விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 24
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 24 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெப்ரவரி 24: எஸ்தோனியா - விடுதலை நாள் (1918)
- 1582 – திருத்தந்தை 13வது கிரெகொரி (படம்) புதிய கிரெகொரியின் நாட்காட்டியை ஆணை ஓலை மூலம் அறிவித்தார்.
- 1739 – கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்.
- 1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னர் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
- 1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.
- 1971 – மூன்று நாட்களுக்கு முன்னர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் தலைவர் ஏமந்தகுமார் போசு கொல்லப்பட்டதை அடுத்து பா. கா. மூக்கைய்யாத்தேவர் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2008 – 32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார். இவர் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவியில் இருந்தார்.
ஆர். முத்தையா (பி. 1886) · ஏ. பி. நாகராஜன் (பி. 1928) · ஜெயலலிதா (பி. 1948)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 23 – பெப்பிரவரி 25 – பெப்பிரவரி 26