பெப்ரவரி 26
நாள்
(பெப்பிரவரி 26 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 26 (February 26) கிரிகோரியன் ஆண்டின் 57 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
- 1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர்.
- 1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார்.
- 1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார்.
- 1658 – வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.
- 1748 – ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[1]
- 1794 – கோபனாவன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
- 1815 – இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் அங்கிருந்து தப்பினார்.
- 1841 – இலங்கையின் முதலாவது இசுக்கொட்லாந்து பிரெசுபிட்டேரியத் தேவாலயத்திற்கான அடிக்கல் கொழும்பு புறக்கோட்டையில் நாட்டப்பட்டது.[2]
- 1876 – யப்பானியக் குடிமக்களுக்கு கொரியாவில் யப்பானிய வணிக வசதிகளுக்காக மூன்று துறைமுகங்களை அமைக்க, யப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1909 – கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது.
- 1935 – இராபர்ட் வாட்சன்-வாட் என்பவர் இங்கிலாந்தில் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை உருவாக்க வழிசமைத்தது.
- 1936 – சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
- 1952 – ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.
- 1960 – நியூயார்க் சென்று கொண்டிருந்த விமானம் அயர்லாந்தில் இடுகாடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 52 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.
- 1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.
- 1980 – எகிப்தும் இசுரேலும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தின.
- 1984 – பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.
- 1991 – வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் உசேன் அறிவித்தார்.
- 1992 – நகோர்னோ-கரபாக் போர்: ஆர்மீனிய இராணுவத்தினர் அசர்பைசானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- 2001 – ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.
- 2013 – வெப்பக் காற்று ஊதுபை ஒன்று எகிப்தில் வீழ்ந்து வெடித்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.
- 2018 – பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்,
பிறப்புகள்
- 1564 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1593)
- 1725 – நிக்கொலா-யோசப் கியூனியோ, பிரான்சியப் பொறியியலாளர் (இ. 1804)
- 1780 – கிறித்தியன் சாமுவேல் வெயிசு, செருமானியக் கனிமவியலாளர் (இ. 1856)
- 1802 – விக்டர் ஹியூகோ, பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1885)
- 1842 – காமில் பிளம்மாரியன், பிரான்சிய வானியலாளர் (இ. 1925)
- 1861 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசிய அரசியல்வாதி (இ. 1939)
- 1866 – எர்பர்ட்டு என்றி டவ், கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1930)
- 1896 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் 4வது குடியரசுத் துணைத் தலைவர் (இ. 1982)
- 1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)
- 1928 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (இ. 2014)
- 1947 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (இ. 2000)
- 1952 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 2019)
- 1954 – ரசிப் தைய்யிப் எர்டோகன், துருக்கியின் 12வது அரசுத்தலைவர்
- 1982 – லீ நா, சீன டென்னிசு வீராங்கனை
- 1983 – பேபே, பிரேசில்-போர்த்துக்கீசக் காற்பந்து வீரர்
- 1986 – மா கா பா ஆனந்த், தமிழக நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்
இறப்புகள்
- 1878 – ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (பி. 1818)
- 1887 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (பி. 1865)
- 1931 – ஓட்டோ வாலெக், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1847)
- 1933 – சிவகங்கை இராமச்சந்திரன், தமிழக செயற்பாட்டாளர் (பி. 1884)
- 1966 – வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (பி. 1883)
- 1969 – கார்ல் ஜாஸ்பெர்ஸ், செருமனிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உளவியலாளர் (பி. 1883)
- 1998 – தியாடர் சுலட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1902)
- 2004 – எசு. பி. சவாண், இந்திய அரசியல்வாதி (பி. 1920)
- 2008 – டிரோன் பெர்னாண்டோ, இலங்கை அரசியல்வாதி (பி. 1941)
- 2014 – கே. எஸ். பாலச்சந்திரன், இலங்கை-கனடிய எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)
- 2015 – அவிஜித் ராய், அமெரிக்க-வங்கதேச செயற்பாட்டாளர். பொறியியலாளர் (பி. 1972)
- 2017 – எஸ். ஜி. சாந்தன், ஈழத்துப் பாடகர், நாடகக் கலைஞர்
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (குவைத்)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 6
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.