பாக்கீர் மாக்கார்
தேசமான்ய மகரூம் முகம்மது அப்துல் பாக்கீர் மாக்கார் (Mohammed Abdul Bakeer Markar, மே 12, 1917 - செப்டம்பர் 10, 1997)[1] இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்ற சபாநாயகராகவும்[2] தென் மாகாண ஆளுனராகவும் பணியாற்றியவர்.
எம். ஏ. பாக்கீர் மாக்கார் M.A. Bakeer Markar | |
---|---|
![]() | |
இலங்கை, தென் மாகாண ஆளுனர் | |
பதவியில் சூன் 13, 1988 – டிசம்பர் 1993 | |
12-வது நாடாளுமன்ற சபாநாயகர் | |
பதவியில் செப்டம்பர் 21, 1978 – ஆகத்து 30, 1983 | |
குடியரசுத் தலைவர் | ஜே. ஆர். ஜெயவர்தனா |
பிரதமர் | ஆர். பிரேமதாசா |
முன்னவர் | ஆனந்ததிச டி அல்விசு |
பின்வந்தவர் | ஈ. எல். சேனநாயக்கா |
பேருவளை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் மார்ச் 1960 – ஏப்ரல் 1960 | |
பதவியில் 1965–1970 | |
பதவியில் 1977–1989 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 12 மே 1917 பேருவளை, இலங்கை |
இறப்பு | 10 செப்டம்பர் 1997 கொழும்பு, இலங்கை | (அகவை 80)
தேசியம் | இலங்கைச் சோனகர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பிள்ளைகள் | இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் |
இருப்பிடம் | பேருவளை |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொழும்பு சாஹிரா கல்லூரி இலங்கை சட்டக் கல்லூரி |
சமயம் | இசுலாம் |
ஆரம்ப வாழ்க்கைதொகு
பாக்கீர் மாக்கார் தென்னிலங்கையில் பேருவளை என்ற கரையோரப் பகுதியில் குடியேறிய அராபியரான சேக் ஜமாலுதீன்-அல்-தூமி என்பவரின் வழித்தோன்றல் ஆவார். தந்தை அக்கீம் அலியா மரிக்கார் முகம்மது மரிக்கார் மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கொழும்பு சாஹிரா கல்லூரியில் கல்வி பயின்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரிக்கு சென்று 1950 இல் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1942 இல் குடிமைப் பாதுகாப்புப் படையில் இணைந்து சேவையாற்றினார். இதற்கென இந்தியா சென்று பயிற்சி பெற்றார். போரின் பின்னர் சட்டத் துறையில் பணியாற்றினார்.
அரசியலில்தொகு
பேருவலை நகர சபை உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் அவர் நகரசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பேருவளைத் தொகுதியில் போட்டியிட்டு 9,339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பின்னர் சூலை 1960 தேர்தலில் போட்டியிட்டு 11,197 வாக்குகள் பெற்று தோற்றார்.[4] 1965 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு 18,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] 1970 தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.[6] 1977 தேர்தலில் போட்டியிட்டு 48,883 வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 1977 முதல் 1978 வரை பிரதி சபாநாயகராகவும், 1978 முதல் 1983 வரை சபாநாயகராகவும் பணியாற்றினார். 1983 முதல் 1988 வரை அமைச்சரவை சாராத அமைச்சராகவும், 1988 முதல் 1993 வரை தென் மாகாணசபை ஆளுனராகவும்]] பணியாற்றினார்.
ஏனைய பணிகள்தொகு
பாக்கீர் மாக்கார் அகில இலங்கை முசுலிம் லீக் அமைப்பின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். ஈராக்-இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவராக இறக்கும் வரை இருந்துள்ளார்.
குடும்பம்தொகு
பாக்கீர் மாக்காரின் மகன் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பேருவளை நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "A firm believer in democracies: Deshamanya Alhaj M A Bakeer Markar". Daily News. 10-09-2004. Archived from the original on 2004-09-26. 2015-10-04 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)CS1 maint: unfit url (link) - ↑ Official Website of SL Parliament
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2009-12-09 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-10-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2015-09-24 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-10-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2015-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-10-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2009-12-09 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-10-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2011-07-17 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-10-04 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்தொகு
- Website of the Bakeer Markar Centre for National Unity
- Sunday Observer: [1] பரணிடப்பட்டது 2005-02-05 at the வந்தவழி இயந்திரம்
- Sunday Times [2]
- Bakeer Markar Al Haj M A பரணிடப்பட்டது 2013-06-16 at Archive.today