விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 27
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 27 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- 1933 – பெர்லினில் செருமனியின் ரெய்ஸ்டாக் (படம்) என்ற நாடாளுமன்றக் கட்டடம் இடச்சு கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- 1943 – பெர்லினில், நாட்சிகளின் இரகசியக் காவல்துறையினர் செருமனியப் பெண்களை மணந்த 1,800 யூத இன ஆண்களைக் கைது செய்தனர்.
- 1951 – ஐக்கிய அமெரிக்காவில் அரசுத்தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
- 1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவைத் விடுதலையானதாக அறிவித்தார்.
- 2002 – கோத்ரா தொடருந்து எரிப்பு: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முசுலிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 2007 – மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
சுஜாதா (இ. 2008) · வேலூர் ஜி. ராமபத்ரன் (இ. 2012) · ந. பாலேஸ்வரி (இ. 2014)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 26 – பெப்பிரவரி 28 – பெப்பிரவரி 29