ஏ. எச். எம். அஸ்வர்

ஏ. எச். எம். அஸ்வர் (A.H.M. Azwer, பெப்ரவரி 8, 1937 - ஆகத்து 29, 2017) இலங்கை அரசியல்வாதியும்,[1] இலக்கியவாதியும், ஊடகவியலாளரும் ஆவார். இவர் ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியிலும், பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றிலும் உறுப்பினராக இருந்துள்ளார். கொழும்பு தெகிவளையில் வசித்து வந்தவர்.

ஏ. எச். எம். அஸ்வர்
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–2004
பதவியில்
2010 – 28 நவம்பர் 2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-02-08)பெப்ரவரி 8, 1937
இலங்கை
இறப்புஆகத்து 29, 2017(2017-08-29) (அகவை 80)
கொழும்பு
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்ஆசிரியர், ஊடகவியலாளர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

எம். எச். எம். அசுவர் 1937 பெப்­ர­வரி 8 ஆம் நாள் பிறந்தார். கொழும்பு சாஹிரா கல்லூரியில் கல்­வி கற்றார். பின்னர் மகர­கமை கபூ­ரிய்யா அரபுக் கல்­லூ­ரியில் மார்க்கக் கல்வி கற்றார்.[2] மகரகமை செய்­தி­யா­ள­ராக பத்­தி­ரி­கைகளுக்கு செய்திகள் வழங்கி வந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் புலமை பெற்ற அசுவர்[3] மொழி­பெ­யர்ப்­பா­ள­ரா­கவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் சபா­நா­யகர் பாக்கீர் மாக்காரின் தனிப்பட்ட செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

அரசியலில்

தொகு

1950களின் ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1955 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். முன்னாள் அரசுத் தலைவர் ஆர். பிரேமதாசாவின் மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக நீண்ட காலம் பணியாற்றினார்.[2] 1989 தேர்தலை அடுத்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். முசுலிம் சமய விவ­கார இரா­சாங்க அமைச்சராகவும், 2002-2004 காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் நாடாளு­மன்ற விவ­கார இராசாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.[2]

2008 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சேர்ந்து முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுடன் இணைந்து செயற்­பட ஆரம்­பித்தார்.[2] 2010 ஆம் ஆண்டு அக்கட்சியினூடாக தேசி­யப் பட்­டியல் உறுப்­பி­ன­ராக மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[4] 2014 நவம்பர் 28 இல் நாடாளுமன்ற உறுப்­பினர் பத­வி­யைத் துறந்தார்.[5] அதன் பின்னர் இறக்கும் வரை கூட்டு எதிர்க்­கட்­சியின் முசுலிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­ப­ரா­க இருந்து பணியாற்றினார்.[2]

கலை இலக்கியப் பங்களிப்பு

தொகு

வாழ்­வோரை வாழ்த்­துவோம் எனும் மகு­டத்தின் கீழ் ஏரா­ள­மா­ன­ இலக்கியவாதிகளைக் கெள­ர­வப்படுத்தியுள்ளார்.[2] ஊட­கங்­களின் துடுப்பாட்ட வர்ணனை­யா­ள­ராக இருந்துள்ளார்.[2] முசுலிம் லீக் வாலிப முன்­ன­ணி­யின் தலை­வ­ரா­கவும் அகில இலங்கை முசுலிம் கல்வி மாநாட்டின் உப­த­லை­வ­ரா­கவும் ஆலோ­ச­க­ரா­கவும் பணியாற்றினார்.[2] மேலவை உறுப்பினர் மசூர் மௌலானா, அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீட் ஆகி­யோரின் வாழ்க்கை வர­லாறு உட்படப் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ., இலங்கை நாடாளுமன்றம்
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 "அர­சியல் களத்தில் தனக்­கென தனி­யிடம் பிடித்த அஸ்வர்.!". வீரகேசரி. 30-08-17. பார்க்கப்பட்ட நாள் 30-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); soft hyphen character in |title= at position 3 (help)
  3. "முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார்". தமிழ்வின். Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 30-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "இலங்கை : முன்னாள் அமைச்சர் அஸ்வர் மறைவு". பிபிசி. 29-08-2017. பார்க்கப்பட்ட நாள் 30-08-2017 – via www.bbc.com. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. அஸ்வர் எம்.பி இராஜினாமா பரணிடப்பட்டது 2014-12-15 at the வந்தவழி இயந்திரம், தினகரன், நவம்பர் 29, 2014

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எச்._எம்._அஸ்வர்&oldid=3576781" இலிருந்து மீள்விக்கப்பட்டது