பெப்ரவரி 25
நாள்
(பெப்பிரவரி 25 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 25 (February 25) கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 138 – உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியசு பயசு என்பவனை அறிவித்தார்.
- 628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது மகன் இரண்டாம் கவாத் பதவியில் இருந்து அகற்றினான்.
- 1797 – வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.
- 1831 – உருசியப் பேரரசுக்கு எதிரான போலந்து மக்களின் நவம்பர் எழுச்சியின் ஒரு பகுதியாக ஓல்சின்கா கிரச்சோவ்சுக்கா சமர் இடம்பெற்றது.
- 1835 – இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது.[1]
- 1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1843 – பெரிய பிரித்தானியாவின் பேரில் சியார்ச் பவுலெட் பிரபு அவாய் இராச்சியத்தை ஆக்கிரமித்தார்.
- 1848 – பிரான்சின் இடைக்கால அரசு தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது.
- 1856 – கிரிமியப் போரை அடுத்து பாரிசு நகரில் அமைதி மாநாடு நடைபெற்றது.
- 1875 – பேரரசி டோவாகர் சிக்சியின் தலைமையில் சீனாவில் சிங் அரசமரபு ஆரம்பமானது.
- 1918 – முதலாம் உலகப் போர்: செருமனியப் படைகள் தாலின் நகரைக் கைப்பற்றின.
- 1919 – அமெரிக்காவின் முதல் மாநிலமாக ஓரிகன் பெட்ரோலுக்கு வரி (கலனுக்கு ஒரு சதம்) அறவிட்டது.
- 1921 – ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி உருசியாவின் கம்யூனிசப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
- 1925 – சோவியத் ஒன்றியத்திற்கும் சப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.
- 1932 – இட்லர் செருமனியின் குடியுரிமையைப் பெற்றார். இதன் மூலம் 1932 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றார்.
- 1933 – ரேஞ்சர் என்ற அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
- 1941 – நாட்சிகளால் ஆரம்பிக்கப்பட்ட யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக செருமனியினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டம் நகரில் பொதுப் பணி நிறுத்தம் இடம்பெற்றது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: துருக்கி செருமனி மீது போரை அறிவித்தது.
- 1947 – புருசியா கலைக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் புருசிய அரசு 1932 இல் கலைக்கப்பட்டு விட்டது.
- 1948 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
- 1954 – ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1956 – பனிப்போர்: சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தை விமர்சனம் செய்தார்.
- 1964 – வட கொரியாவின் பிரதமர் கிம் இல்-சுங் நிலமானிய நில உரிமையை நீக்குவதாக அறிவித்தார், இதன் மூலம் அனைத்துக் கூட்டுறவுப் பண்ணைகளும் அரசின் நிருவாகத்தின் கீழ் வந்தது.
- 1968 – வியட்நாம் போர்: வியட்நாமில் 135 ஆ மை கிராம மக்கள் தென் கொரியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
- 1980 – சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
- 1986 – பிலிப்பீன்சு தலைவர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து தமது 20-ஆண்டு ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அரசுத்தலைவர் ஆனார்.
- 1988 – மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி ஏவப்பட்டது.
- 1991 – வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவூதி அரேபியாவின் டாகுரான் நகரில்ல் அமெரிக்க இராணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1991 – பனிப்போர்: வார்சா ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
- 1992 – அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.
- 1994 – மேற்குக் கரை நகரான எபிரோனில் பிதாப்பிதாக்களின் குகை மசூதியில் இசுரேலியர் ஒருவர் சுட்டதில் 29 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலத்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலத்தீனர்களும் 9 இசுரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
- 2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.
- 2007 – ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சிற்கு அப்பால் எறியப்பட்டது.
- 2009 – வங்காளதேசம், டாக்கா நகரில் இராணுவ வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதில் 57 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர்.
- 2009 – துருக்கி ஏர்லைன்சு விமானம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் வீழ்ந்ததில் ஒன்பது பயணிகளும், மற்றும் ஊழியர்களும் உயிரிழந்தனர்.
- 2015 – ஆப்கானித்தானின் வடகிழக்கில் இடம்பெற்ற பனிச்சரிவில் 310 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1304 – இப்னு பதூதா, மொரோக்கோ கல்வியாளர், நாடுகாண் பயணி
- 1670 – மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1720)
- 1778 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெருவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1850)
- 1866 – பெனிடெட்டோ குரோசே, இத்தாலிய இலக்கியவாதி, வரலாற்றாசிரியர், அரசியல்வாதி (இ. 1952)
- 1869 – போபஸ் ஆரன் தியோடர் லெவினி, உருசிய-அமெரிக்க உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1940)
- 1885 – பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் (இ. 1969)
- 1894 – மெகர் பாபா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1969)
- 1897 – வேதரத்தினம் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1961)
- 1901 – அ. நாகலிங்கம், ஈழத்து எழுத்தாளர், வழக்கறிஞர் (இ. 1979)
- 1915 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (இ. 2006)
- 1925 – ஜானகி ஆதி நாகப்பன், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் (இ. 2014)
- 1938 – பாரூக் இஞ்சினியர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- 1940 – துரை, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 2024)
- 1971 – சீன் ஆஸ்டின், அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1973 – கௌதம் மேனன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- 1974 – திவ்ய பாரதி, இந்திய நடிகை (இ. 1993)
- 1979 – பிரேம்ஜி அமரன், தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்
- 1982 – பிளாவியா பென்னட்டா, இத்தாலிய தென்னிசு வீராங்கனை
- 1994 – யூஜினீ பூஷார்டு, கனடிய தென்னிசு வீரர்
இறப்புகள்
- 1723 – கிறிஸ்டோபர் ரென், புனித பவுல் தேவாலயத்தை வடிவமைத்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632)
- 1877 – ஜங் பகதூர் ராணா, நேபாள ஆட்சியாளர் (பி. 1816)
- 1932 – யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய அர்கெந்தீன மருத்துவர், கட்டற்ற சிந்தனையாளர் (பி. 1873)
- 1936 – அன்னா பொச், பெல்சிய ஓவியர் (பி. 1848)
- 1942 – அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (பி. 1881)
- 1950 – ஜார்ஜ் மினாட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1885)
- 1965 – விராலிமலை சண்முகம், இந்தி எதிர்ப்புப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1943)
- 2001 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908)
- 2004 – பி. நாகிரெட்டி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், (பி. 1912)
- 2014 – பாக்கோ தே லூசீயா, எசுப்பானிய இசை அமைப்பாளர், கித்தார் கலைஞர் (பி. 1947)
- 2015 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)
- 2015 – யுஜினி கிளார்க், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1922)
- 2015 – சுகுணா புருசோத்தமன், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1941)
- 2016 – ஆல்பிரட் இ மான், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1925)
- 2017 – தவக்களை, தமிழ்த் திரைப்பட நடிகர்
சிறப்பு நாள்
- மக்கள் சக்தி நாள் (பிலிப்பீன்சு)
- சோவியத் ஆக்கிரமிப்பு நாள் (ஜோர்ஜியா)
- புரட்சி நாள் (சுரிநாம்)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.