விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 04:16 மணி புதன், நவம்பர் 27, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
- 1814 – பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
- 1832 – ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி சேவை இலங்கையில் கண்டியில் ஆரம்பமாகியது.
- 1918 – உருசியா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
- 1946 – நோர்வேயின் திறிகுவே இலீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1979 – 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி தெகுரான் திரும்பினார்.
- 1992 – போபால் பேரழிவு: யூனியன் கார்பைட்டின் முன்னாள் முதன்மைச் செயலர் வாரன் அண்டர்சன் ஒரு தலைமறைவான குற்றவாளி என போபால் நீதிமன்றம் அறிவித்தது.
- 2003 – கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (படம்) உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
பம்மல் சம்பந்த முதலியார் (பி. 1873) · மீனாட்சிசுந்தரம் பிள்ளை (இ. 1876) · ஏ. நாராயணன் (இ. 1939)
அண்மைய நாட்கள்: சனவரி 31 – பெப்பிரவரி 2 – பெப்பிரவரி 3
- 1868 – சப்பானியப் பேரரசு ஆதரவுப் படைகள் ஒசாக்கா கோட்டையை தோக்குகாவா படைகளிடம் இருந்து கைப்பற்றி அதனை எரித்து சாம்பலாக்கின.
- 1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் (படம்) பின்னர் கடைசி செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
- 1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.
- 1989 – ஆப்கான் சோவியத் போர்: ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி உருசியப் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின.
- 1990 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்குவதாகவும், நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்கவிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
பா. வே. மாணிக்க நாயக்கர் (பி. 1871) · வெ. அ. சுந்தரம் (பி. 1896) · மு. இராகவையங்கார் (இ. 1960)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 1 – பெப்பிரவரி 3 – பெப்பிரவரி 4
- 1509 – இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது.
- 1870 – ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
- 1894 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின. 2,500 முதல் 3,000 வரையானோர் கொல்லப்பட்டனர்.
- 1966 – சோவியத் விண்கலம் லூனா 9 (படம்) சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
- 1998 – தம்பலகாமம் படுகொலைகள்: இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்றி கிருஷ்ணபிள்ளை (இ. 1900) · மணி கிருஷ்ணசுவாமி (பி. 1930) · கா. ந. அண்ணாதுரை (இ. 1969)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 2 – பெப்பிரவரி 4 – பெப்பிரவரி 5
பெப்ரவரி 4: உலகப் புற்றுநோய் நாள்
- 1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவராக சியார்ச் வாசிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1797 – எக்குவதோரில் நில நடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில், ஜோசப் ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் உக்ரேனில் யால்ட்டா மாநாட்டில் (படம்) சந்தித்தனர்.
- 1948 – இலங்கை பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் இலங்கை மேலாட்சி என்ற பெயரில் விடுதலை அடைந்தது.
- 1957 – இலங்கை விடுதலை நாளை திருகோணமலையில் துக்க நாளாக அனுட்டித்த தமிழ் மக்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் திருமலை நடராசன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
- 1976 – குவாத்தமாலா மற்றும் ஒண்டுராசு நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
- 2004 – மார்க் சக்கர்பெர்க் முகநூல் என்ற சமூக வலைத்தளத்தை ஆரம்பித்தார்.
வீரமாமுனிவர் (இ. 1747) · பெரி. சுந்தரம் (பி. 1957) · மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை (இ. 1985)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 3 – பெப்பிரவரி 5 – பெப்பிரவரி 6
பெப்ரவரி 5: காசுமீர் ஒருமைப்பாடு நாள் (பாக்கித்தான்)
- 1597 – சப்பானின் ஆரம்பகால கிறித்தவர்கள் பலர் அந்நாட்டின் புதிய அரசால் சமூகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1783 – இத்தாலியின் தெற்கே கலபிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,000–50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் புதிய ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் (படம்) பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
- 1869 – வரலாற்றில் மிகப் பெரும் வண்டல் தங்கம் ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1909 – உலகின் முதலாவது செயற்கை நெகிழி பேக்கலைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
- 1958 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையின் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.
- 1971 – அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்ற அலன் செப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கினர்.
