (இ. 1974)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 15 – அக்டோபர் 17 – அக்டோபர் 18
அக்டோபர் 17: உலக வறுமை ஒழிப்பு நாள்
- 1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார்.
- 1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1861 – ஆத்திரேலியா குயின்சுலாந்தில் பழங்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனக் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.
- 1907 – மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.
- 1933 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாட்சி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.
- 1943 – சயாம் மரண இரயில்பாதை (படம்) (பர்மா-தாய்லாந்து தொடருந்து சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
- 1995 – யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.
ஆர். கே. சண்முகம் செட்டியார் (பி. 1892) · பூரணி (பி. 1913) · கண்ணதாசன் (இ. 1981)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 16 – அக்டோபர் 18 – அக்டோபர் 19
அக்டோபர் 18: புனித லூக்கா விழா
- 1679 – கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் இராபர்ட் நொக்சு (படம்) அங்கிருந்து தப்பி மன்னார் வந்து சேர்ந்தார்.
- 1867 – உருசியப் பேரரசிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
- 1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
- 1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
- 1954 – முதலாவது டிரான்சிஸ்டர் வானொலி அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1967 – சோவியத் விண்கலம் வெனேரா 4 வெள்ளிக் கோளை அடைந்தது.
- 2007 – கராச்சியில் முன்னாள் பாக்கித்தான் பிரதமர் பெனசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர், 450 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பூட்டோ காயமெதுவுமின்றி தப்பினார்.
பல்லடம் சஞ்சீவ ராவ் (பி. 1882) · வீரப்பன் (இ. 2004)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 17 – அக்டோபர் 19 – அக்டோபர் 20
- 1805 – நெப்போலியப் போர்கள்: ஆத்திரியாவின் தளபதி மாக்கின் இராணுவம் நெப்போலியன் பொனபார்ட்டிடம் சரணடைந்தது.
- 1900 – மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிரியல் விதியை (பிளாங்கின் விதி) கண்டுபிடித்தார்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: 2,098 இத்தாலிய போர்க் கைதிகளுடன் சென்ற சின்ஃபிரா என்ற சரக்குக் கப்பல் கிரீட் நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
- 1943 – காச நோய்க்கான இசுட்ரெப்டோமைசின் என்ற முதலாவது நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து இரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.
- 2000 – பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
- 2001 – 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனேசியப் படகு கிறித்துமசுத் தீவில் கவிழ்ந்ததில் 146 சிறுவர்கள், 142 பெண்கள் உட்பட 353 பேர் உயிரிழந்தனர்.
- 2003 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை தெரேசாவை (படம்) முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
நாமக்கல் கவிஞர் (பி. 1888) · சுப்பிரமணியன் சந்திரசேகர் (பி. 1910) · பங்காரு அடிகளார் (இ. 2023)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 18 – அக்டோபர் 20 – அக்டோபர் 21
- 1818 – அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1941 – கிறகுஜேவாச் படுகொலைகள்: செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்சி செருமனியரால் கொல்லப்பட்டனர்.
- 1962 – சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோடு வரையான இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பித்தது. இந்திய சீனப் போர் ஆரம்பிக்க இது வழிவகுத்தது.
- 1973 – சிட்னி ஒப்பேரா மாளிகையை (படம்) இரண்டாம் எலிசபெத் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
- 1982 – மாஸ்கோ லூசினிக்கி அரங்கில் இடம்பெற்ற யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு கால்பந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் உயிரிழந்தனர்.
- 1982 – இலங்கையில் முதலாவது அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.
- 2011 – லிபிய உள்நாட்டுப் போர்: தேசிய இடைக்காலப் பேரவை போராளிகள் பதவியில் இருந்து அகற்றப்பட்ட அரசுத்தலைவர் முஅம்மர் அல் கதாஃபியை அவரது சொந்த நகரில் கைப்பற்றிப் படுகொலை செய்தனர்.
கந்தையா திருஞானசம்பந்தன் (பி. 1913) · தொ. மு. சி. ரகுநாதன் (பி. 1923) · ஸ்ரீதர் (இ. 2008)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 19 – அக்டோபர் 21 – அக்டோபர் 22
- 1854 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் 38 செவிலியருடன் கிரிமியப் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.
- 1876 – யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி நோய் வேகமாகப் பரவியது. பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
- 1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது வெள்ளொளிர்வு விளக்குக்கான வடிவமைப்புக்கு காப்புரிமம் கோரினார்.
