விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 14
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 14 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- 1779 – அவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார்.
- 1918 – சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது.
- 1929 – சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1961 – 103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1989 – யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் பேரழிவிற்காக (படம்) இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
- 1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
- 2005 – கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் ஆரம்பிக்கப்பட்டது.
பி. சாம்பமூர்த்தி (பி. 1901) · இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி (பி. 1914) · அ. ந. கந்தசாமி (இ. 1968)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 13 – பெப்பிரவரி 15 – பெப்பிரவரி 16