மு. கா. சித்திலெப்பை (இ. 1898) · டி. ஜி. லிங்கப்பா (இ. 2000) · தி. சு. சதாசிவம் (இ. 2012)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 4 – பெப்பிரவரி 6 – பெப்பிரவரி 7
- 1819 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தமது வணிகத்துக்காக சிங்கப்பூர் நகரை அமைத்தார்கள்.
- 1840 – நியூசிலாந்தில் வைத்தாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது. பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1918 – 30 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச சொத்துரிமை கொண்ட பிரித்தானியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1952 – ஆறாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் (படம்) ஐக்கிய இராச்சியம் உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு அரசியானார்.
- 1959 – ஜாக் கில்பி தொகுசுற்றுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1989 – போலந்தில் ஆரம்பமான வட்டமேசை மாநாட்டில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கம்யூனிச ஆட்சிகளைக் கவிழ்ப்பது குறிந்து ஆராயப்பட்டது.
- 2000 – உருசியா குரோசுனி, செச்சினியா ஆகியவற்றைக் கைப்பற்றியது.
சியாமா சாஸ்திரிகள் (இ. 1827) · அரங்கசாமி நாயக்கர் (பி. 1884)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 5 – பெப்பிரவரி 7 – பெப்பிரவரி 8
பெப்ரவரி 7: விடுதலை நாள் (கிரெனடா)
- 1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு (படம்) சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.
- 1951 – கொரியப் போர்: 700 இற்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் தென்கொரியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
- 1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
- 1990 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
- 1991 – ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் தெருவில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
- 2012 – மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார்.
தேவநேயப் பாவாணர் (பி. 1902) · ஆ. மாதவன் (பி. 1934) · பகீரதன் (இ. 2001)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 6 – பெப்பிரவரி 8 – பெப்பிரவரி 9
- 1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி (படம்) தூக்கிலிடப்பட்டார்.
- 1785 – வாரன் ஏசுடிங்சு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பிரித்தானிய இந்தியத் தலைமை ஆளுநர் பதவியைத் துறந்தார்.
- 1924 – அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: மிக்கைல் தெவித்தாயெவ் தலைமையில் பத்து சோவியத் கைதிகள் செருமனிய நாட்சி வதைமுகாம் ஒன்றில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்தித் தப்பினர்.
- 1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
- 1963 – அமெரிக்க குடிமக்கள் கியூபாவுக்கு செல்வது, அல்லது கியூபாவுடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோதம் என ஜான் எஃப். கென்னடியின் நிருவாகம் அறிவித்தது.
- 2005 – ஈழப் போர்: முதல் நாள் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மு. மு. இசுமாயில் (பி. 1921) · லூசு மோகன் (பி. 1928) · நா. சண்முகதாசன் (இ. 1993)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 7 – பெப்பிரவரி 9 – பெப்பிரவரி 10
- 1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.
- 1825 – வாக்காளர் குழுக்களில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறத் தவறியதை அடுத்து, அமெரிக்கக் காங்கிரசு ஜான் குவின்சி ஆடம்சை ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
- 1900 – டேவிசுக் கோப்பை டென்னிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: ஆண்டு முழுவதுமான பகலொளி சேமிப்பு நேரம் போர்க்கால நடவடிக்கையாக ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1959 – முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆர்-7 சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
- 1986 – ஏலியின் வால்வெள்ளி (படம்) சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.
- 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.
மு. செல்லையா (இ. 1966) · தஞ்சாவூர் பாலசரஸ்வதி (இ. 1984) · சிட்டி பாபு (இ. 1996)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 8 – பெப்பிரவரி 10 – பெப்பிரவரி 11
- 1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது.
- 1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
- 1846 – முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் (படம்): பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
- 1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் குளொஸ்டர் கோமகன் இளவரசர் என்றியினால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.
- 1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
- 2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.
சு. ராஜம் (பி. 1919) · நாஞ்சில் கி. மனோகரன் (பி. 1929) · கே. தவமணி தேவி (இ. 2001)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 9 – பெப்பிரவரி 11 – பெப்பிரவரி 12
- 1802 – சின்ன மருது மகன் துரைச்சாமி உட்பட 73 பேர் மலாயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) நாடு கடத்தப்பட்டனர்.