- 1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை (படம்) அறிவித்தார்.
- 1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1983 – நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.
- 1987 – யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர்.
முத்துசுவாமி தீட்சிதர் (இ. 1835) · தேங்காய் சீனிவாசன் (பி. 1937) · வெங்கட் சாமிநாதன் (இ. 2015)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 20 – அக்டோபர் 22 – அக்டோபர் 23
அக்டோபர் 22: பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள்
- 1707 – சில்லி கடற்படைப் பேரழிவு (படம்): பிரித்தானியாவின் நான்கு அரச கடற்படை கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் தவறால் சில்லி தீவுகளில் மூழ்கியதில் 1,400 கடற்படையினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக முதலாவது நெடுங்கோட்டுச் சட்டம் 1714 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின் வெள்ளொளிர் விளக்கைப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது.
- 1943 – செருமனி மீது பிரித்தானிய அரச வான்படையினரின் இரண்டாவது நெருப்புப்புயல் தாக்குதலின் போது, காசெல் நகரில் 10,000 பேர் கொல்லப்பட்டனர், 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- 1965 – இந்தியா-பாக்கித்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
- 1975 – சோவியத்தின் ஆளில்லா விண்கலம் வெனேரா 9 வெள்ளிக் கோள் மீது தரையிறங்கியது.
- 2007 – எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 20 பேரும், படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.
- 2008 – இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
மிரோன் வின்சுலோ (இ. 1864) · செ. இராசநாயகம் (பி. 1870) · அ. மாதவையா (இ. 1925)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 21 – அக்டோபர் 23 – அக்டோபர் 24
அக்டோபர் 23: மோல் நாள், அங்கேரியின் தேசிய நாள் (1956)
- 1707 – பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.
- 1915 – நியூயோர்க் நகரில் 25,000-33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 1917 – விளாதிமிர் லெனின் (படம்) அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
- 1946 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.
- 1956 – அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அங்கேரியப் புரட்சி நவம்பர் 4-இல் நசுக்கப்பட்டது.
- 1991 – கம்போடிய வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தம் பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
- 2001 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரியக் குடியரசுப் படை ஆயுதக் களைவில் ஈடுபட்டது.
அ. சீனிவாச ராகவன் (பி. 1905) · டபிள்யூ. எம். எஸ். தம்பு (இ. 1986) · அமுது (இ. 2010)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 22 – அக்டோபர் 24 – அக்டோபர் 25
அக்டோபர் 24: ஐக்கிய நாடுகள் நாள் (1945)
- 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
- 1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
- 1801 – மருது பாண்டிய சகோதரர்களும் (படம்) அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
- 1851 – யுரேனசு கோளைச் சுற்றும் உம்பிரியல், ஏரியல் ஆகிய நிலாக்களை வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.
- 1911 – வட கரொலைனாவில் ரைட் சகோதரர்கள் தமது வானூர்தியில் வானில் 9 நிமிடங்கள் 45 செக்கன்கள் பறந்தார்கள்.
- 1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
- 1994 – கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் காமினி திசாநாயக்கா உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.
ஆர். கே. லட்சுமண் (பி. 1921) · மு. கதிரேசனார் (இ. 1953) · எஸ். எஸ். ராஜேந்திரன் (இ. 2014)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 23 – அக்டோபர் 25 – அக்டோபர் 26
- 1917 – உருசியாவில் அக்டோபர் புரட்சி (பழைய நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர் (படம்).
- 1920 – இங்கிலாந்தின் பிரிக்சுடன் சிறையில் 74 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சின் பெயின் கோர்க் பிரபு டெரன்சு மெக்சுவீனி இறந்தார்.
- 1945 – சப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.
- 1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் உள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் காண்பிக்கப்பட்டன.
- 1971 – ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீனக் குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1983 – அமெரிக்காவும் அதன் கரிபியன் கூட்டு நாடுகளும் கிரெனாடாவை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றின.
- 2000 – பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
மதுரை மணி ஐயர் (பி. 1912) · செ. நாகலிங்கம் (இ. 1958) · எஸ். ராஜேஸ்வர ராவ் (இ. 1999)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 24 – அக்டோபர் 26 – அக்டோபர் 27
அக்டோபர் 26: இணைப்பு விழா (சம்மு காசுமீர்)
- 1775 – அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமெரிக்கப் புரட்சியை அடக்க இராணுவத்துக்கு அதிகாரம் அளித்தார்.
