பெப்ரவரி 8
நாள்
(பெப்பிரவரி 8 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 8 (February 8) கிரிகோரியன் ஆண்டின் 39 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 (நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 421 – மேற்கு உரோமைப் பேரரசின் இணைப் பேரரசராக மூன்றாம் கொன்ஸ்டான்டியசு பதவியேற்றார்.
- 1238 – மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர்.
- 1347 – பைசாந்திய உள்நாட்டுப் போர் 1341–47 முடிவுக்கு வந்தது.
- 1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார்.
- 1601 – முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது.
- 1785 – வாரன் ஏசுடிங்சு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பிரித்தானிய இந்தியத் தலைமை ஆளுநர் பதவியைத் துறந்தார்.[1]
- 1817 – லாசு எராசு தனது படையுடன் அந்தீசு மலையைக் கடந்து சான் மார்ட்டினுடன் இணைந்து சிலியை எசுப்பானியாவிடம் இருந்து விடுவித்தார்.
- 1879 – சிட்னி துடுப்பாட்ட ஆட்டம் ஒன்றில் இடம்பெற்ற கலவரம் ஒன்றில் ஜார்ஜ் ஹரீஸ் தலைமையிலான இங்கிலாந்து துடுப்பாட்ட அணி கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டது.
- 1885 – முதலாவது அரச-ஆதரவுடனான சப்பானியக் குடியேற்றம் அவாயில் ஆரம்பமானது.
- 1904 – அச்சே போர்: டச்சு குடியேற்ற இராணுவம் வடக்கு சுமாத்திராவின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கையை ஆரம்பித்தது. இது அங்கு இனப்படுகொலையில் முடிந்தது.
- 1904 – சப்பானியரின் நீர்மூழ்கிக் குண்டு ஒன்று சீனாவின் லூசென்கோ நகரைத் தாக்கியது. உருசிய-சப்பானியப் போர் ஆரம்பமானது.
- 1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் சிங்கப்பூரை ஊடுருவியது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: டச்சு இராணுவத்தினர் இந்தோனேசியாவின் பஞ்சார்மாசின் நகரை சப்பானியர் கைப்பற்றுவதைத் தடுக்க அந்நகரை தீயிட்டுக் கொளுத்தினர்.
- 1942 – செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி செருமனியில் இருந்து தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவும் கனடாவும் ரைன் ஆற்றின் மேற்குக் கரையைக் கைப்பற்றும் நோக்குடன் வெரிடபிள் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: மிக்கைல் தெவித்தாயெவ் தலைமையில் பத்து சோவியத் கைதிகள் செருமனிய நாட்சி வதைமுகாம் ஒன்றில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்தித் தப்பினர்.
- 1955 – பாக்கித்தானின் சிந்து மாகாண அரசு நில மானிய முறைமையை ஒழித்தது.
- 1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
- 1960 – இரண்டாம் எலிசபெத் மகாராணி விடுத்த அறிவிப்பு ஒன்றில், அவரும் அவரது குடும்பமும் வின்சர் மாளிகை என அழைக்கப்படுவர் எனவும், அவரது வழித்தோன்றல்கள் மவுன்ட்பேட்டன்-வின்சர் என அழைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
- 1963 – அமெரிக்க குடிமக்கள் கியூபாவுக்கு செல்வது, மற்றும் கியூபாவுடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியன சட்டவிரோதம் என ஜான் எஃப். கென்னடியின் நிருவாகம் அறிவித்தது.
- 1963 – ஈராக்கில் அப்து அல்-கரீம் காசிம் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.
- 1965 – அமெரிக்காவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்சு விமானம் அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 84 பேரும் உயிரிழந்தனர்.
- 1971 – நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1974 – 84 நாட்கள் விண்ணில் பயணம் செய்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.
- 1974 – மேல் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- 1981 – கிரேக்கத்தில் 21 கால்பந்து விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 21 பார்வையாளர்கள் உயிரிழந்தனர், 55 பேர் காயமடைந்தனர்.