- 1856 – அவத் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றியது. அவத் மன்னர் வாஜித் அலி சா கைது செய்யப்பட்டு பின்னர் கொல்கத்தாவிற்கு நாடுகடத்தப்பட்டார்.
- 1929 – வத்திக்கான் நகர் உருவாக்குவதற்கான உடன்பாட்டை இத்தாலியும் திரு ஆட்சிப்பீடமும் எட்டின.
- 1971 – பனிப்போர்: பன்னாட்டுக் கடற்பரப்பில் அணுக்கரு ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் கையெழுத்திட்டன.
- 1990 – 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா (படம்) விடுதலை பெற்றார்.
- 1996 – குமாரபுரம் படுகொலைகள்: இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
வி. வி. வைரமுத்து (பி. 1924) · ம. சிங்காரவேலர் (இ. 1946) · கண்டசாலா (இ. 1974)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 10 – பெப்பிரவரி 12 – பெப்பிரவரி 13
பெப்ரவரி 12: டார்வின் நாள், செங்கை நாள்
- 1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.
- 1689 – ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது.
- 1909 – நியூசிலாந்தின் பென்குயின் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்துக்கு அருகே மூழ்கி வெடித்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.
- 1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்தினுள் நுழைந்த நால்வர் எட்வர்ட் மண்ச்சின் புகழ்பெற்ற அலறல் ஓவியத்தைத் திருடிச் சென்றனர்.
- 2001 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 2016 – 1054 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் முதற்தடவையாக திருத்தந்தை பிரான்சிசு, மாஸ்கோவின் மறைமுதுவர் கிரீல் ஆகியோர் சந்தித்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர்.
ஜி. யு. போப் (படம், இ. 1908) · முருகதாசன் (இ. 2009) · சங்கரலிங்கம் ஜெகந்நாதன் (இ. 2013)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 11 – பெப்பிரவரி 13 – பெப்பிரவரி 14
- 1542 – முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தூக்கிலிடப்பட்டார்.
- 1689 – வில்லியம், மேரி ஆகியோர் இங்கிலாந்தின் கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- 1880 – தாமசு ஆல்வா எடிசன் எடிசன் விளைவை அவதானித்தார்.
- 1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு தனது தலைநகரை கொல்கத்தாவில் இருந்து புது தில்லிக்கு நகர்த்தியது.
- 2004 – அண்டவெளியின் மிகப்பெரிய வைர, வெண்குறு விண்மீன் பிபிஎம் 37093 கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- 2008 – ஆத்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக (படம்) ஆத்திரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார்.
அ. மருதகாசி (பி. 1920) · செய்குத்தம்பி பாவலர் (இ. 1950) · பாலு மகேந்திரா (இ. 2014)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 12 – பெப்பிரவரி 14 – பெப்பிரவரி 15
- 1779 – அவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார்.
- 1918 – சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது.
- 1929 – சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1961 – 103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1989 – யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் பேரழிவிற்காக (படம்) இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
- 1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
- 2005 – கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் ஆரம்பிக்கப்பட்டது.
பி. சாம்பமூர்த்தி (பி. 1901) · இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி (பி. 1914) · அ. ந. கந்தசாமி (இ. 1968)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 13 – பெப்பிரவரி 15 – பெப்பிரவரி 16
- 1796 – டச்சுக்களின் வசம் இருந்த கொழும்பு நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர்.
- 1865 – இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாரசீக வளைகுடா ஊடான தந்தி சேவை ஆரம்பமானது.
- 1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் மெயின் கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் போர்: சப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆத்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
- 1946 – எனியாக் (படம்) என்ற முதல் தலைமுறைக் கணினி பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அறிமுகமானது.
- 1991 – செக்கோசிலோவாக்கியா, அங்கேரி, போலந்து ஆகிய கம்யூனிச நாடுகள் திறந்த-சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுக்க உடன்பாடு கண்டன.
