விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 14
ஏப்பிரல் 14: உலக சித்தர்கள் நாள் · அம்பேத்கர் ஜெயந்தி
- 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார்.
- 1699 – நானக்சாகி நாட்காட்டியின் படி, கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குரு கோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
- 1828 – நோவா வெப்சுடர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
- 1865 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் (படம்) ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார். லிங்கன் அடுத்த நாள் இறந்தார்.
- 1894 – தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் என்ற ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
- 1958 – லைக்கா என்ற நாயை விண்ணுக்குக் கொண்டு சென்ற சோவியத்தின் இசுப்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்றுப்பாதையில் இருந்து வீழ்ந்தது.
- 1988 – சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
எம். ஆர். ராதா (பி. 1907) · இரமண மகரிசி (இ. 1950) · பி. பி. ஸ்ரீனிவாஸ் (இ. 2013)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 13 – ஏப்பிரல் 15 – ஏப்பிரல் 16