- 1983 – ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரைப் பெரும் புழுதிப் புயல் தாக்கியதில், 320 மீட்டர் புழுதி மேகம் நகரில் தோன்றியது.
- 1986 – கனடாவின் இண்டன் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
- 1989 – போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் இறந்தனர்.
- 2005 – இசுரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
- 2005 – ஈழப் போர்: முதல் நாள் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
- 2010 – ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைகளில் இடம்பெற்ற தொடர் பனிச்சரிவுகளில் சிக்கி 172 பேர் உயிரிழந்தனர்.
- 2014 – மதீனாவில் உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 15 எகிப்தியர்கள் உயிரிழந்தனர், 130 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
தொகு- 1641 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (இ. 1720)
- 1700 – டேனியல் பெர்னூலி, டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1782)
- 1819 – ஜான் ரஸ்கின், ஆங்கிலேய எழுத்தாளர், ஓவியர் (இ. 1900)
- 1825 – என்றி வால்டர் பேட்ஃசு, ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர், நாடுகாண் பயணி (இ. 1892)
- 1828 – ழூல் வேர்ண், பிரான்சியக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1905)
- 1834 – திமீத்ரி மெண்டெலீவ், உருசிய வேதியியலாளர் (இ. 1907)
- 1850 – கேட் சோப்பின், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1904)
- 1897 – சாகீர் உசேன், இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் (இ. 1969)
- 1903 – துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் முதலாவது பிரதமர் (இ. 1990)
- 1921 – மு. மு. இஸ்மாயில், தமிழக நீதியரசர், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2005)
- 1928 – லூசு மோகன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2012)
- 1928 – விச்சிசுலாவ் தீகனொவ், சோவியத் உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (இ. 2009)
- 1937 – ஏ. எச். எம். அஸ்வர், இலங்கை அரசியல்வாதி (இ. 2017)
- 1941 – ஜக்ஜீத் சிங், இந்தியப் பாடகர் (இ. 2011)
- 1955 – ஜான் கிரிஷாம், அமெரிக்க எழுத்தாளர்
- 1960 – பெனிக்னோ அக்கீனோ III, பிலிப்பீன்சின் 15வது அரசுத்தலைவர்
- 1963 – முகமது அசாருதீன், இந்தியத் துடுப்பாளர், அரசியல்வாதி
- 1964 – சந்தோஷ் சிவன், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்
- 1968 – கேரி கோல்மன், அமெரிக்க நடிகர் (இ. 2010)
இறப்புகள்
தொகு- 1265 – உலேகு கான், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1218)
- 1587 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (பி. 1542)
- 1725 – முதலாம் பேதுரு, உருசியப் பேரரசர் (பி. 1672)
- 1957 – வால்தெர் பொதே, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1891)
- 1957 – ஜான் வான் நியுமேன், அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1903)
- 1971 – கே. எம். முன்ஷி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1887)
- 1974 – பிரிட்சு சுவிக்கி, சுவீடன் வானியலாளர் (பி. 1898)
- 1979 – டென்னிஸ் கபார், நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1900)
- 1993 – நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, இடதுசாரி மாவோயிச அரசியல்வாதி (பி. 1920)
- 1998 – ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின், நோபல் பரிசு பெற்ற ஐசுலாந்து எழுத்தாளர் (பி. 1902)
- 2005 – அரியநாயகம் சந்திரநேரு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மனித உரிமை ஆர்வலர்
- 2007 – ஆன்னா நிக்கோல் இசுமித், அமெரிக்க நடிகை (பி. 1967)
- 2007 – இயான் ஸ்டீவன்சன், கனடிய-அமெரிக்க உளவியல் மருத்துவர் (பி. 1918)
- 2014 – பிரேம்ஜி ஞானசுந்தரம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் (பி. 1930)
சிறப்பு நாள்
தொகு- பரிநிர்வாண நாள் (மகாயான பௌத்தம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.