தி. க. சண்முகம் (இ. 1973) · அழகு சுப்பிரமணியம் (இ. 1973) · கொத்தமங்கலம் சுப்பு (இ. 1974)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 14 – பெப்பிரவரி 16 – பெப்பிரவரி 17
- 1923 – ஆவர்ட் கார்ட்டர் பண்டைய எகிப்திய மன்னர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: ஆல்ட்மார்க் சம்பவம்: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
- 1945 – இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் தமிழருக்கு சம உரிமைக்கான 'ஐம்பதுக்கு ஐம்பது' கோரிக்கை தமிழ்க் காங்கிரசு கட்சியால் முன்வைக்கப்பட்டது.
- 1959 – சனவரி 1 இல் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ (படம்) கியூபாவின் புதிய தலைவரானார்.
- 1983 – ஆத்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.
- 2007 – 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
மு. நவரத்தினசாமி (பி. 1909) · டி. கே. சிதம்பரநாதர் (இ. 1954) · சி. பி. சிற்றரசு (இ. 1978)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 15 – பெப்பிரவரி 17 – பெப்பிரவரி 18
பெப்ரவரி 17: விடுதலை நாள் (கொசோவோ)
- 1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ (படம்) உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
- 1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக மாற்றப்பட்டது.
- 1867 – சூயசுக் கால்வாயூடாக முதலாவது கப்பல் சென்றது.
- 1959 – முதலாவது காலநிலை செய்மதி வான்கார்ட் 2 விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1990 – இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 1996 – இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் 8.2 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை இடம்பெற்றதில் 166 பேர் உயிரிழந்தனர். 423 பேர் காயமடைந்தனர்.
- 2011 – அரேபிய வசந்தம்: முஅம்மர் அல் கதாஃபியின் ஆட்சிக்கு எதிரான லிபிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின.
கொத்தமங்கலம் சீனு (பி. 1910) · ச. வையாபுரிப்பிள்ளை (இ. 1956) · நாவற்குழியூர் நடராசன் (இ. 1994)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 16 – பெப்பிரவரி 18 – பெப்பிரவரி 19
பெப்ரவரி 18: காம்பியா - விடுதலை நாள் (1965)
- 1832 – யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிவெள்ளி தோன்றியது.
- 1911 – முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இடம்பெற்றது. இந்தியாவின் அலகாபாத் நகரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள நைனி நகருக்கு 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன.
- 1930 – சனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் கிளைட் டோம்பா புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.
- 1946 – மும்பைத் துறைமுகத்தில் இடம்பெற்ற கடற்படை மாலுமிகளின் பம்பாய் கலகம் (நினைவுச் சின்னம் படத்தில்) பிரித்தானிய இந்தியாவின் ஏனைய மாகாணங்களுக்கும் பரவியது.
- 1992 – கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் 60 பேர் வரை உயிரிழந்தனர்.
- 2014 – முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
ம. சிங்காரவேலர் (பி. 1860) · வ. ஐ. சுப்பிரமணியம் (பி. 1926)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 17 – பெப்பிரவரி 19 – பெப்பிரவரி 20
- 1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1878 – கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமசு ஆல்வா எடிசன் (படம்) பெற்றார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 சப்பானியப் போர் விமானங்கள் ஆத்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை: 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் சப்பானின் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
- 1954 – கிரிமியாவை உருசிய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது.
- 1986 – உடும்பன்குளம் படுகொலைகள், 1986: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 80 தமிழ் விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
உ. வே. சாமிநாதையர் (பி. 1855) · சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை (இ. 1937) · எஸ். வி. சகஸ்ரநாமம் (இ. 1988)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 18 – பெப்பிரவரி 20 – பெப்பிரவரி 21
பெப்ரவரி 20: சமூக நீதிக்கான உலக நாள்
- 1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.
- 1835 – சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.
- 1962 – மேர்க்குரித் திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.
- 1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.
- 1986 – சோவியத் ஒன்றியம் மீர் (படம்) விண்கலத்தை ஏவியது. 15 ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டத்தில் இவ்விண்கலம் நிலைகொண்டிருந்தது.
- 1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து இந்தியாவின் ஒரு தனி மாநிலமாகியது.
- 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
கா. நமச்சிவாயம் (பி. 1876) · ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (இ. 1896) · ரா. கணபதி (இ. 2012)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 19 – பெப்பிரவரி 21 – பெப்பிரவரி 22
பெப்ரவரி 21: பன்னாட்டுத் தாய்மொழி நாள்
- 1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் (படம்) வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
- 1808 – உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது.
