விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 30
ஏப்பிரல் 30: வியட்நாம் ஒருங்கிணைப்பு நாள்
- 1492 – எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது.
- 1803 – லூசியானா வாங்கல்: ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.
- 1897 – ஜெ. ஜெ. தாம்சன் அணுவடித்துகளாக இலத்திரனைக் கண்டுபிடித்ததாக இலண்டனில் அறிவித்தார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் (படம்) தனது மனைவி இவாவுடன் பியூரர் பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் பெர்லினில் செருமனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
- 1975 – கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றின. தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
- 1993 – உலகளாவிய வலையின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.
- 2008 – உருசியாவின் கடைசிப் பேரரசர் இரண்டாம் நிக்கொலாசின் பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
கா. சு. பிள்ளை (இ. 1945) · லோங் அடிகள் (இ. 1961) · நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் (இ. 2001)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 29 – மே 1 – மே 2