விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 26
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 26 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- 1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார்.
- 1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலிக்கு உரோமைக் கத்தோலிக்க திருச்சபை தடை விதித்தது.
- 1815 – இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் (படம்) அங்கிருந்து தப்பினார்.
- 1909 – கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்பட அமைப்பு முறை இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது.
- 1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.
- 1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- 2001 – ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.
சிவகங்கை இராமச்சந்திரன் (இ. 1933) · கே. எஸ். பாலச்சந்திரன் (இ. 2014) · எஸ். ஜி. சாந்தன் (இ. 2017)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 25 – பெப்பிரவரி 27 – பெப்பிரவரி 28