- 1848 – கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டனர்.
- 1885 – வாசிங்டன் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.
- 1952 – வங்காள மொழி இயக்கம்: கிழக்கு பாக்கித்தானில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
- 1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.
- 2013 – இந்தியாவின் ஐதராபாதில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வி. கனகசபைப் பிள்ளை (இ. 1906) · ஏ. எஸ். ராஜா (இ. 1981)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 20 – பெப்பிரவரி 22 – பெப்பிரவரி 23
பெப்ரவரி 22: சென் லூசியா - விடுதலை நாள் (1979)
- 1658 – இடச்சுக்காரரினால் இலங்கையின் மன்னார் நகரம் கைப்பற்றப்பட்டது.
- 1819 – எசுப்பானியா புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.
- 1907 – பேடன் பவல் (படம்) முதலாவது சாரணிய முகாமை இங்கிலாந்தில் பிரவுன்சி என்ற இடத்தில் அமைத்தார்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியில் சோபி சோல் உட்பட வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1974 – பாக்கித்தான், லாகூரில், நடைபெற்ற இசுலாமியக் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் 37 நாடுகளும், 22 அரசுத்தலைவர்களும் பங்குபற்றினர். இம்மாநாட்டில் வங்காளதேசம் அங்கீகரிக்கப்பட்டது.
- 1997 – டோலி என்ற ஆடு வெற்றிகரமாக படியெடுக்கப்பட்டதாக பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.
- 2011 – நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச்சில் பெரும் நிலநடுக்கம் இடம்பெற்றதில் 185 பேர் உயிரிழந்தனர்.
என்றீக்கே என்றீக்கசு (இ. 1600) · தில்லையாடி வள்ளியம்மை (பி. 1898) · வ. அ. இராசரத்தினம் (இ. 2001)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 21 – பெப்பிரவரி 23 – பெப்பிரவரி 24
பெப்ரவரி 23: கயானா - குடியரசு நாள் (1970)
- 1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் (படம்) நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது.
- 1886 – சார்லஸ் மார்ட்டின் ஹால் முதலாவது செயற்கை அலுமினியத்தை உருவாக்கினார்.
- 1903 – கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.
- 1917 – சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமானது.
- 1927 – செருமானிய கோட்பாட்டு இயற்பியலாளர் வெர்னர் ஐசன்பர்க் தனது அறுதியின்மைக் கொள்கை பற்றி முதற் தடவையாக வெளியிட்டார்.
- 1941 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்டது.
- 1954 – போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
அன்னமாச்சாரியார் (இ. 1503) · ஈ. வெ. கி. சம்பத் (இ. 1977) · ஆர். சி. சக்தி (இ. 2015)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 22 – பெப்பிரவரி 24 – பெப்பிரவரி 25
பெப்ரவரி 24: எஸ்தோனியா - விடுதலை நாள் (1918)
- 1582 – திருத்தந்தை 13வது கிரெகொரி (படம்) புதிய கிரெகொரியின் நாட்காட்டியை ஆணை ஓலை மூலம் அறிவித்தார்.
- 1739 – கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்.
- 1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னர் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
- 1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.
- 1971 – மூன்று நாட்களுக்கு முன்னர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் தலைவர் ஏமந்தகுமார் போசு கொல்லப்பட்டதை அடுத்து பா. கா. மூக்கைய்யாத்தேவர் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2008 – 32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார். இவர் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவியில் இருந்தார்.
ஆர். முத்தையா (பி. 1886) · ஏ. பி. நாகராஜன் (பி. 1928) · ஜெயலலிதா (பி. 1948)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 23 – பெப்பிரவரி 25 – பெப்பிரவரி 26
- 1948 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
- 1956 – சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தை விமர்சனம் செய்தார்.
- 1964 – வட கொரியாவின் பிரதமர் கிம் இல்-சுங் நிலமானிய நில உரிமையை நீக்குவதாக அறிவித்தார், இதன் மூலம் அனைத்துக் கூட்டுறவுப் பண்ணைகளும் அரசின் நிருவாகத்தின் கீழ் வந்தது.
