விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 4
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெப்ரவரி 4: உலகப் புற்றுநோய் நாள்
- 1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத்தலைவராக சியார்ச் வாசிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1797 – எக்குவதோரில் நில நடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில், ஜோசப் ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் உக்ரேனில் யால்ட்டா மாநாட்டில் (படம்) சந்தித்தனர்.
- 1948 – இலங்கை பிரித்தானியப் பொதுநலவாயத்தின் கீழ் இலங்கை மேலாட்சி என்ற பெயரில் விடுதலை அடைந்தது.
- 1957 – இலங்கை விடுதலை நாளை திருகோணமலையில் துக்க நாளாக அனுட்டித்த தமிழ் மக்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் திருமலை நடராசன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
- 1976 – குவாத்தமாலா மற்றும் ஒண்டுராசு நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
- 2004 – மார்க் சக்கர்பெர்க் முகநூல் என்ற சமூக வலைத்தளத்தை ஆரம்பித்தார்.
வீரமாமுனிவர் (இ. 1747) · பெரி. சுந்தரம் (பி. 1957) · மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை (இ. 1985)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 3 – பெப்பிரவரி 5 – பெப்பிரவரி 6