டிரோன் பெர்னாண்டோ
டிரோன் பெர்னாண்டோ (Tyronne Fernando, ஆகத்து 8, 1941 – பெப்ரவரி 26, 2008) இலங்கையின் அரசியல்வாதியும் 2001 தொடக்கம் 2004 வரை இலங்கை வெளிநாட்டமைச்சருமாவார்.[1]
டிரோன் பெர்னாண்டோ | |
---|---|
இலண்டன் பொருளியல் பள்ளியில் உரையாற்றும் டிரோன் பெர்னாண்டோ | |
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 2001–2004 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | லக்சுமன் கதிர்காமர் |
பின்னவர் | லக்சுமன் கதிர்காமர் |
வடகிழக்கு மாகாணத்தின் 5வது ஆளுநர் | |
பதவியில் 2004–2006 | |
முன்னையவர் | அசோகா ஜெயவர்தனா |
பின்னவர் | மொகான் விஜேவிக்கிரம |
இலங்கை நாடாளுமன்றம் மொறட்டுவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1977–1989 | |
முன்னையவர் | விமலசிரி டி மெல் |
பின்னவர் | தொகுதி நீக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை | 8 ஆகத்து 1941
இறப்பு | 26 பெப்ரவரி 2008 கொழும்பு, இலங்கை | (அகவை 66)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
முன்னாள் கல்லூரி | கெபில் கல்லூரி, ஆக்சுபோர்டு, கொழும்பு றோயல் கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
தொடக்க வாழ்க்கை
தொகு1848 ஆம் ஆண்டு பிரித்தானியருக்கு எதிரான மாத்தளை புரட்சியை வழிநடத்திய தலைவர்களுள் ஒருவரான வீரபுரன் அப்புவின் வழியில் 1941 ஆகஸ்ட் 8 ஆம் நாள் பிறந்தார்.[1] கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியை முடித்த பர்னாண்டோ ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெபல் கல்லூரியில் அரசறிவியல் துரையில் முதுநிலைப் பட்டத்தைப் பெற்றார்.[1] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் கழகத்தின் அவைத்தலைவராக தெரிவுச் செய்யப்பட்ட முதல் ஆசியராகவும் பர்னாண்டோ விளங்கினார். பர்னாண்டோ மேலும் இலண்டன் ஊடகவியலாளர் கல்லூடியில் ஊடகவியல் டிப்ளோமாவையும் கொண்டுள்ளார்.
சட்ட வாழ்கை
தொகுஇங்கிலாந்து, வேல்சின் சட்டத்தரணியாக கிரே இன் மூலமாக உள்நுழைந்தார். பின்னர் இலங்கைக்கு திரும்பி முடியின் சட்டத்தரனியாக 10 ஆண்டுகள் வேலைச் செய்தார் பின்னர் அதிபரின் சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.[1]
அரசியல் வாழ்கை
தொகு1974 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அரசியலில் பிரவேசித்தார். 1977 ஆம் ஆண்டு மொறட்டுவை தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்று இலங்கைப் பாராளுமன்றம் சென்றார். ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா ஆட்சியின் கீழ் உதவி வெளிநாட்டமைச்சராக செயற்பட்டார்.[1] 1993 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சராக ரணசிங்க பிரேமதாசா ஆட்சியில் செயர்பட்டார்.[1] 1991 முதல் 1994 வரை இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையின் தலைவராகவும் கடமையாற்றினார்.[1]
2001 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமாரான போது வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு வரை பதவியிலிருந்தார். பதவியிலிருநத போது ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டியிட்டார்.
2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் தோல்விக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விழகினார். 2004 டிசம்பர் 8 ஆம் நாள் சந்திரிகா குமாரதுங்கவினால் இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.[1] 2006 ஆண்டின் சனவரி மாதம்வரை பதிவியிலிருநதார்.[1] 2007 ஆம் ஆண்டு பிரன்சிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டார்.
2008 பெப்ரவரி 26 ஆம் நாள் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார்.[1] இறப்பின் போது அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமை ஆலோசகராக பணியாற்றி வந்தார்.[1] இவருக்கு ஒரு மகள் உண்டு.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "Tyronne Fernando dead". Daily News (Sri Lanka). 2008-02-27 இம் மூலத்தில் இருந்து 2008-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080302000455/http://www.dailynews.lk/2008/02/27/news18.asp. பார்த்த நாள்: 2008-03-26.
வெளியிணைப்புகள்
தொகு- ஆங்கில பத்திரிகையில் காணப்பட்ட இறபறிவிப்பு பரணிடப்பட்டது 2008-03-02 at the வந்தவழி இயந்திரம்