- 1986 – பிலிப்பீன்சு தலைவர் பெர்டினண்ட் மார்க்கோசு (படம்) மக்கள் புரட்சியை அடுத்து தமது 20-ஆண்டு ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அரசுத்தலைவர் ஆனார்.
- 1991 – வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவூதி அரேபியாவின் டாகுரான் நகரில்ல் அமெரிக்க இராணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1991 – பனிப்போர்: வார்சா ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
வேதரத்தினம் பிள்ளை (பி. 1897) · ஜானகி ஆதி நாகப்பன் (பி. 1925) · பி. நாகிரெட்டி (இ. 2004)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 24 – பெப்பிரவரி 26 – பெப்பிரவரி 27
- 1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார்.
- 1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலிக்கு உரோமைக் கத்தோலிக்க திருச்சபை தடை விதித்தது.
- 1815 – இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் (படம்) அங்கிருந்து தப்பினார்.
- 1909 – கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது.
- 1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.
- 1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- 2001 – ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.
சிவகங்கை இராமச்சந்திரன் (இ. 1933) · கே. எஸ். பாலச்சந்திரன் (இ. 2014) · எஸ். ஜி. சாந்தன் (இ. 2017)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 25 – பெப்பிரவரி 27 – பெப்பிரவரி 28
- 1933 – பெர்லினில் செருமனியின் ரெய்ஸ்டாக் (படம்) என்ற நாடாளுமன்றக் கட்டடம் இடச்சு கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- 1943 – பெர்லினில், நாட்சிகளின் இரகசியக் காவல்துறையினர் செருமனியப் பெண்களை மணந்த 1,800 யூத இன ஆண்களைக் கைது செய்தனர்.
- 1951 – ஐக்கிய அமெரிக்காவில் அரசுத்தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
- 1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவைத் விடுதலையானதாக அறிவித்தார்.
- 2002 – கோத்ரா தொடருந்து எரிப்பு: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முசுலிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 2007 – மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
சுஜாதா (இ. 2008) · வேலூர் ஜி. ராமபத்ரன் (இ. 2012) · ந. பாலேஸ்வரி (இ. 2014)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 26 – பெப்பிரவரி 28 – பெப்பிரவரி 29
பெப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள் (இந்தியா)
- 1867 – வத்திக்கானுக்கான தூதர்களுக்கான நிதிகளை அமெரிக்க காங்கிரசு நிறுத்தியதைத் தொடர்ந்து எழுபது ஆண்டு கால திரு ஆட்சிப்பீட–அமெரிக்க உறவுகள் முறிவடைந்தன. 1984 ஆம் ஆண்டிலேயே உறவு புதுப்பிக்கப்பட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் ஊஸ்டன் என்ற கப்பலும், ஆத்திரேலியாவின் பேர்த் கப்பலும் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் சப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் முறையே 693 பேரும், 375 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1947 – தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
- 1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் (படம்) வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
- 2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார். 1415 இல் பன்னிரண்டாம் கிரகோரி பதவி துறந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பணிதுறப்பு இதுவாகும்.
தி. ஜானகிராமன் (பி. 1921) · சௌந்தரா கைலாசம் (பி. 1927) · செங்கை ஆழியான் (இ. 2016)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 27 – பெப்பிரவரி 29 – மார்ச்சு 1
- 1704 – பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்கப் பழங்குடிகளும் இணைந்து மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் டியர்பீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1960 – மொரொக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 12,000 பேர் வரையில் உயிரிழந்தனர்..
- 1988 – தென்னாபிரிக்காவின் ஆயர் டெசுமான்ட் டுட்டு உட்பட 100 மதகுருமார் இனவொதுக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது கேப் டவுன் நகரில் கைது செய்யப்பட்டனர்.
- 1996 – பெரு விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 123 பேரும் உயிரிழந்தனர்.
- 2000 – செச்சினியாவில் 83 உருசிய படையினர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
- 2012 – உலகின் மிகப்பெரிய கோபுரம் டோக்கியோ ஸ்கைட்ரீ (படம்) கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 634 மீட்டர்கள் ஆகும்.
ருக்மிணி தேவி அருண்டேல் (பி. 1904) · மா. இளையபெருமாள் (பி. 1924) · குமரிமுத்து (இ. 2016)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 28 – மார்ச்சு 1 – மார்ச்சு 2