விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 1
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- 1814 – பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
- 1832 – ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி சேவை இலங்கையில் கண்டியில் ஆரம்பமாகியது.
- 1918 – உருசியா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
- 1946 – நோர்வேயின் திறிகுவே இலீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1979 – 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி தெகுரான் திரும்பினார்.
- 1992 – போபால் பேரழிவு: யூனியன் கார்பைட்டின் முன்னாள் முதன்மைச் செயலர் வாரன் அண்டர்சன் ஒரு தலைமறைவான குற்றவாளி என போபால் நீதிமன்றம் அறிவித்தது.
- 2003 – கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (படம்) உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
பம்மல் சம்பந்த முதலியார் (பி. 1873) · மீனாட்சிசுந்தரம் பிள்ளை (இ. 1876) · ஏ. நாராயணன் (இ. 1939)
அண்மைய நாட்கள்: சனவரி 31 – பெப்பிரவரி 2 – பெப்பிரவரி 3