- 1876 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.
- 1947 – சம்மு-காசுமீர் மன்னர் இந்தியாவுடன் தனது இராச்சியத்தை இணைக்கச் சம்மதித்தார்.
- 1955 – ஆஸ்திரியா நிரந்தர நடுநிலை நாடாகத் தன்னை அறிவித்தது.
- 1977 – பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
- 1985 – ஆத்திரேலிய அரசு ஊலூரூவின் (படம்) உரிமையை உள்ளூர் பழங்குடியினரிடம் கையளித்தது.
- 2002 – மாஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அ. சந்திரசேகர பண்டிதர் (இ. 1879)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 25 – அக்டோபர் 27 – அக்டோபர் 28
- 1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது.
- 1922 – தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
- 1958 – பாக்கித்தானின் முதலாவது அரசுத்தலைவர் இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இராணுவத் தலைவர் அயூப் கான் (படம்) ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1990 – வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முசுலிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
- 1999 – ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 2017 – காத்தலோனியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
இழான் பில்லியொசா (இ. 1982)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 26 – அக்டோபர் 28 – அக்டோபர் 29
- 1636 – மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் முதலாவது கல்லூரியை நிறுவுவதற்கான வாக்கெடுப்பை அடுத்து அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகம் என இன்று அழைக்கப்படும் கல்லூரி நிறுவப்பட்டது.
- 1834 – மேற்கு ஆஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில் பிரித்தானியக் குடியேறிகளினால் 30 நூங்கார் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
- 1886 – நியூயார்க் துறைமுகத்தில் விடுதலைச் சிலையை (படம்) அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.
- 1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது. சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.
- 1965 – இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் "கிறித்தவமல்லாத சமயங்களுடனான திருச்சபையின் தொடர்புகள் பற்றிய அறிவிப்பை" திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார். இதன்படி, இயேசு கிறித்துவின் இறப்புக்கு யூதர்கள் காரணம் என்ற 760-ஆண்டுக்கால அறிவிப்பு மீளப்பெறப்பட்டது.
- 1995 – அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் ஏற்பட்ட தீவிபத்தில் 229 பேர் உயிரிழந்தனர், 265 பேர் காயமடைந்தனர்.
ருக்மணி தேவி (இ. 1978) · பி.ஸ்ரீ. (இ. 1981) · மைசூர் வீ. துரைசுவாமி (இ. 1997)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 27 – அக்டோபர் 29 – அக்டோபர் 30
- 1618 – ஆங்கிலேயக் கவிஞரும் நாடுகாண் பயணியுமான சர் வால்ட்டர் ரேலி (படம்) இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.
- 1863 – ஜெனீவாவில் கூடிய 18 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
- 1886 – அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1929 – 1929 வால் வீதி வீழ்ச்சி: "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.
- 1950 – அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.
- 2015 – 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு குழந்தைக் கொள்கையை சீனா கைவிடுவதாக அறிவித்தது.
மு. அருணாசலம் (பி. 1909) · வாலி (பி. 1931) · கே. வீரமணி (இ. 1990)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 28 – அக்டோபர் 30 – அக்டோபர் 31
- 1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினார்.
- 1953 – பனிப்போர்: பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான போரில், அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உத்தரவில் அமெரிக்கத் தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கையெழுத்திட்டார்.
- 1960 – முதலாவது வெற்றிகரமான சிறுநீரகக் கொடை ஐக்கிய இராச்சியத்தில் அளிக்கப்பட்டது.
- 1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள சார் வெடிகுண்டு (படம்) என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.
- 1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
- 1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
இராய. சொக்கலிங்கம் (பி. 1898) · முத்துராமலிங்கத் தேவர் (பி. 1908, இ. 1963) · லா.ச.ரா (பி. 1916, இ. 2007)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 29 – அக்டோபர் 31 – நவம்பர் 1
- 1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை செருமனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
- 1803 – கப்டன் டிரைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளை முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தினர். பலர் கொல்லப்ப்பட்டனர்.
- 1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
- 1961 – ஸ்டாலினின் உடல் மாஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
- 1968 – வியட்நாம் போர்: பாரிசு அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அறிவித்தார்.
- 1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (படம்)இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
எம். எல். வசந்தகுமாரி (இ. 1990) · செம்மங்குடி சீனிவாச ஐயர் (இ. 2003) · பி. லீலா (இ. 2005)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 30 – நவம்பர் 1 – நவம்பர் 2