ஏப்ரல் 21
நாள்
(ஏப்பிரல் 21 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஏப்ரல் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMXXIV |
ஏப்ரல் 21 (April 21) கிரிகோரியன் ஆண்டின் 111 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 112 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 254 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 753 – ரொமூலசு உரோமை நகரை அமைத்தார். (பாரம்பரிய நாள்)
- 900 – லகுனா செப்பேடு (பிலிப்பீன்சின் ஆரம்பகால ஆவணம்): நம்வாரன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்க, அமைச்சர் ஜெயதேவாவின் பிரதிநிதியாக தொண்டோ இராச்சியத்தின் முதன்மைத் தளபதி கட்டளை வெளியிட்டான்.
- 1506 – மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1509 – ஏழாம் என்றியின் இறப்புக்குப் பின்னர் அவரது மகன் எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார்.
- 1526 – பானிப்பட் முதலாவது போர்: தில்லியின் கடைசி லௌதி சுல்தான் இப்ராகிம் லோடிக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் நடந்த போரில் இப்ராகிம் கொல்லப்பட்டார். பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார்.
- 1782 – இரத்தினகோசின் நகரம் (இன்றைய பேங்காக்) முதலாம் இராமா மன்னரால் அமைக்கப்பட்டது.
- 1792 – பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய திராடென்டசு தூக்கிலிடப்பட்டார்.
- 1802 – அப்துல்-அசீசு பின் முகம்மது தலைமையிலான 12,000 வகாபிகள் கர்பலா என்ற இன்றைய ஈராக்கிய நகரை முற்றுகையிட்டு, அங்கிருந்த 3,000 மக்களைக் கொன்று நகரைச் சூரையாடினர்.
- 1821 – பென்டெர்லி அலி பாசா உதுமானியப் பேரரசின் பிரதமராகப் பதவியேற்று கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தார். இவர் ஒன்பது நாட்கள் மட்டுமே இப்பதவியில் நீடித்தார், பின்னர் இவர் நாடு கடத்தப்பட்டார்.
- 1856 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் எட்டு-மணி நேர வேலையைக் கோரி கட்டடத் தொழிலாளிகள் நாடாளுமன்றத்திற்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றார்கள்.
- 1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படை கியூபாவின் துறைமுகங்கள் மீது முற்றுகையிட்டது. அமெரிக்க சட்டமன்றம் ஏப்ரல் 25 இல் போர்ப் பிரகடனம் அறிவித்திருந்தாலும், போர் நிலை இந்நாளில் இருந்தே ஆரம்பித்தது.
- 1926 – நான்கு சியா இமாம்களின் கல்லறைகள் அடங்கிய அல்-பாக்கி இடுகாடு (இன்றைய சவூதி அரேபியாவில்) வகாபுகளினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
- 1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
- 1960 – பிரசிலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
- 1964 – டிரான்சிட்-5பிஎன் என்ற செயற்கைக்கோள் சுற்றுவட்டத்தில் இணைய முடியாமல் வளி மண்டலத்தினுள் மீளத் திரும்பியது. 0.95கிகி கதிரியக்க புளுட்டோனியம் பரவலாக சிதறியது.
- 1966 – ராஸ்தஃபாரை: எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி ஜமேக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
- 1967 – கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜியோசு பப்படபவுலோசு இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
- 1975 – வியட்நாம் போர்: தென் வியட்நாம் அரசுத் தலைவர் நியூவென் வான் தியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.
- 1987 – இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989 – 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்: பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
- 1993 – பொலிவியாவில் முன்னாள் அரசுத்தலைவர் லூயிசு கார்சியா மேசா என்பவருக்கு கொலை, ஊழல், அரசமைப்பு மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
- 2004 – ஈரானில் பசுரா நகரில் ஐந்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 74 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.
- 2012 – நெதர்லாந்தில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 116 பேர் காயமடைந்தனர்.
- 2019 – இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: கொழும்பு உட்படப் பல இடங்களில் உயிர்ப்பு ஞாயிறு நாளன்று மூன்று கிறித்தவத் தேவாலயங்கள், நான்கு உணவகங்களில் இசுலாமிய அரசு ஆதரவில் தேசிய தவ்கீத் ஜமாத் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1651 – யோசப் வாசு, இலங்கை கத்தோலிக்க மதகுரு, மதப்பரப்புனர், புனிதர் (இ. 1711)
- 1864 – மக்ஸ் வெபர், செருமானிய பொருளியலாளர், சமூகவியலாளர் (இ. 1920)
- 1917 – வசுமதி இராமசாமி, தமிழக எழுத்தாளர் (இ. 2004)
- 1925 – வாண்டுமாமா, தமிழக எழுத்தாளர் (இ. 2014)
- 1925 – கண்டதேவி எஸ். அழகிரிசாமி, தமிழக வயலின் இசைக்கலைஞர் (இ. 2000)
- 1926 – இரண்டாம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி (இ. 2022)
- 1937 – ஆற்காடு வீராசாமி, தமிழக அரசியல்வாதி
- 1945 – சீனிவாசராகவன் வெங்கடராகவன், இந்தியத் துடுப்பாளர்
- 1956 – மங்கள சமரவீர, இலங்கை அரசியல்வாதி
இறப்புகள்
- 1109 – கேன்டர்பரி நகரின் அன்சலேம், இத்தாலிய-ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1033)
- 1142 – பியேர் அபேலார்டு, பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1079)
- 1526 – இப்ராகிம் லோடி, தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர்
- 1910 – மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835)
- 1938 – முகமது இக்பால், இந்திய-பாக்கித்தானிய மெய்யியலாளர், கவிஞர் (பி. 1877)
- 1946 – ஜான் மேனார்ட் கெயின்ஸ், ஆங்கிலேயப் பொருளியலாளர், மெய்யியலாளர் (பி. 1883)
- 1952 – ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், பிரித்தானிய அரசியல்வாதி (பி. 1889)
- 1964 – பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891)
- 1978 – டி. ஆர். மகாலிங்கம், தென்னிந்தியத் திரைப்பட, நாடக நடிகர், பாடகர் (பி. 1923)
- 2006 – முல்லையூரான், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1955)
- 2013 – சகுந்தலா தேவி, இந்தியக் கணிதவியலாளர் (பி. 1929)
சிறப்பு நாள்
- தேசிய தேயிலை நாள் (ஐக்கிய இராச்சியம்)
- தேசிய மர நடுகை நாள் (கென்யா)
- தேசிய குடிமை பணிகள் தினம் (இந்தியா)