விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 27
- 1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது.
- 1922 – தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
- 1958 – பாக்கித்தானின் முதலாவது அரசுத்தலைவர் இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இராணுவத் தலைவர் அயூப் கான் (படம்) ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1990 – வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முசுலிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
- 1999 – ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 2017 – காத்தலோனியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
இழான் பில்லியொசா (இ. 1982)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 26 – அக்டோபர் 28 – அக்டோபர் 29